எங்கள் பேரன்புக்கும், மதிப்பிற்குமுரிய திருவாளர் சின்னப்பு கனகசபை ஐயா அவர்கள் இறைவனடி சேர்ந்த தகவலறிந்து உள்ளம் கனக்கிறது. உசன் மண்மேல் பெரும் காதல் கொண்டிருந்த ஐயா அவர்கள் உசன் மண்ணின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் என்பது யாவரும் அறிந்ததே. உசனில் வாழ்ந்தபோதும், புலம் பெயர்ந்து வாழ்ந்த காலத்திலும் உசன் மண்ணின் சமூக, பொருளாதார வளர்ச்சியில் அவரின் பங்களிப்பு அளப்பரியது. உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவில் ஆரம்பகாலத்திலிருந்தே இணைந்து அவர் செய்த சேவைக்கு கைம்மாறு செய்ய முடியாது, அவர் அதை எதிர்பார்த்ததுமில்லை. அளவெட்டியில் பிறந்தாலும் உசனைத் தன் சொந்த ஊராகத் தத்தெடுத்தவர் அவர். அவரின் சேவைக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தலை சாய்த்து நன்றி சொல்கிறது.
இழப்பு என்பது கவலைக்குரியது. ஆனாலும் அது எல்லோருக்கும் வருவது என்ற வகையில் ஐயாவின் மறைவு குறித்துக் கவலைகொள்வதைத் தவிர்த்துக்கொள்ளலாம். ஐயா மகிழ்வான, முழுமையான ஒரு வாழ்வை வாழ்ந்து முடித்திருக்கிறார். அவரின் வாழ்வை ஓர் உதாரணமாகவெடுத்து, அதன்படி வாழ்வதே நாம் அவருக்குச் செய்யும் நன்றிக்கடனாகும்.
எங்கள் கண்கள் பனிக்க, உள்ளம் பேதலிக்க விடைபெற்றுப் போய் வாருங்கள் ஐயா!
ஐயாவின் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் அனைவருக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது. ஐயாவின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா உசன் முருகனைப் பிரார்த்திக்கிறது.
உசன் மக்கள் சார்பில்
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா