அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Friday, August 20, 2021

ஆங்கிலக் கல்வி


தென்மராட்சி அபிவிருத்திக் கழகம் - ஐக்கிய இராச்சியம் (TDA UK) இலவச இணையவழி (Zoom) ஆங்கிலக் கல்விக்கான பதிவுகளைக் கோரியுள்ளார்கள்.

தாயகத்தில் ஆங்கிலக் கல்வியை மேம்படுத்த ஆர்வமுள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

*Intermediate level - GRAMMAR & SPEAKING (TAUGHT BY NATIVE SPEAKERS)

*Starting date: Saturday, 11th of September 2021 (12 weeks)

*Time: Sat & Sun 7:00pm to 8:30pm (Sri Lanka time)

*Please register your interest using the online google form below

https://forms.gle/TWRMKRvMTJ46mHhX6

ஆர்வமுள்ள அனைவரும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா கேட்டுக்கொள்கிறது.

தென்மராட்சி அபிவிருத்திக் கழகம் - ஐக்கிய இராச்சியம் நிறுவனத்துக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.


Wednesday, August 18, 2021

துயர் பகிர்வு
செல்லத்துரை கனகசுந்தரம்


யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், உசனை வசிப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை கனகசுந்தரம் அவர்கள் 18-08-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கம் பாறுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரிமளம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்ற மங்கையற்கரசி, மற்றும் சோமசுந்தரம், மகேஸ்வரி, இராயேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அகிலன் (சுவிஸ்), அருந்ததி (இலங்கை), அச்சுதன் (கனடா, உசன் ஐக்கிய மக்கள் ஒன்றிய நிர்வாகசபை உறுப்பினர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிலோஜினி (சுவிஸ்), பிரசாந்தன் (இலங்கை), கமலினி (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற சரவணமுத்து, மற்றும் சாரதாதேவி, காலஞ்சென்றவர்களான நவரட்ணம், துரைராசா மற்றும் சேனாதிராசா, காலஞ்சென்றவர்களான பராசக்தி, பூரணம் மற்றும் பரமநாதர், காலஞ்சென்ற பத்மநாதன், மற்றும் பவளநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆயுஷன், அனிஷன், டயானிதா, பிரனேஸ், அஸ்வின், அரிஸ் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 19-08-2021 வியாழக்கிழமை அன்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 20-08-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் இறுதிக்கிரியை நடைபெற்று ந.ப 12:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
அகிலன் - மகன்
Mobile : +41762169135 

அருந்ததி - மகள்
Mobile : +94779508962

அச்சுதன் - மகன்
Mobile : +14164571162

நிலோஜினி - மருமகள்
Mobile : +41762163090

பிரசாந்தன் - மருமகன்
Mobile : +94773051171

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்ளும் அதே வேளை அன்னாரின் ஆன்மா முத்தியடையப் பிரார்த்திக்கிறது.

(இந்த அறிவித்தல் www.ripbook.com என்ற இணையத் தளத்திலிருந்து பிரதி செய்யப்பட்டு மாற்றம் செய்யப்பட்டது.)


Wednesday, August 11, 2021

பொதுக் கூட்டமும், ஒன்றுகூடலும்


உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் வருடாந்தப் பொதுக் கூட்டமும், ஒன்றுகூடலும் September 4 ஆம் திகதி, சனிக்கிழமை, L'Amoreaux Sports Complex, Picnic Area A and Shelter இல் (Birchmount Road and McNicoll Avenue) நடைபெற உள்ளது. இந் நிகழ்வு காலை 10 மணிக்கு ஆரம்பமாகும்.

தற்போதைய சுகாதாரக் கட்டுப்பாடுகளுக்கமைய இந் நிகழ்வு நடைபெறும்.

இம்முறை விளையாட்டுப் போட்டி நடைபெறமாட்டாது.  அத்தோடு உணவுப் பரிமாற்றமும் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும்.  நிகழ்வுக்கு சில நாட்களுக்கு முன்பாக இறுதி முடிவு எடுக்கப்படும்.

இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறது.

நன்றி.

நிர்வாகசபை 
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா


Tuesday, August 10, 2021

துயர் பகிர்வு - நன்னித்தம்பி தயாசீலன்


உசனைச் சேர்ந்த கண்ணகி (யாழ். தேசிய கல்வியியற் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவர் நன்னித்தம்பி தயாசீலன் அவர்கள் 20-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று Scarborough, Ontario, கனடாவில் சிவபதம் அடைந்தார்.


இவர் யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, Toronto (கனடா) ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்தார். 

அன்னார், காலஞ்சென்ற நன்னித்தம்பி, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இலக்கியா அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சாந்தநாயகி, யோகசீலன் மற்றும் பத்மமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கர்ணண், குணதர்சனா, காருண்யன், சிறீதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆதிகா, லக்சயன், ஜசிகன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

பார்வைக்கு


Sunday, 15 Aug 2021 6:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

Monday, 16 Aug 2021 8:00 AM - 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை


Monday, 16 Aug 2021 8:30 AM - 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்


Monday, 16 Aug 2021 10:00 AM - 10:30 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

கண்ணகி - மனைவி

Mobile : +94771109786

முத்துப்பிள்ளை - தாய்
Mobile : +14162978193

பத்மமலர் - சகோதரி

Mobile : +14162978193

இலக்கியா - மகள்

Mobile : +14372154442

காருண்யன் - மைத்துனர்
Mobile : +14163181705

கர்ணண் - மைத்துனர்
Mobile : +94771210648

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

(இந்த அறிவித்தல் www.ripbook.com என்ற இணையத் தளத்திலிருந்து பிரதி செய்யப்பட்டு மாற்றம் செய்யப்பட்டது.)