பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி பெருமையுடன் வழங்கும் "நாட்டிய தீக்க்ஷ" நிகழ்வு October 9, 2022, ஞாயிற்றுக்கிழமை அன்று இடம்பெறவுள்ளது. 35 Fairview Mall Dr., North York, ON, M2J 4S4, Canada என்ற முகவரியில் அமைந்திருக்கும் Fairview Library Theatre இல் சரியாக மாலை 5 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமாகும். சிற்றுண்டிகள் மாலை 4 மணியிலிருந்து 5 மணி வரை வழங்கப்படும்.
இந்த நிகழ்வு பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி அதிபர், பரத கலா வித்தகர், நாட்டிய பூரணா, திருமதி சியாமா தயாளன் அவர்களின் தயாரிப்பு, நெறியாள்கையில் இடம்பெற உள்ளது.
இளம் நாட்டியக்கலைஞர்களின் அதீத முயற்சியால் ஒரு பிரமாண்டமான நிகழ்வாக இது அமைகின்றது.
பிரபலமான பக்கவாத்தியக் கலைஞர்களின் பங்களிப்பு நிகழ்வை மேலும் சிறப்பிக்கும்.
பாட்டு: ஸ்ரீ மயூரன் தனஞ்செயன்
மிருதங்கம்: ஸ்ரீ அஸ்வின் பாலச்சந்திரன்
வயலின்: ஸ்ரீ ராம்பிரகாஷ் சரவணபவன்
இவர்களுடன் நட்டுவாங்கம் ஸ்ரீமதி சியாமா தயாளன்
ரஜனி மதீஸ்வரன் தம்பதிகளின் மருமகனும், பிரதிஷ்னியின் கணவருமான மயூரன் இந்த நிகழ்வுக்கான பாடல்களைப் பாடுவது உசன் மண்ணுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.
இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு நாட்டிய தீக்க்ஷ குழு உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறது.
இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வாழ்த்துகின்றது.
Bhaarati School of Indian Classical Dance proudly presents
NATYA DEEKSHA, on October 9th. 2022.Our little dancers have put in a tremendous amount of effort to present this event. The Natya Deeksha team invites you to enjoy this showcase of dance. Please come out and support our budding dancers.
Date and Venue:
Sunday, October 9th,2022 at 5pm
(Refreshments are from 4pm to 5pm)
At Fairview Library Theatre, 35 Fairview Mall Dr., North York, ON, M2J 4S4
The talented orchestra accompanying this show:
Vocal: Shri. Myuran Thananjeyan
Mrudangam: Shri. Ashwinn Balachandran
Violin: Shri Ramprakash Saravanabhavan
Nattuwangam: Smt. ShiyamaThayaalan
United People Association of Usan in Canada wishes the young dancers the very best! Also congratulates Shiyama for her continued effort promoting our culture.