அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Sunday, November 19, 2023

"உசன் உறவுகள்"


உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா
வழங்கும்
"உசன் உறவுகள்"
(குளிர்கால ஒன்றுகூடல்)

திகதி: நவம்பர் 25, 2023, சனிக்கிழமை 
நேரம்: மாலை 6 மணி
இடம்: Baba Banquet Halls
3300 McNicoll Avenue, Scarborough, ON M1V 5J6

கலை நிகழ்வுகளோடு இரவு விருந்துமுண்டு. மலை 7 மணி முதல் மலை 7:30 மணி வரை மண்டபத்தில் வைத்து அப்பம் சுட்டுப் பரிமாறப்படும் என்ற தகவலையும் மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

புத்தம் புதிய நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் நிகழ்வைக் கலகலப்பாக்கக் காத்திருக்கிறார்கள்!

இந்த நிகழ்வுக்கான செலவைப் பகிர்ந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் வேண்டுகிறோம்.
பொருட்களின் விலைகள் பலமடங்கு அதிகரித்துள்ள நிலையில் உங்கள் அனைவரினதும் தாராளமான நிதிப் பங்களிப்பு அவசியமாகிறது.  நிர்வாகசபைக்குள்ளே இடம்பெற்ற கருத்துப் பரிமாற்றத்தின்பின் கீழுள்ளவாறு செலவைப் பகிர்ந்துகொள்ளுமாறு வேண்டுகிறோம்.

அங்கத்தவர் அல்லாதோர்
ஒருவர் - $50.00
இருவர் அல்லது மூவர் - $100.00
நான்கு அல்லது அதற்கு மேற்பட்டோர் - $150.00

அங்கத்தவர்கள் மேலதிகமாக குடும்பமொன்றுக்கு $50.00

இந்த வேண்டுகோளை நீங்கள் அனைவரும் மனதார ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறோம்.

மண்டபம் நிறைந்த மக்கள் வருகை நிகழ்வைச் சிறப்பாக்கும்.

உங்கள் அனைவரையும் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்!

நன்றி.

நிர்வாகசபை
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா

நிகழ்ச்சிகள்

*
மங்கல விளக்கேற்றல்
திரு. திருமதி நகுலன்
திரு. திருமதி சிவானந்தன்


* தேவாரம்
திருமதி றஜனி மதீஸ்வரன்


* கனடிய தேசிய கீதம்

செல்வி அம்ரிதா நிர்மலன்

செல்வி பிரனிதா நிர்மலன்


* உசன் கீதம்
திருமதி றஞ்சி வெற்றிவேலு


* அமைதி வணக்கம்


* வரவேற்புரை
திரு. சிதம்பரப்பிள்ளை தயாபரன்

(உப தலைவர், உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா)

* நடனம்
செல்வி ஓவியா தவக்குமார்
ஸ்ருதி திவபரன்
ஆசிரியை ஶ்ரீமதி சியாமா தயாளன்
(Bhaarati School of Indian Classical Dance)


* பாடல்
செல்வி தியானா இளங்கீரன்


* நடனம்
செல்வி துஷாரா திருகரன்


* பாடல்
செல்வி ஐஸ்னா அரவிந்தன்

* விசேட உரை

திரு. சிவலோகநாதன் ஜெகன்

(London)


* நடனம்
செல்வி திஸ்யா இளங்கீரன்

* மாவீரர் பாடல்
திரு. இளங்கீரன் தங்கவேலாயுதம்


* தலைவர் உரை
திரு. சரவணமுத்து பத்மகாந்தன்
(
தலைவர், உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா)


* மூதாளர்களுக்கான போட்டி நிகழ்ச்சி (Parcel Passing)


* சிறியோர் போட்டி நிகழ்ச்சி (Musical Chair)


* பெரியோர் போட்டி நிகழ்ச்சி (Musical Chair)


* நன்றி நவிலல்
திருமதி ஷெமிலா பிரகலாதன்
(
செயலாளர், உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா)