சாந்தலக்குமி செல்லத்துரை (சாந்தா) அவர்கள் இறைவனடி எய்திவிட்டார் என்ற துயரமான தகவலைப் பகிர்ந்துகொள்கிறோம்.
இவர் காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சரவணமுத்து செல்லம்மா தம்பதியரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சரவணை முத்துப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும்,
ஜசிதலா (அவுஸ்திரேலியா), ஜதிகேசன் (இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ராஜாராம் (பொறியாளர், அவுஸ்திரேலியா), சரண்ஜா (இலங்கை வங்கி) ஆகியோரின் அன்பு மாமியும்,
சிறீகாந்தன் (இத்தாலி), நந்தலக்குமி, தனலக்குமி, பத்மகாந்தன் (கனடா), ஜீவகாந்தன், முருகானந்தன் (பொறியாளர், அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.
சாந்தாக்காவின் ஆன்மா சாந்திபெற இறைவனைப் பிரார்த்திக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.