அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Monday, March 14, 2022

உலகளாவிய உசன் கட்டமைப்பு
Usan Global Forum
கருத்துப் பரிமாற்றம்

அன்பார்ந்த உசன் மக்களே!

உலகளாவிய உசன் கட்டமைப்பு தொடர்பில் 2021.11.06 இடம்பெற்ற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் இணையவிழாவில் கருத்துருவாக்கம் தோற்றம்பெற்றது. அதற்கு அமைவாக கட்டமைப்புத் தொடர்பான சில பூர்வாங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பெற்று உலகளாவிய உசன் கட்டமைப்புத் தொடர்பில் உருவாக்கப்பெற்ற யாப்பு மற்றும் அமைப்பின் செயற்பாட்டு வழிகாட்டி ஆவணங்களுக்கு அமைய அனைத்து அமைப்புகளினதும் ஏகோபித்த ஆதரவுடன் 2022.01.30 அன்று வரலாற்று நிகழ்வாக உலகளாவிய உசன் கட்டமைப்பு - Usan Global Forum - உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

அமைப்பின் செயற்திட்டங்கள் தொடர்பில் 2022.02.26 இடம்பெற்ற முதலாவது மாதாந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டு சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு அமைவாக உசன் கிராமத்தின் நுழைவுப் பிரதேசம் வனப்பாக்குதல் செயற்திட்டம் அனைவராலும் முன்னிலைப்படுத்தப்பெற்று அமுலாக்கலுக்காகத் தெரிவுசெய்யப்பெற்று சில அடிகள் முன்னோக்கி நகர்ந்துள்ளது.

அதற்கு அமைவாகச் செயற்திட்டம் தொடர்பில் அடிப்படை விடயங்களை உள்ளடக்கியதாக வரைபடம், முப்பரிமாண படங்கள், உள்ளீட்டு பொருட்களின் தொழில்நுட்ப விபரணக்குறிப்பு நுணுக்கங்கள், மற்றும் உத்தேச மதிப்பீடு என்பன தயாரிக்கப்பெற்றது. இச் செயற்திட்டம் தொடர்பில் உரிய திணைக்களங்களிடம் அனுமதி பெற்றுக்கொள்ளவேண்டிய நடைமுறைகளுக்கு அமைவாக வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்கும், அத் திணைக்களத்தின் மேல் அலுவலகமாகிய உள்ளுராட்சி அமைச்சிற்கும் உரிய வேண்டுதல் கடிதங்கள் மற்றும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

எமது இந்த விண்ணப்பம் தொடர்பில் உரிய கரிசனை எடுத்த உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர்  2022.03.02 அன்று எமது விண்ணப்பத்தை ஏற்று வேலைகளை ஆரம்பிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டிருந்தார்.

இம் முன்னேற்றங்கள் தொடர்பில் உலகளாவிய உசன் கட்டமைப்பின் கடந்த மாதாந்தக் கூட்டத்திலும் கலந்துரையாடப்பெற்று நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் இச் செயற்திட்டத்தின் அமுலாக்கல் மற்றும் முடிவுறுத்துதல் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக வெளிப்படைத் தன்மையைக் கருத்தில் கொண்டு உலகளாவிய உசன் கட்டமைப்பு - Usan Global Forum - உசன் மக்களுடன் கருத்துப் பரிமாற்றம் ஒன்றை நிகழ்த்த விரும்புகின்றது. Zoom செயலி வழியாக நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வில் ஆர்வமுள்ள அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

தலைப்பு: உலகளாவிய உசன் கட்டமைப்பு (Usan Global Forum) - கருத்துப் பரிமாற்றம்
தேதி: சனிக்கிழமை, March 26, 2022
நேரம்:
08:00 a.m. - Canada & USA (East coast)
12 noon UK
01:00 p.m. Europe, Scandinavia
05:30 p.m. Sri Lanka
11:00 p.m. Sydney, Australia

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/81424359897?pwd=Rk9nTzgwcFhFODR6ZW9GWWkrMTZRdz09

Meeting ID: 814 2435 9897
Passcode: 123456

மனங்களாலும், வளங்களாலும் புலமும், நிலமும் ஒருமித்து வெற்றிகொள்வோம்!

நன்றி.

ஜெயதேவன் அம்பலவாணர்
பேச்சாளர்
உலகளாவிய உசன் கட்டமைப்பு