அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Wednesday, August 18, 2021

துயர் பகிர்வு
செல்லத்துரை கனகசுந்தரம்


யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், உசனை வசிப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை கனகசுந்தரம் அவர்கள் 18-08-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கம் பாறுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரிமளம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்ற மங்கையற்கரசி, மற்றும் சோமசுந்தரம், மகேஸ்வரி, இராயேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அகிலன் (சுவிஸ்), அருந்ததி (இலங்கை), அச்சுதன் (கனடா, உசன் ஐக்கிய மக்கள் ஒன்றிய நிர்வாகசபை உறுப்பினர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிலோஜினி (சுவிஸ்), பிரசாந்தன் (இலங்கை), கமலினி (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற சரவணமுத்து, மற்றும் சாரதாதேவி, காலஞ்சென்றவர்களான நவரட்ணம், துரைராசா மற்றும் சேனாதிராசா, காலஞ்சென்றவர்களான பராசக்தி, பூரணம் மற்றும் பரமநாதர், காலஞ்சென்ற பத்மநாதன், மற்றும் பவளநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆயுஷன், அனிஷன், டயானிதா, பிரனேஸ், அஸ்வின், அரிஸ் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 19-08-2021 வியாழக்கிழமை அன்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 20-08-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் இறுதிக்கிரியை நடைபெற்று ந.ப 12:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
அகிலன் - மகன்
Mobile : +41762169135 

அருந்ததி - மகள்
Mobile : +94779508962

அச்சுதன் - மகன்
Mobile : +14164571162

நிலோஜினி - மருமகள்
Mobile : +41762163090

பிரசாந்தன் - மருமகன்
Mobile : +94773051171

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்ளும் அதே வேளை அன்னாரின் ஆன்மா முத்தியடையப் பிரார்த்திக்கிறது.

(இந்த அறிவித்தல் www.ripbook.com என்ற இணையத் தளத்திலிருந்து பிரதி செய்யப்பட்டு மாற்றம் செய்யப்பட்டது.)