அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Tuesday, March 26, 2024

உசன் கஜகேணி விநாயகர் கோவில் மகா கும்பாபிசேகம் - நேரலை

திருவருள்மிகு ஸ்ரீ கஜகேணி விநாயகர் திருக்கோயில் புனராவர்த்தன பிரதிஸ்டா மஹகும்பாபிஷேக விஞ்ஞாபனம் - நேரலையாக இந்தத் தளத்தில் பார்த்து அருள் பெறலாம்.

https://youtube.com/live/IA4ZbxZN3S4?feature=share

காலம்: புதன்கிழமை, March 27, 2024, காலை 6 மணி IST (இலங்கை); செவ்வாய்க்கிழமை, March 26, 2024 மலை 8:30 மணி EDT (Toronto).


Saturday, March 16, 2024

துயர் பகிர்வு - கந்தையா பேரம்பலம்

உசன் இராமநாதன் மகாவித்தியாலயத்தின் முன்னாள் அதிபரும், ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளரும், உசன் பற்றாளரும் ஆகிய மதிப்புக்குரிய க. பேரம்பலம் அவர்கள் March 16, 2024, சனிக்கிழமையன்று இயற்கையெய்தினார்.
அன்னார் முகமாலையைப் பிறப்பிடமாகவும், உசன் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்தார்.
"வளம் கொழிக்க உளம் செழிக்கும் உசன் வரலாறு" என்ற உசன் குறித்த முதலாவது நூலின் ஆசிரியரும் இவரே.
அன்னாரின் இறுதி நிகழ்வு March 17, 2024, ஞாயிறுக்கிழமை மாலை 3 மணியளவில் திருநெல்வேலியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம்செய்யப்படும்.
இவ்வறிவித்தலை அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
இறுதி நிகழ்வுகளை https://www.youtube.com/live/a6kHYz9eaZk?si=kBYOpj-VuXn6VMNL என்ற தளத்தில் நேரலையாகப் பார்த்து அஞ்சலி செலுத்தலாம்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திப்பதோடு, குடும்பத்தினருக்கு அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.


Thursday, March 14, 2024

துயர் பகிர்வு - சீதாலக்சுமி சின்னத்துரை


நயினாதீவைப் பிறப்பிடமாகவும், உசன், கொழும்பு மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி சீதாலக்சுமி சின்னத்துரை அவர்கள் March 11, 2024 திங்கட்கிழமையன்று இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற (Police) சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகுமார், நளினி, சந்திரகுமார் (USA), ரஜனி (பபி), ராஜ்குமார் (கண்ணன், USA) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ராஜேஸ்வரி, காலஞ்சென்ற பாலச்சந்திரன், சத்தியா (USA), காலஞ்சென்ற ராஜேந்திரன், குணாளினி ஆகியோரின் பாசமிகு மாமியும்,
கோபிநாத், ஜெசிக்கா, ஜஸ்மின்,டிலன், டானியல், ராதை, ரிஷான், ரம்யா, ரொஷான், ரூபன்,பிரவீன், பிரணாவ், ஆகியோரின் செல்லப் பேர்த்தியும்,
Jasper, Elliott, Maaran, Gabi, Amaya ஆகியோரின் பூட்டியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் March 17, 2024, ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணி முதல் 9 மணி வரை 384 Finley Avenue, Ajax, ON, Canada என்ற முகவரியில் அமைந்திருக்கும் Ajax Crematorium & Visitation Centerல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும். மீண்டும் March 18, 2024, திங்கட்கிழமை அன்று அதே முகவரியில் காலை 9 மணி முதல் இறுதிக் கிரியைகள் நிகழ்த்தப்பட்டு பூதவுடல் தகனம் செய்யப்படும்.
அனைவரும் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திப்பதோடு, குடும்பத்தினருக்கு அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.


Friday, March 1, 2024

இறுதி நிகழ்வு - நேரலை


அமரர் சாந்தலக்குமி செல்லத்துரை அவர்களின் இறுதி நிகழ்வை நேரலையில் பார்த்து அஞ்சலி செலுத்தலாம்.
இலங்கை நேரப்படி March 3, 2024, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8 மணிக்கு நேரலை ஆரம்பமாகும்.

https://youtube.com/live/u9mmVOIjV2A?feature=share

நன்றி.