அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Wednesday, April 28, 2021

துயர் பகிர்வு - திருமதி சிறீதங்கநாயகி


உசனைச் சேர்ந்த சிதம்பரப்பிள்ளை ஜெகதீஸ்வரன் (ஜெகா) அவர்களின் மனைவி சிறீதங்கநாயகி அவர்கள் 26.04.2021 அன்று இத்தாலியில் காலமானார்.

அன்னார் கணபதிப்பிள்ளை சர்வலோகநாயகி தம்பதிகளின் அன்பு மகளும்,

சிதம்பரம்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தினேஷ், சிந்துஜா (France) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அரவிந்தின் அன்பு மாமியாரும்,

Yeshviny, Kirthish, Anj ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சிறிகணநாதன் (யாழ்ப்பாணம்), சிவலோகநாதன் (கொழும்பு), ராசி சிறிகாந்தன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவமலர், சிவபாக்கியம், காலஞ்சென்ற பாக்கியலச்சுமி , சிவலோகநாயகி, சிவராசா, விக்னேஸ்வரன், சிவராணி  ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் இத்தாலி via Katania, Mesina மலர்ச்சாலையில் 29.04.2021 வியாழக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் நடைபெறவுள்ளது.  இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: ஜெகா (உசன்)

தொடர்புகளுக்கு:
ஜெகா - +39 347 3285 829
தினேஷ் - +39 331 5039 979
சிந்துஜா - +33 666 799 358

சிறீதங்கநாயகி அவர்களின் ஆன்ம சாந்திக்காக உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வேண்டிக்கொள்ளும் அதேவேளை அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர் அனைவருக்கும் தனது அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.


Friday, April 16, 2021

திருக்குறள் உரையரங்கம்


கனடாவில் இருந்து இயங்கும் "வள்ளுவன் வழி இணையப்பள்ளி" அன்னைத்தமிழ் உறவுகளுக்காக வழங்கும் சித்திரைத் திருநாள் விசேட திருக்குறள் உரையரங்கம்!!!

இந்த இணைய நிகழ்வில் பிரபல பேச்சாளர்கள் மிக அற்புதமான தலைப்புகளில் உரை நிகழ்த்துவார்கள்!!!
உங்கள் அனைவரையும் இந்த இணையவழி நிகழ்விலே இணைந்து தெய்வப்புலவர் திருவள்ளுவர் தந்தருளிய திருக்குறளின் அருமை பெருமைகளையெல்லாம் கேட்டு மகிழுமாறு அன்புடன் அழைக்கிறார் "வள்ளுவன் வழி இணையப்பள்ளி" நிறுவனர் விடத்தற்பளையைச் சேர்ந்த ஜோதி ஜெயக்குமார்.

பெரியவர்கள் இணைந்துகொள்ளும் அதே நேரம் இளைஞர்கள், பாடசாலை மாணவர்கள் ஆகியோரும் இணைந்துகொண்டு பேச்சாளர்களின் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டால் மிகப் பயனுள்ளதாக இருக்கும்.

எந்த நாட்டிலிருந்தும் நீங்கள் இணைந்து கொள்ளலாம்.
இந்த Zoom இணைப்பினூடாக  இணைந்துகொள்ளுங்கள்.
https://us02web.zoom.us/j/88457508170...
Meeting ID: 884 5750 8170
Passcode: 9999

திகதி: April 17, 2021, Saturday
நேரம்: காலை 9 மணி (Canada, EDT)
இலங்கை மற்றும் இந்திய நேரம் சனிக்கிழமை மாலை 6:30 மணி
(ஏனைய நாடுகளிலுள்ளவர்கள் தயவுசெய்து நேரத்தைக் கணித்துக்கொள்ளுங்கள்)

தயவுகூர்ந்து இப்பதிவினை உங்கள் நண்பர்கள், உறவினர்களோடும் பகிர்ந்துகொண்டு எல்லோரும் பயன்பெற உதவுமாறு வேண்டுகிறோம்.

மிக்க நன்றி.!
வாழ்க தமிழ்.!!


Saturday, April 3, 2021


உசன் மண்ணில் இருந்து முதலாவதாக இலங்கை நிர்வாகசேவையில் உயர் பதவி ஒன்றை அலங்கரித்த பெருமையை இன்று திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம்தர உத்தியோகத்தரான ஜே.எஸ்.அருள்ராஜ் தமது கடமைகளை மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்று பெற்றுகொண்டார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பட்டதாரியான இவர் 2003 ம்ஆண்டு இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவுசெய்யப்பட்டார்.

கிண்ணியா, சேருவல பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராகவும், முன்னர் இருந்த வடகிழக்கு மாகாண சபை மற்றும் கிழக்கு மாகாண சபை ஆகியவற்றிலும் கடமையாற்றியுள்ளார். வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர், கிழக்கு மாகாண தொழில் திணைக்கள பிரதி ஆணையாளர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையை பதவியேற்க முன்னர் இவர் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் பிரதேச செயலாளர்கள் அரச அலுவலர்கள் கலந்து சிறப்பித்தார்கள். 

இவர் தொடர்ந்தும் பல பதவி உயர்வுகளை பெற்று மேலும் உயர்ந்து மண்ணுக்குபெருமை சேர்க்க எமது வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கின்றோம்.

(இது ரூபன் அவர்களின் பதிவாகும்.)

இவர் உசன் இராமநாதன் மகா வித்தியாலய முன்னாள் அதிபர் ஜோன்பிள்ளை அவர்கள் மற்றும் பொன்னம்மா ஆசிரியை ஆகியோரின் மகனாவார்.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவும் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.