உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் வருடாந்தப் பொதுக் கூட்டமும், ஒன்றுகூடலும் September 4 ஆம் திகதி, சனிக்கிழமை, L'Amoreaux Sports Complex, Picnic Area A and Shelter இல் (Birchmount Road and McNicoll Avenue) நடைபெற உள்ளது. இந் நிகழ்வு காலை 10 மணிக்கு ஆரம்பமாகும்.
தற்போதைய சுகாதாரக் கட்டுப்பாடுகளுக்கமைய இந் நிகழ்வு நடைபெறும்.
இம்முறை விளையாட்டுப் போட்டி நடைபெறமாட்டாது. அத்தோடு உணவுப் பரிமாற்றமும் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும். நிகழ்வுக்கு சில நாட்களுக்கு முன்பாக இறுதி முடிவு எடுக்கப்படும்.
இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறது.
நன்றி.
நிர்வாகசபை
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா