அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Tuesday, October 22, 2024

துயர் பகிர்வு - சுவாமிநாதர் தங்கராஜா



உசனைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா, லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சுவாமிநாதர் தங்கராஜா அவர்கள் திங்கட்கிழமை, October 21, 2024 அன்று இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற விசுவநாதர் சுவாமிநாதர், தெய்வானைப்பிள்ளை சுவாமிநாதர் (உசன்) தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை விநாசித்தம்பி, பொன்னம்மா விநாசித்தம்பி (சாவகச்சேரி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி தங்கராஜா (தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
பரதன், லக்ஸ்மன், ஸ்ரீகணேஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கரோல், சுமதி, ஷரண்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஹஷீகா, ஜொனதன், ஆரன், டியா, லோகன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான விநாசித்தம்பி, ராஜநாதன், சிவபாதசுந்தரம், புவனேஸ்வரி பேரம்பலம், மற்றும் மகேஸ்வரன் (கனடா), விமலேஸ்வரி கிட்னேஸ்வரன் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பேரம்பலம், சிவகாமிப்பிள்ளை விநாசித்தம்பி, அமிர்தாம்பிகை ராஜநாதன், சரஸ்வதி சிவபாதசுந்தரம் மற்றும் கிருபாதேவி மகேஸ்வரன் (கனடா), கிட்னேஸ்வரன் (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான ராஜநாயகம், தர்மலிங்கம், சதாசிவம், ராமச்சந்திரன், ஜெயலக்ஸ்மி ராஜநாயகம், பவளரட்ணம் (பவளம்), ராமச்சந்திரன் மற்றும் தன்மவரதர் தம்பித்துரை (இலங்கை), ராஜேந்திரன், உமாதேவி தன்மவரதர் (ஜேர்மனி), புஸ்பரட்ணம் (புஸ்பா) தர்மலிங்கம் (பிரித்தானியா), தங்கரட்ணம் (ராணி) சதாசிவம் (இலங்கை) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரருமாவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

Viewing Saturday, October 26, 2024 Between 2 p.m. and 6 p.m. Divinity Funeral Care 209 Kenton Road, Harrow HA3 0HD, UK Ritual Sunday, October 27, 2024 Between 8 a.m. and 10 a.m. Hendon Cemetery & Crematorium North Chapel Holders Hill Road, London NW7 1NB Cremation Sunday, October 27, 2024 Between 10 a.m. and 10:45 a.m. Hendon Cemetery & Crematorium North Chapel Holders Hill Road, London NW7 1NB Lunch Sunday, October 27, 2024 Between 11:30 a.m. and 3 p.m. Hendon Sports Centre (Youth & Community Centre) Algernon Road, London NW4 3TA
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பரதன் (மகன்) - +447956496244
லக்ஸ்மன் (மகன்) - +447956430267
ஸ்ரீகணேஷ் (மகன்) - +447961206287
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திப்பதோடு, அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.





Sunday, September 22, 2024

துயர் பகிர்வு - ஆர்த்தி சுகுணேஸ்வரன்


அமெரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆர்த்தி சுகுணேஸ்வரன் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை, September 22, 2024 அன்று New York இல் காலமானார்.

இவர் சுகுணேஸ்வரன் - சுசீலாதேவி ஆகியோரின் பாசமிகு மகளும்,

பண்டிதர் சரவணமுத்து - சின்னத்தங்கம் மற்றும் ஆசிரியர் சின்னத்துரை - செல்லம்மா ஆகியோரின் அன்பான பேத்தியும்,

வைத்திய கலாநிதி அர்விந்தின் பரிவான சகோதரியும்,

Britta வின் மைத்துனியும்,

சரோஜினிதேவி - இராமநாதர் ஆகியோரின் பெறாமகளும்,

வைத்திய கலாநிதி கணேசானந்தன் - வைத்திய கலாநிதி  தமயந்தி ஆகியோரின் மருமகளும் ஆவார்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கும் அதேவேளை அன்னாரின் மறைவால் துவண்டுபோயிருக்கும் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கிறது.

