யாழ் உசன் மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தங்கம்மா நடராஜபிள்ளை அவர்கள் 2022.07.05 அன்று இயற்கை எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற அருளம்பலம் நல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
நடராஜபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
சின்னத்துரை, காலஞ்சென்ற சதாசிவம், சோதீஸ்வரி, சிவபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜனார்த்தனன் (ANJ BROS PVT LTD), ஜதுர்ஸன் (உள்ளுராட்சி திணைக்களம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவதீபாவின் (பதிவாளர் நாயகம் திணைக்களம்) அன்பு மாமியாரும்,
ஆகில்யனின் அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கடமைகள் 2022.07.05 உசனில் நடைபெற்று மதியம் 12.30 மணியளவில் ஈச்சங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் - குடும்பத்தினர்.
அன்னாரின் பிரிவால் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா கவலைகொள்வதுடன், அவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தித்துக்கொள்வதுடன், பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.