அமரர் சாந்தலக்குமி செல்லத்துரை அவர்களின் இறுதிக் கிரியைகள் March 3, 2024, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் 10 மணி வரை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பின் ஈச்சங்காடு இந்து மயானத்துக்கு பூதவுடல் தகனத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.
Thursday, February 29, 2024
Wednesday, February 28, 2024
சாந்தலக்குமி செல்லத்துரை (சாந்தா)
சாந்தலக்குமி செல்லத்துரை (சாந்தா) அவர்கள் இறைவனடி எய்திவிட்டார் என்ற துயரமான தகவலைப் பகிர்ந்துகொள்கிறோம்.
இவர் காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சரவணமுத்து செல்லம்மா தம்பதியரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சரவணை முத்துப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும்,
ஜசிதலா (அவுஸ்திரேலியா), ஜதிகேசன் (இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ராஜாராம் (பொறியாளர், அவுஸ்திரேலியா), சரண்ஜா (இலங்கை வங்கி) ஆகியோரின் அன்பு மாமியும்,
சிறீகாந்தன் (இத்தாலி), நந்தலக்குமி, தனலக்குமி, பத்மகாந்தன் (கனடா), ஜீவகாந்தன், முருகானந்தன் (பொறியாளர், அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.
சாந்தாக்காவின் ஆன்மா சாந்திபெற இறைவனைப் பிரார்த்திக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
President
|
|
Friday, February 16, 2024
இறுதி மரியாதை நிகழ்வு - நேரலை
அமரர் சின்னப்பு கனகசபை அவர்களின் இறுதி மரியாதை நிகழ்வை சனிக்கிழமை, February 17, 2024 அன்று மலை 5:30 மணி முதலும், ஞாயிற்றுக்கிழமை February 18, 2024 அன்று காலை 9 மணி முதலும் இங்கே பார்த்து அஞ்சலி செலுத்தலாம்.
https://app.funerallive.ca/funerals/ACVC-Kanagasabai-Sinnappu-1926-04-03
நன்றி.
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா
President
|
|
Thursday, February 15, 2024
இறுதி வணக்க நிகழ்வு
பெரு மதிப்புக்குரிய அமரர் சின்னப்பு கனகசபை ஐயா அவர்களின் பூதவுடல் இறுதி மரியாதைக்காக சனிக்கிழமை, February 17, 2024 அன்று மாலை 5:30 மணி முதல் 9:30 மணிவரையும், ஞாயிற்றுக்கிழமை, February 18, 2024 அன்று காலை 9 மணி முதல் 10:30 மணிவரையும் 384 Finlay Avenue, Ajax, ON, L1S 2E3 என்ற முகவரியில் அமைந்திருக்கும் Ajax Crematorium and Visitation Centre ல் வைக்கப்படும். பின்னர் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பூதவுடல் அதே இடத்தில் தகனம் செய்யப்படும்.
ஓம் சாந்தி!
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா
President
|
|
Wednesday, February 14, 2024
உள்ளம் கனக்கிறது!
எங்கள் பேரன்புக்கும், மதிப்பிற்குமுரிய திருவாளர் சின்னப்பு கனகசபை ஐயா அவர்கள் இறைவனடி சேர்ந்த தகவலறிந்து உள்ளம் கனக்கிறது. உசன் மண்மேல் பெரும் காதல் கொண்டிருந்த ஐயா அவர்கள் உசன் மண்ணின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் என்பது யாவரும் அறிந்ததே. உசனில் வாழ்ந்தபோதும், புலம் பெயர்ந்து வாழ்ந்த காலத்திலும் உசன் மண்ணின் சமூக, பொருளாதார வளர்ச்சியில் அவரின் பங்களிப்பு அளப்பரியது. உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவில் ஆரம்பகாலத்திலிருந்தே இணைந்து அவர் செய்த சேவைக்கு கைம்மாறு செய்ய முடியாது, அவர் அதை எதிர்பார்த்ததுமில்லை. அளவெட்டியில் பிறந்தாலும் உசனைத் தன் சொந்த ஊராகத் தத்தெடுத்தவர் அவர். அவரின் சேவைக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தலை சாய்த்து நன்றி சொல்கிறது.
இழப்பு என்பது கவலைக்குரியது. ஆனாலும் அது எல்லோருக்கும் வருவது என்ற வகையில் ஐயாவின் மறைவு குறித்துக் கவலைகொள்வதைத் தவிர்த்துக்கொள்ளலாம். ஐயா மகிழ்வான, முழுமையான ஒரு வாழ்வை வாழ்ந்து முடித்திருக்கிறார். அவரின் வாழ்வை ஓர் உதாரணமாகவெடுத்து, அதன்படி வாழ்வதே நாம் அவருக்குச் செய்யும் நன்றிக்கடனாகும்.
எங்கள் கண்கள் பனிக்க, உள்ளம் பேதலிக்க விடைபெற்றுப் போய் வாருங்கள் ஐயா!
ஐயாவின் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் அனைவருக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது. ஐயாவின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா உசன் முருகனைப் பிரார்த்திக்கிறது.
உசன் மக்கள் சார்பில்
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா
President
|
|
Subscribe to:
Posts (Atom)