தகவல்

சரோஜினிதேவி - +1-416-606-6763
இராமநாதர் - +1-416-299-6763


Sunday, August 18, 2024

பரத நாட்டிய அரங்கேற்றம் - மாதுமை பற்குணரஞ்ஜன்


பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி அதிபர், நாட்டிய பூரணா, பரதகலா வித்தகர், நாட்டிய சிரோன்மணி ஸ்ரீமதி சியாமா தயாளன் அவர்களின் மாணவி மாதுமை பற்குணரஞ்ஜன் அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்றம் சனிக்கிழமை, September 7, 2024 அன்று 5183 Sheppard Ave E, Scarborough, ON M1B 5Z5, ON, Canada என்ற முகவரியில் அமைந்திருக்கும் Chinese Cultural Centre of Greater Toronto மண்டபத்தில் இடம்பெற உள்ளது.

மாலை 4:30 மணிக்கு சிற்றுண்டிகள் வழங்கப்படும்.  அரங்கேற்றம் சரியாக மாலை 5:30 மணிக்கு ஆரம்பமாகும்.  

இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு சியாமா தயாளன் அவர்கள் உசன் மக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்.

மாதுமைக்கு  வாழ்த்து கூறும் அதேவேளை இந்த அரங்கேற்றம் சிறப்பாக நடந்தேறி மாதுமை நடன உலகில் பிரகாசிக்க உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வாழ்த்தி நிற்கிறது.  மாதுமையின் குரு சியாமா தயாளன் அவர்களின் கலைச் சேவையையும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பாராட்டுகிறது.

The Bhaarati School of Indian Classical Dance personally invites you to grace your presence at the arangetram of Mathumai Patkunaranjan on September 7th, 2024 at the Chinese Cultural Centre. Mathumai has put a tremendous amount of effort for this performance and is excited to share the next step of her dance journey with you. It would be an honour to have the blessings of your presence on this auspicious day. 

Date and Venue:
Saturday, September 7th, 2024 at 5:30 pm
(Refreshments are served from 4:30 pm to 5:30 pm).
Chinese Cultural Centre of Greater Toronto 
5183 Sheppard Ave E, 
Scarborough, ON M1B 5Z5

United People Association of Usan in Canada wishes Mathumai for a blissful event and her continued success in the future! We also wishes her Guru Shiyama Thayaalan for her methodical teaching producing talented dancers.


Tuesday, May 7, 2024

துயர் பகிர்வு - செல்வி கமலேஸ்வரி வல்லிபுரம்

உசனைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வி கமலேஸ்வரி வல்லிபுரம் அவர்கள் செவ்வாய்க்கிழமை, May 7, 2024 அன்று இறைபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற வல்லிபுரம் - வைரவிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, பரமேஸ்வரி, சிவபாக்கியநாதன், சிவசுந்தரம், நாகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், இராசையா, அன்னபூரணம் மற்றும் தவமணி, சிதம்பரநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் புதன்கிழமை, May 8, 2024 அன்று யாழ் பிரதான வீதியில் உள்ள White House மலர்ச்சாலையில் நடைபெற்று பிற்பகல் 2 மணிக்கு பூதவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
மருமகன் சி. செல்வன்
மருமகன் சி. கேதீஸ்
+94 77 7834 603

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திப்பதோடு, அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.


Monday, April 29, 2024

"லய பரதம்"

பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி பெருமையுடன் வழங்கும் "லய பரதம்" நடன நிகழ்வு May 12th, 2024, ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பாக இடம்பெறவுள்ளது. 1785 Finch Ave W, Toronto, ON M3N 1M6, Canada என்ற முகவரியில் அமைந்திருக்கும் York Woods Library Theater இல் சரியாக மாலை 4 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமாகும். சிற்றுண்டிகள் மாலை 3 மணியிலிருந்து 4 மணி வரை வழங்கப்படும்.
இந்த நிகழ்வு பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி அதிபர், பரத கலா வித்தகர், நாட்டிய பூரணா, திருமதி சியாமா தயாளன் அவர்களின் தயாரிப்பு, நெறியாள்கையில் இடம்பெற உள்ளது.
நாட்டியக்கலைஞர்களின் அதீத முயற்சியால் ஒரு பிரமாண்டமான நிகழ்வாக இது அமைகின்றது.
பிரபலமான பக்கவாத்தியக் கலைஞர்களின் பங்களிப்பு நிகழ்வை மேலும் சிறப்பிக்கும்.
இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு திருமதி சியாமா தயாளன் அவர்களும் லய பரதம் கலைஞர்களும் உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றனர்.
இந்த நடன விருந்தில் கலந்து மகிழுமாறு உசன் மக்களை வேண்டிநிற்கும் அதே வேளை
"லய பரதம்" சிறப்பாக நடைபெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வாழ்த்துகின்றது.

