அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Monday, April 29, 2024

"லய பரதம்"

பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி பெருமையுடன் வழங்கும் "லய பரதம்" நடன நிகழ்வு May 12th, 2024, ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பாக இடம்பெறவுள்ளது. 1785 Finch Ave W, Toronto, ON M3N 1M6, Canada என்ற முகவரியில் அமைந்திருக்கும் York Woods Library Theater இல் சரியாக மாலை 4 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமாகும். சிற்றுண்டிகள் மாலை 3 மணியிலிருந்து 4 மணி வரை வழங்கப்படும்.
இந்த நிகழ்வு பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி அதிபர், பரத கலா வித்தகர், நாட்டிய பூரணா, திருமதி சியாமா தயாளன் அவர்களின் தயாரிப்பு, நெறியாள்கையில் இடம்பெற உள்ளது.
நாட்டியக்கலைஞர்களின் அதீத முயற்சியால் ஒரு பிரமாண்டமான நிகழ்வாக இது அமைகின்றது.
பிரபலமான பக்கவாத்தியக் கலைஞர்களின் பங்களிப்பு நிகழ்வை மேலும் சிறப்பிக்கும்.
இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு திருமதி சியாமா தயாளன் அவர்களும் லய பரதம் கலைஞர்களும் உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றனர்.
இந்த நடன விருந்தில் கலந்து மகிழுமாறு உசன் மக்களை வேண்டிநிற்கும் அதே வேளை
"லய பரதம்" சிறப்பாக நடைபெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வாழ்த்துகின்றது.

Vanakkam,

Bhaarati School of Indian Classical Dance is delighted to invite you to LAYA BHARATHAM, on May 12th, 2024. The Laya Bharatham team would be honoured by your presence on the day of the performance.

Our dancers have put in a tremendous amount of effort to present this event.

Date and Venue:
Sunday, May 12th, 2024 at 4:00pm
(Refreshments are served from 3:00 pm to 4:00)
York Woods Library Theater
1785 Finch Ave W, Toronto, ON M3N 1M6

United People Association of Usan in Canada extends it's wishes to the talented artists and their guru Srimathi Shiyama Thayaalan and invites all Usan people to enjoy this showcase of dance.



Friday, April 26, 2024

துயர் பகிர்வு - சிவஸ்ரீ ஐயாத்துரை குருக்கள் அரிகரக் குருக்கள்

யாழ். கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், Brampton, ON, கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஸ்ரீ ஐயாத்துரை குருக்கள் அரிகரக் குருக்கள் அவர்கள் 26-04-2024 அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் உசன் கந்தசாமி கோவில் பிரதம குருவாகவிருந்த காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி குருக்கள் - சங்கரி அம்மா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சிவஸ்ரீ முத்துக்குமாரசாமி ஐயர் ஐயாத்துரை குருக்கள் ஸ்ரீமதி சகுந்தலாதேவி (சந்திரி அம்மா) தம்பதிகளின் மகனும்,
காலஞ்சென்ற சிவஸ்ரீ சிவசுந்தரசர்மா சுந்தரராச குருக்கள் மற்றும் ஸ்ரீமதி கல்யாணி அவர்களின் மருமகனும்,
ஸ்ரீமதி ஷர்மிளாவின் ஆருயிர்க் கணவரும்,
அபிஷா, அகஸ்தியா, அபூர்வா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பிரம்மஸ்ரீ அனந்த சர்மா, பிரம்மஸ்ரீ கோபி சர்மா, மற்றும் பிரம்மஸ்ரீ ஆதவன் சர்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28-04-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் 9 மணி வரை 8911 Woodbine Avenue, Markham, ON ல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home இல் பார்வைக்கு வைக்கப்பட்டு, மறுநாள் 29-04-2024 திங்கட்கிழமை காலை 11:30 மணி முதல் பார்வைக்கு வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் நடைபெற்று மாலை 4:00 மணியளவில் 1591 Elgin Mills East, Richmond Hill, ON இல் அமைந்துள்ள Elgin Mills Cemetery இல் தகனம் செய்யப்படும்.
அரிகரக் குருக்கள் அவர்களின் ஆன்மா இறைவன் திருப்பாதங்களைச் சேர உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திப்பதோடு, அன்னாரின் மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.


Thursday, April 4, 2024

துயர் பகிர்வு - பாக்கியதேவி (றாகினி) சிவபாதம்

உசனைப் பிறப்பிடமாகவும், Switzerland ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த றாகினி என்று அழைக்கப்படும் திருமதி பாக்கியதேவி சிவபாதம் அவர்கள் April 4, 2024 அன்று இயற்கை எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் - நல்லதங்கம் தம்பதியினரின் பாசமிகு மகளும்,

சிவபாதம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற மல்லிகாதேவி (றஞ்சினி) மற்றும் ஜெயதேவன், நகுலாதேவி,  சத்தியதேவி,  ஜெயதீபா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

டிலக்சி, சஹான் ஆகியோரின் பாசமிகு தாயாருமாவார்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திப்பதோடு, அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.