உசனைச் சேர்ந்த திருமதி புஸ்பராணி கந்தையா (பூவா) அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற நல்லதம்பி (குலசேகரம்) வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
சுதர்சினி (மிருசுவில்), சுதர்சன் (France), சுபாசினி (வவுனியா), சுபாசன் (விசுவமடு), காலஞ்சென்றவர்களான சுகிர்தன், சுகிர்தினி, மற்றும் கண்ணன் (France) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான குணபாலசிங்கம் (குணம்), வசந்தராணி (வசந்தா), இராஜகுலசிங்கம் (பபா), மற்றும் இரத்தினசிங்கம் (ராசன், ஓய்வுநிலை தபால் திணைக்கள உத்தியோகத்தர், கொழும்பு), பத்மராணி (பபி, மீசாலை), பூபாலசிங்கம் (ஆனந்தன், ஐக்கிய இராச்சியம்), தனபாலசிங்கம் (தனம், கிராமசேவை உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கும் அதேவேளை அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆறுதலையும் தெரிவித்து நிற்கிறது.