Vanakkam,

Bhaarati School of Indian Classical Dance is delighted to invite you to LAYA BHARATHAM, on May 12th, 2024. The Laya Bharatham team would be honoured by your presence on the day of the performance.

Our dancers have put in a tremendous amount of effort to present this event.

Date and Venue:
Sunday, May 12th, 2024 at 4:00pm
(Refreshments are served from 3:00 pm to 4:00)
York Woods Library Theater
1785 Finch Ave W, Toronto, ON M3N 1M6

United People Association of Usan in Canada extends it's wishes to the talented artists and their guru Srimathi Shiyama Thayaalan and invites all Usan people to enjoy this showcase of dance.



Friday, April 26, 2024

துயர் பகிர்வு - சிவஸ்ரீ ஐயாத்துரை குருக்கள் அரிகரக் குருக்கள்

யாழ். கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், Brampton, ON, கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஸ்ரீ ஐயாத்துரை குருக்கள் அரிகரக் குருக்கள் அவர்கள் 26-04-2024 அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் உசன் கந்தசாமி கோவில் பிரதம குருவாகவிருந்த காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி குருக்கள் - சங்கரி அம்மா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சிவஸ்ரீ முத்துக்குமாரசாமி ஐயர் ஐயாத்துரை குருக்கள் ஸ்ரீமதி சகுந்தலாதேவி (சந்திரி அம்மா) தம்பதிகளின் மகனும்,
காலஞ்சென்ற சிவஸ்ரீ சிவசுந்தரசர்மா சுந்தரராச குருக்கள் மற்றும் ஸ்ரீமதி கல்யாணி அவர்களின் மருமகனும்,
ஸ்ரீமதி ஷர்மிளாவின் ஆருயிர்க் கணவரும்,
அபிஷா, அகஸ்தியா, அபூர்வா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பிரம்மஸ்ரீ அனந்த சர்மா, பிரம்மஸ்ரீ கோபி சர்மா, மற்றும் பிரம்மஸ்ரீ ஆதவன் சர்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28-04-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் 9 மணி வரை 8911 Woodbine Avenue, Markham, ON ல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home இல் பார்வைக்கு வைக்கப்பட்டு, மறுநாள் 29-04-2024 திங்கட்கிழமை காலை 11:30 மணி முதல் பார்வைக்கு வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் நடைபெற்று மாலை 4:00 மணியளவில் 1591 Elgin Mills East, Richmond Hill, ON இல் அமைந்துள்ள Elgin Mills Cemetery இல் தகனம் செய்யப்படும்.
அரிகரக் குருக்கள் அவர்களின் ஆன்மா இறைவன் திருப்பாதங்களைச் சேர உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திப்பதோடு, அன்னாரின் மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.


Thursday, April 4, 2024

துயர் பகிர்வு - பாக்கியதேவி (றாகினி) சிவபாதம்

உசனைப் பிறப்பிடமாகவும், Switzerland ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த றாகினி என்று அழைக்கப்படும் திருமதி பாக்கியதேவி சிவபாதம் அவர்கள் April 4, 2024 அன்று இயற்கை எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் - நல்லதங்கம் தம்பதியினரின் பாசமிகு மகளும்,

சிவபாதம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற மல்லிகாதேவி (றஞ்சினி) மற்றும் ஜெயதேவன், நகுலாதேவி,  சத்தியதேவி,  ஜெயதீபா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

டிலக்சி, சஹான் ஆகியோரின் பாசமிகு தாயாருமாவார்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திப்பதோடு, அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.


Tuesday, March 26, 2024

உசன் கஜகேணி விநாயகர் கோவில் மகா கும்பாபிசேகம் - நேரலை

திருவருள்மிகு ஸ்ரீ கஜகேணி விநாயகர் திருக்கோயில் புனராவர்த்தன பிரதிஸ்டா மஹகும்பாபிஷேக விஞ்ஞாபனம் - நேரலையாக இந்தத் தளத்தில் பார்த்து அருள் பெறலாம்.

https://youtube.com/live/IA4ZbxZN3S4?feature=share

காலம்: புதன்கிழமை, March 27, 2024, காலை 6 மணி IST (இலங்கை); செவ்வாய்க்கிழமை, March 26, 2024 மலை 8:30 மணி EDT (Toronto).


Saturday, March 16, 2024

துயர் பகிர்வு - கந்தையா பேரம்பலம்

உசன் இராமநாதன் மகாவித்தியாலயத்தின் முன்னாள் அதிபரும், ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளரும், உசன் பற்றாளரும் ஆகிய மதிப்புக்குரிய க. பேரம்பலம் அவர்கள் March 16, 2024, சனிக்கிழமையன்று இயற்கையெய்தினார்.
அன்னார் முகமாலையைப் பிறப்பிடமாகவும், உசன் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்தார்.
"வளம் கொழிக்க உளம் செழிக்கும் உசன் வரலாறு" என்ற உசன் குறித்த முதலாவது நூலின் ஆசிரியரும் இவரே.
அன்னாரின் இறுதி நிகழ்வு March 17, 2024, ஞாயிறுக்கிழமை மாலை 3 மணியளவில் திருநெல்வேலியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம்செய்யப்படும்.
இவ்வறிவித்தலை அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
இறுதி நிகழ்வுகளை https://www.youtube.com/live/a6kHYz9eaZk?si=kBYOpj-VuXn6VMNL என்ற தளத்தில் நேரலையாகப் பார்த்து அஞ்சலி செலுத்தலாம்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திப்பதோடு, குடும்பத்தினருக்கு அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.


Thursday, March 14, 2024

துயர் பகிர்வு - சீதாலக்சுமி சின்னத்துரை


நயினாதீவைப் பிறப்பிடமாகவும், உசன், கொழும்பு மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி சீதாலக்சுமி சின்னத்துரை அவர்கள் March 11, 2024 திங்கட்கிழமையன்று இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற (Police) சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகுமார், நளினி, சந்திரகுமார் (USA), ரஜனி (பபி), ராஜ்குமார் (கண்ணன், USA) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ராஜேஸ்வரி, காலஞ்சென்ற பாலச்சந்திரன், சத்தியா (USA), காலஞ்சென்ற ராஜேந்திரன், குணாளினி ஆகியோரின் பாசமிகு மாமியும்,
கோபிநாத், ஜெசிக்கா, ஜஸ்மின்,டிலன், டானியல், ராதை, ரிஷான், ரம்யா, ரொஷான், ரூபன்,பிரவீன், பிரணாவ், ஆகியோரின் செல்லப் பேர்த்தியும்,
Jasper, Elliott, Maaran, Gabi, Amaya ஆகியோரின் பூட்டியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் March 17, 2024, ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணி முதல் 9 மணி வரை 384 Finley Avenue, Ajax, ON, Canada என்ற முகவரியில் அமைந்திருக்கும் Ajax Crematorium & Visitation Centerல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும். மீண்டும் March 18, 2024, திங்கட்கிழமை அன்று அதே முகவரியில் காலை 9 மணி முதல் இறுதிக் கிரியைகள் நிகழ்த்தப்பட்டு பூதவுடல் தகனம் செய்யப்படும்.
அனைவரும் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திப்பதோடு, குடும்பத்தினருக்கு அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.


Friday, March 1, 2024

இறுதி நிகழ்வு - நேரலை


அமரர் சாந்தலக்குமி செல்லத்துரை அவர்களின் இறுதி நிகழ்வை நேரலையில் பார்த்து அஞ்சலி செலுத்தலாம்.
இலங்கை நேரப்படி March 3, 2024, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8 மணிக்கு நேரலை ஆரம்பமாகும்.

https://youtube.com/live/u9mmVOIjV2A?feature=share

நன்றி.


Thursday, February 29, 2024

அமரர் சாந்தலக்குமி செல்லத்துரை - இறுதிக் கிரியை

அமரர் சாந்தலக்குமி செல்லத்துரை அவர்களின் இறுதிக் கிரியைகள் March 3, 2024, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் 10 மணி வரை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பின் ஈச்சங்காடு இந்து மயானத்துக்கு பூதவுடல் தகனத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.




