அன்பான உசன் மக்களே!
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடாவின் தற்போதைய நிர்வாகசபையின் ஆயுட்காலம் முடிவுக்கு வருகிறது. அடுத்துவரும் மூன்று வருடங்களுக்கான புதிய நிர்வாகசபையைத் தெரிவுசெய்யும் நேரம் வந்துள்ளது. July மாதம் 10 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை, 1575 Neilson Rd, Scarborough ON கனடா என்ற முகவரியில் அமைந்துள்ள Neilson Park ல் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் இந்தப் புதிய நிர்வாகசபை தெரிவுசெய்யப்படவுள்ளது.
கனடாவாழ் உசன் மக்களின் மகிழ்ச்சிக்கும், உசன் மண்ணின் வளர்ச்சிக்கும் உழைக்கக்கூடிய, சமூக சேவையில் ஆர்வமுள்ள அனைவரையும் புதிய நிர்வாகசபையில் சேர்ந்து நிர்வாகசபைக்குப் புத்துணர்ச்சி அளிக்க வருமாறு தற்போதைய நிர்வாகசபை அன்போடு வேண்டிநிற்கிறது.
நிர்வாகசபைக்கு 11 உறுப்பினர்கள் வேண்டும். எனவே 11 உறுப்பினர்களைக் கொண்ட குழுவாகப் பெயர்ப் பட்டியலைத் தயார்செய்து பொதுக்கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு வேண்டுகிறோம். ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்களின் பெயர்ப்பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டால் உறுப்பினர்களின் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு அதிக வாக்குகள் பெறும் குழு தெரிவு செய்யப்படும்.
நிர்வாகசபையில் உள்வாங்கப்படுவதற்கும், வாக்களிப்பதற்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவில் அங்கத்தவராக இருக்கவேண்டும். 38 அங்கத்தவர்களே தற்போது உள்ளனர். எனவே அங்கத்தவரல்லாதோர் மாதம் $10.00 செலுத்தும் அங்கத்துவ படிவத்தை உடனடியாகப் பூர்த்திசெய்து உங்கள் வங்கிக் கணக்கின் Void Cheque ஓடு சமர்ப்பிக்குமாறு அன்போடு வேண்டுகிறோம். மாதாந்தம் $10.00 உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பெற்றுக்கொள்ளப்படும். அங்கத்துவ படிவம் தேவைப்படுவோர் செயலாளர் செமிலா பிரகலாதனுடன் 647-289-5998 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளவும்.
பொதுக்கூட்டம் பிற்பகல் 1 மணியளவில் ஆரம்பமாகும்.
பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து ஒன்றியத்தின் கோடைகால ஒன்றுகூடல் இடம்பெறும். உறவுகளோடும், நண்பர்களோடும், ஊரோடும் ஒன்றாகக் கூடி மகிழ்ந்து வருடங்கள் இரண்டு ஓடிவிட்டன. இந்தப் பிரிவை முடிவுக்குக் கொண்டுவரும் நேரம் வந்துவிட்டது. ஒன்று சேர்ந்து மகிழ்ந்திருக்க காலம் கைகூடி வந்துள்ளது. வாருங்கள் கூடி மகிழ்ந்திருந்து குதூகலிப்போம்! உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடாவின் கோடைகால ஒன்றுகூடலில் சங்கமிப்போம்!
அனைத்து வயதினருக்குமான விளையாட்டுப் போட்டி இடம்பெறவுள்ளது. விளையாட்டுப்போட்டியில் பங்கெடுத்து உங்கள் திறமையை வெளிப்படுத்துவதோடு பரிசுகளையும் வெல்லுங்கள்.
ஆண்கள், பெண்களுக்கான கயிறுழுத்தல் போட்டியில் கலந்துகொண்டு மகிழ்ந்திருங்கள்.
குழைசாதம், கொத்துரொட்டி, BBQ, hamburger, hotdog என்று பலவகை உணவுகளையும் உண்டு மகிழ உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். காலை 10 மணிக்கு வருவோருக்கு விசேட உணவும், தேநீரும் வழங்கப்படும்.
அங்கத்தவர்கள் அனைவரும் மேலதிக கட்டணமில்லாமல் இந்நிகழ்வில் கலந்துகொள்ளமுடியும். அங்கத்தவரல்லாதோர் 4 பேர் கொண்ட குடும்பமொன்றுக்கு குறைந்தது $60.00 செலுத்தி மகிழ்ந்திருக்க முடியும். பொருட்களின் விலை அதிகமாக இருப்பதால் விரும்பியோர் மேலதிக அன்பளிப்பு செய்யமுடியும் என்பதையும் சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம்.
இந்த நிகழ்வுக்கு அனுசரணை வழங்க விரும்புவோர் தலைவர் சுப்பிரமணியம் பாஸ்கரனுடன் 647-448-7434 என்ற தொலைபேசி இலக்கத்தில்தொடர்புகொள்ளவும்.
வாருங்கள், அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்று மீண்டும் பறைசாற்றுவோம்!
நன்றி.
நிர்வாகசபை
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா