அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Monday, December 6, 2021

அமரர்
திருமதி நாகேஸ்வரி சிதம்பரநாதன்


பிறப்பு                இறப்பு
14.03.1947            01.12.2021

யாழ், உசன், மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், பண்டாரிகுளம் வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டு, கண்டாவளை மகாவித்தியாலயம், பளை மகாவித்தியாலயம், விடத்தற்பளை கமலாசனி வித்தியாலயம், உசன் இராமநாதன் மகாவித்தியாலயம், வவுனியா நெடுங்குளம் கலைமகள் மகாவித்தியாலயம், விபுலானந்தாக் கல்லூரி ஆகிய இடங்களில் சங்கீத ஆசிரியையாகக் கடமையாற்றிப் பல கலைஞர்களை உருவாக்கி ஓய்வு பெற்ற சங்கீத வித்துவான் திருமதி சிதம்பரநாதன் நாகேஸ்வரி அவர்கள் 01.12.2021, புதன்கிழமையன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற வல்லிபுரம் வைரவப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

சிதம்பரநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

நிதேனுகன், அமரர் நிலாவண்யன், கஜானி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பைரவி, பிரதாபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ருதீஷன், ஆகன்யன், பிரதாஜினி ஆகியோரின் பாசமிகு பேதியாரும்,

காலஞ்சென்ற இராஜேஸ்வரி, பரமேஸ்வரி, சிவபாக்கியநாதன், சிவசுந்தரம் மற்றும் கமலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், இராசையா, அன்னபூரணம் மற்றும் தவமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

01.12.2021 அன்று மாலை வவுனியா தட்ஷணாம்குளம் இந்து மயானத்தில் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

அன்னாரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்.

மதிப்புமிகு சங்கீத ஆசிரியை நாகேஸ்வரி அவர்களின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கிறது.  அதேவேளை அன்னாரின் பிரிவால் துவண்டுபோயிருக்கும் கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறது.


Sunday, December 5, 2021

மதிப்பளிப்பு நிகழ்வு

உசன் கிராம மட்ட அமைப்புக்கள் இணைந்து உசன் கிராம அலுவலர் அகல்யா வருண்ராஜ் அவர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்ச்சியினை 21.11.2021 அன்று
யா/உசன் இராமநாதன் மகாவித்தியால மண்டபத்தில் மாலை 4 மணிக்கு திரு அ.கஜீவன் தலைமையில் நடாத்தியுள்ளனர்.
தென்மராட்சி மட்ட கிராம உத்தியோகத்தர்களுக்கான அலுவலக முகாமைத்துவப் போட்டி 2020 இல் முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்டதற்காகவும், உசன் கிராமத்துக்கு அவர் வழங்கி வரும் சிறப்பான சேவைக்காகவும் இந்த நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக நிர்வாக கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலகம் தென்மராட்சி த.அருந்தமிழ்ச்செல்வன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. மழலைகளால் தேவாரம் இசைக்கப்பட்டதையடுத்து உசன் கந்தசுவாமி கோவில் பிரதம குரு சொல்வாக்குச் சித்தர் கேதீஸ்வரக் குருக்கள் அவர்களின் ஆசியுரை இடம்பெற்றது. செல்வன் மு. ஜதுர்ஸன் அவர்களால் உசன் கீதம் இசைக்கப்பட்டது.
வரவேற்புரையை செ. ஜதிகேசன் அவர்கள் நிகழ்த்தினார். தொடர்ந்து தலைமையுரை விழாத் தலைவர் அ.கஜீவன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அதனையடுத்து திரு.கு. கமலதாஸ், திரு.சு. சற்குணநாதன், திரு.இ. முருகதாஸ் மற்றும் வித்தியாலய முதல்வர் திரு சண்முகதாசன் ஆகியோரால் சிறப்புரைகள் வழங்கப்பட்டன.
தொடர்நது உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வின் வாழ்த்துச் செய்தி அ. கஜானன் அவர்களால் சபையில் வாசிக்கப்பட்டது.
பிரதம விருந்தினர் அவர்களின் உரையைத் தொடர்ந்து மதிப்பளிப்பு இடம்பெற்றது. முன்னைநாள் கிராம உத்தியோகத்தரும், எமது கிராமத்தவருமாகிய சுசீலாவதி செல்வநாயகம் அவர்கள் பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்க, திருமதி சி. பிரபாகரன் மற்றும் திருமதி த.சிவகுமாரன் ஆகியோரால் மாலை அணிவித்து மதிப்பளிக்கப்பட்டது.
நினைவுச் சின்னம் பிரதம விருந்தினரால் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.
தொடர்ந்து கிராம அலுவலர் அகல்யா வருண்ராஜ் அவர்களால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டது.
ந. ஜதுர்ஸன் அவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டதையடுத்து கிராம மக்கள் பலரும் கிராம அலுவலரை வாழ்த்தி கலந்துரையாடினர்.
வாழும்போதே வாழ்த்துவோம் என்ற கருப்பொருளுக்கமைய இந்த நிகழ்வு இடம்பெற்றது. உசன் கிராமமட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து இந்நிகழ்வை முன்னெடுத்தது ஒரு முன்மாதிரியாக அமைந்தது.