Wednesday, February 28, 2024

சாந்தலக்குமி செல்லத்துரை (சாந்தா)


சாந்தலக்குமி செல்லத்துரை (சாந்தா) அவர்கள் இறைவனடி எய்திவிட்டார் என்ற துயரமான தகவலைப் பகிர்ந்துகொள்கிறோம்.

இவர் காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சரவணமுத்து செல்லம்மா தம்பதியரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சரவணை முத்துப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும்,

ஜசிதலா (அவுஸ்திரேலியா), ஜதிகேசன் (இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ராஜாராம் (பொறியாளர், அவுஸ்திரேலியா), சரண்ஜா (இலங்கை வங்கி) ஆகியோரின் அன்பு மாமியும்,

சிறீகாந்தன் (இத்தாலி), நந்தலக்குமி, தனலக்குமி, பத்மகாந்தன் (கனடா), ஜீவகாந்தன், முருகானந்தன் (பொறியாளர், அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.

சாந்தாக்காவின் ஆன்மா சாந்திபெற இறைவனைப் பிரார்த்திக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.



Friday, February 16, 2024

இறுதி மரியாதை நிகழ்வு - நேரலை


அமரர் சின்னப்பு கனகசபை அவர்களின் இறுதி மரியாதை நிகழ்வை சனிக்கிழமை, February 17, 2024 அன்று மலை 5:30 மணி முதலும், ஞாயிற்றுக்கிழமை February 18, 2024 அன்று காலை 9 மணி முதலும் இங்கே  பார்த்து அஞ்சலி செலுத்தலாம்.

https://app.funerallive.ca/funerals/ACVC-Kanagasabai-Sinnappu-1926-04-03

நன்றி.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா



Thursday, February 15, 2024

இறுதி வணக்க நிகழ்வு

பெரு மதிப்புக்குரிய அமரர் சின்னப்பு கனகசபை ஐயா அவர்களின் பூதவுடல் இறுதி மரியாதைக்காக சனிக்கிழமை, February 17, 2024 அன்று மாலை 5:30 மணி முதல் 9:30 மணிவரையும், ஞாயிற்றுக்கிழமை, February 18, 2024 அன்று காலை 9 மணி முதல் 10:30 மணிவரையும் 384 Finlay Avenue, Ajax, ON, L1S 2E3 என்ற முகவரியில் அமைந்திருக்கும் Ajax Crematorium and Visitation Centre ல் வைக்கப்படும். பின்னர் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பூதவுடல் அதே இடத்தில் தகனம் செய்யப்படும்.
வாழ்வாங்கு வாழ்ந்து இப்பூவுலகை விட்டுச் சென்ற ஐயாவுக்கு இறுதி மரியாதை செலுத்துவோம், வாரீர்!
ஓம் சாந்தி!
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா


Wednesday, February 14, 2024

உள்ளம் கனக்கிறது!


எங்கள் பேரன்புக்கும், மதிப்பிற்குமுரிய திருவாளர் சின்னப்பு கனகசபை ஐயா அவர்கள் இறைவனடி சேர்ந்த தகவலறிந்து உள்ளம் கனக்கிறது.  உசன் மண்மேல் பெரும் காதல் கொண்டிருந்த ஐயா அவர்கள் உசன் மண்ணின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் என்பது யாவரும் அறிந்ததே. உசனில் வாழ்ந்தபோதும், புலம் பெயர்ந்து வாழ்ந்த காலத்திலும் உசன் மண்ணின் சமூக, பொருளாதார வளர்ச்சியில் அவரின் பங்களிப்பு அளப்பரியது. உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவில் ஆரம்பகாலத்திலிருந்தே இணைந்து அவர் செய்த சேவைக்கு கைம்மாறு செய்ய முடியாது, அவர் அதை எதிர்பார்த்ததுமில்லை. அளவெட்டியில் பிறந்தாலும் உசனைத் தன் சொந்த ஊராகத் தத்தெடுத்தவர் அவர்.  அவரின் சேவைக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தலை சாய்த்து நன்றி சொல்கிறது.

இழப்பு என்பது கவலைக்குரியது.  ஆனாலும் அது எல்லோருக்கும் வருவது என்ற வகையில் ஐயாவின் மறைவு குறித்துக் கவலைகொள்வதைத் தவிர்த்துக்கொள்ளலாம்.  ஐயா மகிழ்வான, முழுமையான ஒரு வாழ்வை வாழ்ந்து முடித்திருக்கிறார். அவரின் வாழ்வை ஓர் உதாரணமாகவெடுத்து, அதன்படி வாழ்வதே நாம் அவருக்குச் செய்யும் நன்றிக்கடனாகும்.

