அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Sunday, January 16, 2022

உசனுக்கான ஒரு பொதுக் கட்டமைப்பு


November 6, 2021 இல் இடம்பெற்ற "உசன் ஒருங்கிணையம்" இணைய விழாவிலே உசன் அபிவிருத்தியை ஒன்றிணைந்து முன்னெடுக்கும் நோக்கில் ஒரு பொதுக் கட்டமைப்பின் அவசியம் குறித்து பிரேரணை முன்மொழியப்பட்டது.  உசனிலே இயங்கிக்கொண்டிருக்கும் அமைப்புகளையும், புலத்திலே ஒவ்வொரு நாட்டுக்கும் குறைந்தது ஒரு பிரதிநிதியையும், உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவையும் உள்ளடக்கியதாக இந்தப் பொதுக் கட்டமைப்பு அமைய வேண்டும் என்ற கருத்து அன்றைய தினம் முன்வைக்கப்பட்டது.  அதனடிப்படையில் தற்காலிகமாக ஒரு குழுவும் தெரிவுசெய்யப்பட்டது.

இதனடிப்படையில் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா, உசன் கிராம முனேற்றச் சங்கத்தோடு கடந்த இரு மாதங்களாகக் கந்தாலோசித்து வருகிறது.  இலகுவான கருத்துப் பரிமாற்றத்தினை மனதில் கொண்டு   உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா கேட்டுக்கொண்டதற்கிணங்க உசன் கிராம முனேற்றச் சங்கம் உசனிலே இயங்கும் ஏனைய அமைப்புகளோடு இது குறித்துக் கருத்துப் பரிமாற்றம் செய்து வருகிறது.  அது நல்ல ஆதரவைப் பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு அறியத்தருகிறோம்.

ஆனாலும் நாட்டுக்கொரு பிரதிநியைத் தெரிவுசெய்வதில் காலதாமதம் நிலவுகிறது.  இதனை விரைவுபடுத்தும் நோக்கிலும், இதுவரை ஏற்பட்ட முன்னேற்றத்தைப் பகிர்ந்துகொள்ளவும், இந்தப் பொதுக் கட்டமைப்பு எவ்வாறு இயங்கவேண்டும் என்று மேலதிகமாகக் கலந்துரையாடவும் Zoom செயலியூடாகக் கூட்டமொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் உசனிலிருந்து இயங்கும் அனைத்து அமைப்புகளின் பிரதிநிதிகளையும், உலகெங்கும் வாழும் உசன் மண்மேல் காதல் கொண்ட நல்லுள்ளங்களையும் கலந்துகொண்டு வளம்மிக்க ஆலோசனைகளை வழங்குவதோடு இந்தப் பொதுக் கட்டமைப்பில் தாமாகவே அங்கத்தவர்களாகச் சேர்ந்து ஆக்கப் பணிகளில் ஈடுபட உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்போடு அழைக்கிறது.

திகதி: சனிக்கிழமை, January 22, 2022
நேரம்: காலை 7 மணி EST (Toronto) ; மதியம் 12 மணி GMT (UK), பிற்பகல் 1 மணி CET (France, Germany, Italy, Switzerland, Norway, Denmark, etc.), மாலை 5:30 மணி IST (Sri Lanka), இரவு 11 மணி AEDT (Sydney & Melbourne, Australia)

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/83645916661?pwd=UHhyNnd5elBLMlFNOTk2MXhFQURhZz09

Meeting ID: 836 4591 6661
Passcode: usan

நன்றி.

நிர்வாகசபை
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா