சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒரு சத்திரசிகிச்சைக் கூடம் ஆரம்பிப்பது தொடர்பாக March 28, 2021, ஞாயிற்றுக்கிழமை Toronto நேரம் காலை 10:30 மணிக்கு ஒரு கலந்துரையாடலை தென்மராட்சி அபிவிருத்திக் கழகம் (ஐக்கிய இராச்சியம்) ஏற்பாடு செய்துள்ளது. இதில் தாயக, புலம்பெயர்வாழ் தென்மராட்சி மக்கள், ஆர்வலர்கள், நலன்விரும்பிகள், துறைசார் அரசாங்க அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளார்கள்.
இந்த திட்டம் நிறைவேறினால் தற்போது அவசர சத்திர சிகிச்சைகளுக்காகவோ, உடனடி விபத்து அவசரநிலை சிகிச்சைகள் போன்ற பல்வேறு அவசர தேவைகளுக்கு சிரமங்களுக்கு மத்தியில் பல மைல் தூரம் செல்ல வேண்டிய நிலைமை தவிர்க்கப்பட்டு, உயிர்களும் காக்கப்படும். இதன்காரணமாக தென்மராட்சி பிரதேசவாழ் பல்லாயிரக்கணக்கான மக்கள் மட்டுமின்றி, சூழ வாழும் மக்களும் பயனடைவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமல்லாமல் தென்மராட்சி பிரதேச மக்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்பதும் ஒரு பயனுள்ள விடயம்.
இத்திட்டத்தை விரைவில் நிறைவேற்ற புலம்பெயர் வாழ் தென்மராட்சி மக்கள் எல்லோரதும் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றோம். ஆகவே இந்த திட்டம் பற்றி ஊரவர், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தி இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.
Date: Sunday, 28th of March 2021
Time:
10:30 a.m. (EDT, Toronto)
3:30 p.m. UK
4:30p.m. Europe
8:00 p.m. Sri Lanka
1:30 a.m. on Monday, March 29, 2021 Sydney, Australia
Zoom Link: https://us02web.zoom.us/j/9170245903
Meeting ID: 917 024 5903 (No password needed)
"காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது"
"Ask not what your country can do for you, ask what you can do for your country" John F. Kennedy
ஆகவே தென்மராட்சி வாழ் மக்களின் இந்த அத்தியாவசிய கோரிக்கையை நிறைவேற்ற ஒன்றிணைவோம்.
நன்றி.
தென்மராட்சி அபிவிருத்திக் கழகம் (ஐக்கிய இராச்சியம்)
இந்த நிகழ்வில் உசன் மண்ணின் மைந்தனான சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி, வைத்திய கலாநிதி சிவபாதம் சுதோகுமார் அவர்களும் கலந்துகொண்டு இந்த சத்திர சிகிச்சை நிலையத்துக்கான தேவை குறித்து கருத்துக்கூற உள்ளார். இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு சரியான தகவல்களைப் பெற்றுக்கொள்வதோடு அதனை மற்றவர்களோடும் பகிர்ந்துகொள்ள உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அனைவரையும் வேண்டி நிற்கிறது.