எங்கள் கண்கள் பனிக்க, உள்ளம் பேதலிக்க விடைபெற்றுப் போய் வாருங்கள் ஐயா!

ஐயாவின் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் அனைவருக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.  ஐயாவின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா உசன் முருகனைப் பிரார்த்திக்கிறது.

உசன் மக்கள் சார்பில்
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா


Sunday, January 14, 2024


உசனைச் சேர்ந்த சிதம்பரப்பிள்ளை வரதகுமார் (வரதன்) அவர்களின் மாமனார் முருகேசு பரமானந்தம் அவர்களின் துயர் பகிர்வு.

யாழ்ப்பாணம், கோண்டாவில் அன்னங்கை வீரபத்திரர் கோவில் கலைவாணி வீதியைப் பிறப்பிடமாகவும், வன்னிச்சி கோவிலடி வல்வெட்டியை நீண்டகால வசிப்பிடமாகக் கொண்டவரும், தற்போது கனடாவில்  வசித்து வந்தவருமாகிய முருகேசு பரமானந்தம் அவர்கள் 13/01/2024 இரவு கனடாவில்  சிவபதமடைந்துவிட்டார் என்பதனை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம். 

அன்னார் லட்சுமிதேவி (தேவி) அவர்களின் பாசமிகு கணவரும்,

காலம் சென்றவர்களான முருகேசு கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலம் சென்ற வேலுப்பிள்ளை மற்றும் பூபதிதேவி ஆகியேரின் அன்பு மருமகனும்,

காலம் சென்றவர்களான அன்னபூரணம், தங்கலட்சுமி, மலர்மணி, தாமோதரம்பிள்ளை (மகேந்திரம்), பாலசிங்கம் (தவராசா), சின்னராசா (சின்னகிளி) மற்றும், நடேசபிள்ளை (நடேஸ்) ஆகியேரின் அன்புச்  சகோதரரும்,

உஷாம்பிகை (உஷா, கனடா), உதயகுமார் (உசன், லண்டன்), பத்மநாபன் (கஜன், கனடா), சர்மினி (சுவிஸ்) ஆகியேரின் அன்புத் தந்தையாரும்,

வரதன் (கனடா), சங்கீதா (லண்டன்), கேபினா (கனடா), லதன் (சுவிஸ்) ஆகியேரின் அன்பு மாமனாரும்,

வர்ஷா, ஆதி, திஷானா, கிசோரி, ஹாசினி, சாருஜயன், சாரிஷா, பிரியங்கா, திவ்யா, லயா, ஜெய் ஆகியேரின் அன்புப் பேரனும்,

பராசக்தி, கமலம், ராசன், ராணி, ரவி, விஜியன், செந்தி, கமலா, தபோ, விஜி, மறும், காலம் சென்றவர்களான வேலுப்பிள்ளை, இலங்கநாதன், பரமநாதன், புவனேஸ்வரி, சரஸ்வதி, புஸ்பம், தவம் ஆகியேரின் அன்பு மைதுனரும் ஆவார். 

இறுதி கிரிகைகள் 

பார்வைக்கு:
20-01-2024 சனிக்கிழமை பிற்பகல் 5 மணி முதல் 9 மணி வரை
21-01-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் 9 மணி வரை 

கிரிகை:
21-01-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 11 மணி வரை 

தகனம்:
21-01-2024 ஞாயிற்றுக்கிழமை 11:30 மணி 

முகவரி:
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave
Ajax, ON L1S 2E3

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

மேலதிக தெடர்புகளுக்கு
உஷா (மகள்) கனடா - +1-416-419 - 0391 
வரதன் (மருமகன்) கனடா +1-647-567 - 7959
கஜன் (மகன்) கனடா - +1-416-723 - 5571
உதயகுமார் (உசன், மகன்) லண்டன் - +44 7948625805
சர்மினி (மகள்) சுவிஸ்
செந்தி (மைத்துனர்) கனடா - +1-647-302 - 5571
ரவி (மைத்துனர்) டென்மார்க் - +45 28349312