உசனைப் பிறப்பிடமாகவும், மீசாலையை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி பத்மராணி மகேந்திரராஜா (வவி) அவர்கள் 30.10.2022 அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நல்லதம்பி (குலசேகரம்), வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
மகேந்திரராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஈஸ்வரராஜ், பதஞ்சலிராஜ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான குணபாலசிங்கம் (குணம்), வசந்தராணி (வசந்தா), புஸ்பராணி (பூவா), இராஜகுலசிங்கம் (பபா), மற்றும் இரத்தினசிங்கம் (ராசன், ஓய்வுநிலை தபால் திணைக்கள உத்தியோகத்தர், கொழும்பு), பூபாலசிங்கம் (ஆனந்தன், ஐக்கிய இராச்சியம்), தனபாலசிங்கம் (தனம், கிராமசேவை உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31.10.2022 அன்று மீசாலை, ஐயாகடைச் சந்திக்கு அண்மையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, அன்னாரின் பூதவுடல் தகனகிரியைக்காக சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கிறது. அன்னாரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.