உசனைப் பிறப்பிடமாகவும், Switzerland ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த றாகினி என்று அழைக்கப்படும் திருமதி பாக்கியதேவி சிவபாதம் அவர்கள் April 4, 2024 அன்று இயற்கை எய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் - நல்லதங்கம் தம்பதியினரின் பாசமிகு மகளும்,
சிவபாதம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற மல்லிகாதேவி (றஞ்சினி) மற்றும் ஜெயதேவன், நகுலாதேவி, சத்தியதேவி, ஜெயதீபா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
டிலக்சி, சஹான் ஆகியோரின் பாசமிகு தாயாருமாவார்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திப்பதோடு, அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.