அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Sunday, August 6, 2023

வருடாந்தப் பொதுக் கூட்டமும், கோடை கால ஒன்றுகூடலும் - 2023


உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் வருடாந்தப் பொதுக் கூட்டமும், கோடை கால ஒன்றுகூடலும் August 26, 2023, சனிக்கிழமையன்று இடம்பெறவுள்ளன. Neilson Road and Finch Avenue சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள Neilson Park இல் இந்நிகழ்வு இடம்பெறும். காலை 10 மணிக்கு காலை உணவுடன் ஆரம்பமாகும் இந்நிகழ்வு மாலை 6 மணி வரை இடம்பெறும்.
பொதுக் கூட்டம் பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகும். இந்த நேரத்தில் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உங்கள் ஆரோக்கியமான கருத்துகளைத் தெரிவித்து ஒன்றியத்தின் வளர்ச்சிக்கு உதவுமாறு உசன் மக்கள் அனைவரையும் அன்போடு வேண்டுகிறோம்.
ஒன்றுகூடலில் குழை சாதம், BBQ chicken, burger, hot dog, சுண்டல் முதலியவற்றோடு உங்கள் அனைவரினதும் அபிமானத்தைப் பெற்ற கொத்து ரொட்டியும் பரிமாறப்படும்.


அனைத்து வயதினருக்குமான விளையாட்டுப் போட்டிகள் ஒழுங்கு செய்யப்படுகின்றன. சிறப்பு விளையாட்டாக எமது பாரம்பரிய கயிறிழுத்தல் போட்டியும் இடம்பெறும்.
சிறுவர்களுக்கான சிறப்பம்சமாக வினோத உடைப் போட்டியும் (Fancy Dress competition) இடம்பெறும் என்பதை மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றோம். 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ,சிறுமிகள் இதில் பங்குபற்றிப் பரிசுகளைத் தட்டிச் செல்ல முடியும். பெற்றோர்களே இந்தப் போட்டியில் உங்கள் பிள்ளைகளும் கலந்து சிறப்பிக்க இப்போதே ஆயத்தங்களைச் செய்யவும்.


உசன் மக்களின் இந்த ஒன்றுகூடலில் கலந்து சிறப்பிக்குமாறு உசன் மக்களோடு அயற்கிராமத்து மக்களையும், உசன் இராமநாதன் மகா வித்தியாலய பழைய மாணவர்களையும் அன்போடு அழைக்கிறோம்.
வாருங்கள், வாருங்கள்! வந்து கலந்து மகிழ்ந்திருங்கள்!
நன்றி.
நிர்வாகசபை
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா


இசை இணைக்கிறது - Music Connects


உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் நிகழ்வுகளில் தேனினுமினிய இன்னிசை வழங்கும் அன்புக்குரிய பிரதிஷ்னி மதீஸ்வரன் - மயூரன் தனன்ஜெயன் இணையர் இணைந்து வழங்கும் இன்னுமொரு இசைவிருந்து. TVI இன் Music Connects நிகழ்ச்சியில் நேரடியாகப் பாடல்களைப் பாடி உங்களை மகிழ்ச்சிப்படுத்தவுள்ளார்கள். August 8, 2023, செவ்வாய்க்கிழமை அன்று Toronto நேரம் மாலை 8 மணி முதல் 9:30 மணிவரை இடம்பெறவுள்ள இந்த நிகழ்ச்சியைக் கண்டும், கேட்டும் மகிழ்வதோடு நேரடியாக அவர்களை வாழ்த்தவும் முடியும்.
இந்த அரிய சந்தர்ப்பத்தைத் தவறவிடாது இசை மலையில் நனைத்து இன்புறுமாறு அனைவரையும் அன்போடு வேண்டுகிறோம்.
இந்த நிகழ்ச்சி இனிதே நடைபெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழும் அதேவேளை பிரதிஷ்னிக்கும் மயூரனுக்கும் இசைத்த துறையில் மேலும் பிரகாசிக்க வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது.