அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Saturday, April 3, 2021


உசன் மண்ணில் இருந்து முதலாவதாக இலங்கை நிர்வாகசேவையில் உயர் பதவி ஒன்றை அலங்கரித்த பெருமையை இன்று திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம்தர உத்தியோகத்தரான ஜே.எஸ்.அருள்ராஜ் தமது கடமைகளை மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்று பெற்றுகொண்டார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பட்டதாரியான இவர் 2003 ம்ஆண்டு இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவுசெய்யப்பட்டார்.

கிண்ணியா, சேருவல பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராகவும், முன்னர் இருந்த வடகிழக்கு மாகாண சபை மற்றும் கிழக்கு மாகாண சபை ஆகியவற்றிலும் கடமையாற்றியுள்ளார். வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர், கிழக்கு மாகாண தொழில் திணைக்கள பிரதி ஆணையாளர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையை பதவியேற்க முன்னர் இவர் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் பிரதேச செயலாளர்கள் அரச அலுவலர்கள் கலந்து சிறப்பித்தார்கள். 

இவர் தொடர்ந்தும் பல பதவி உயர்வுகளை பெற்று மேலும் உயர்ந்து மண்ணுக்குபெருமை சேர்க்க எமது வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கின்றோம்.

(இது ரூபன் அவர்களின் பதிவாகும்.)

இவர் உசன் இராமநாதன் மகா வித்தியாலய முன்னாள் அதிபர் ஜோன்பிள்ளை அவர்கள் மற்றும் பொன்னம்மா ஆசிரியை ஆகியோரின் மகனாவார்.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவும் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.