உசன் இராமநாதன் மகாவித்தியாலயத்தின் முன்னாள் அதிபரும், ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளரும், உசன் பற்றாளரும் ஆகிய மதிப்புக்குரிய க. பேரம்பலம் அவர்கள் March 16, 2024, சனிக்கிழமையன்று இயற்கையெய்தினார்.
அன்னார் முகமாலையைப் பிறப்பிடமாகவும், உசன் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்தார்.
அன்னாரின் இறுதி நிகழ்வு March 17, 2024, ஞாயிறுக்கிழமை மாலை 3 மணியளவில் திருநெல்வேலியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம்செய்யப்படும்.
இவ்வறிவித்தலை அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
இறுதி நிகழ்வுகளை https://www.youtube.com/live/a6kHYz9eaZk?si=kBYOpj-VuXn6VMNL என்ற தளத்தில் நேரலையாகப் பார்த்து அஞ்சலி செலுத்தலாம்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திப்பதோடு, குடும்பத்தினருக்கு அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.