அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Monday, December 6, 2021

அமரர்
திருமதி நாகேஸ்வரி சிதம்பரநாதன்


பிறப்பு                இறப்பு
14.03.1947            01.12.2021

யாழ், உசன், மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், பண்டாரிகுளம் வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டு, கண்டாவளை மகாவித்தியாலயம், பளை மகாவித்தியாலயம், விடத்தற்பளை கமலாசனி வித்தியாலயம், உசன் இராமநாதன் மகாவித்தியாலயம், வவுனியா நெடுங்குளம் கலைமகள் மகாவித்தியாலயம், விபுலானந்தாக் கல்லூரி ஆகிய இடங்களில் சங்கீத ஆசிரியையாகக் கடமையாற்றிப் பல கலைஞர்களை உருவாக்கி ஓய்வு பெற்ற சங்கீத வித்துவான் திருமதி சிதம்பரநாதன் நாகேஸ்வரி அவர்கள் 01.12.2021, புதன்கிழமையன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற வல்லிபுரம் வைரவப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

சிதம்பரநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

நிதேனுகன், அமரர் நிலாவண்யன், கஜானி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பைரவி, பிரதாபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ருதீஷன், ஆகன்யன், பிரதாஜினி ஆகியோரின் பாசமிகு பேதியாரும்,

காலஞ்சென்ற இராஜேஸ்வரி, பரமேஸ்வரி, சிவபாக்கியநாதன், சிவசுந்தரம் மற்றும் கமலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், இராசையா, அன்னபூரணம் மற்றும் தவமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

01.12.2021 அன்று மாலை வவுனியா தட்ஷணாம்குளம் இந்து மயானத்தில் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

அன்னாரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்.

மதிப்புமிகு சங்கீத ஆசிரியை நாகேஸ்வரி அவர்களின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கிறது.  அதேவேளை அன்னாரின் பிரிவால் துவண்டுபோயிருக்கும் கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறது.


Sunday, December 5, 2021

மதிப்பளிப்பு நிகழ்வு

உசன் கிராம மட்ட அமைப்புக்கள் இணைந்து உசன் கிராம அலுவலர் அகல்யா வருண்ராஜ் அவர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்ச்சியினை 21.11.2021 அன்று
யா/உசன் இராமநாதன் மகாவித்தியால மண்டபத்தில் மாலை 4 மணிக்கு திரு அ.கஜீவன் தலைமையில் நடாத்தியுள்ளனர்.
தென்மராட்சி மட்ட கிராம உத்தியோகத்தர்களுக்கான அலுவலக முகாமைத்துவப் போட்டி 2020 இல் முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்டதற்காகவும், உசன் கிராமத்துக்கு அவர் வழங்கி வரும் சிறப்பான சேவைக்காகவும் இந்த நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக நிர்வாக கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலகம் தென்மராட்சி த.அருந்தமிழ்ச்செல்வன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. மழலைகளால் தேவாரம் இசைக்கப்பட்டதையடுத்து உசன் கந்தசுவாமி கோவில் பிரதம குரு சொல்வாக்குச் சித்தர் கேதீஸ்வரக் குருக்கள் அவர்களின் ஆசியுரை இடம்பெற்றது. செல்வன் மு. ஜதுர்ஸன் அவர்களால் உசன் கீதம் இசைக்கப்பட்டது.
வரவேற்புரையை செ. ஜதிகேசன் அவர்கள் நிகழ்த்தினார். தொடர்ந்து தலைமையுரை விழாத் தலைவர் அ.கஜீவன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அதனையடுத்து திரு.கு. கமலதாஸ், திரு.சு. சற்குணநாதன், திரு.இ. முருகதாஸ் மற்றும் வித்தியாலய முதல்வர் திரு சண்முகதாசன் ஆகியோரால் சிறப்புரைகள் வழங்கப்பட்டன.
தொடர்நது உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வின் வாழ்த்துச் செய்தி அ. கஜானன் அவர்களால் சபையில் வாசிக்கப்பட்டது.
பிரதம விருந்தினர் அவர்களின் உரையைத் தொடர்ந்து மதிப்பளிப்பு இடம்பெற்றது. முன்னைநாள் கிராம உத்தியோகத்தரும், எமது கிராமத்தவருமாகிய சுசீலாவதி செல்வநாயகம் அவர்கள் பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்க, திருமதி சி. பிரபாகரன் மற்றும் திருமதி த.சிவகுமாரன் ஆகியோரால் மாலை அணிவித்து மதிப்பளிக்கப்பட்டது.
நினைவுச் சின்னம் பிரதம விருந்தினரால் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.
தொடர்ந்து கிராம அலுவலர் அகல்யா வருண்ராஜ் அவர்களால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டது.
ந. ஜதுர்ஸன் அவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டதையடுத்து கிராம மக்கள் பலரும் கிராம அலுவலரை வாழ்த்தி கலந்துரையாடினர்.
வாழும்போதே வாழ்த்துவோம் என்ற கருப்பொருளுக்கமைய இந்த நிகழ்வு இடம்பெற்றது. உசன் கிராமமட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து இந்நிகழ்வை முன்னெடுத்தது ஒரு முன்மாதிரியாக அமைந்தது.































Tuesday, November 9, 2021

துயர் பகிர்வு - திருமதி புஷ்பராணி சிவலோகநாதன்


யாழ். கச்சாயைப் பிறப்பிடமாகவும், உசன், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புஷ்பராணி சிவலோகநாதன் அவர்கள் 03-11-2021 புதன்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சதாசிவம், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற வினாசித்தம்பி, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவலோகநாதன் அவர்களின் அருமை மனைவியும்,

கரன் (லண்டன்), ஜெகன் (லண்டன்), முரளி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தவமணி அம்பிகைபாகன், லீலாவதி செல்வரட்ணம், திலகவதி சாமுவேல் மற்றும் சோதிநாயகி பாலசுந்தரம் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கமலாதேவி(இலங்கை), இராசேந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ராதிகா, கஜேந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வினூஷா, கனிஷா, பவன், லக்சுமி, வாணி ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு

Friday, 12 Nov 2021 5:30 PM - 7:30 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom

Saturday, 13 Nov 2021 11:00 AM - 2:00 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom

கிரியை

Sunday, 14 Nov 2021 8:00 AM - 10:15 AM
Oshwal Ekta Centre 366A Stag Ln, London NW9 9AA, United Kingdom

தகனம்

Sunday, 14 Nov 2021 11:00 AM - 11:45 AM
Golders Green Crematorium 62 Hoop Ln, London NW11 7NL, UK

தொடர்புகளுக்கு
கரன் - மகன்
Mobile : +447956133136
ஜெகன் - மகன்
Mobile : +447970638105
முரளி - மகன்
Mobile : +447956288020
சோதி - சகோதரி
Mobile : +447957351603

இவர் ஓய்வு பெற்ற கணித ஆசிரியை ஆவார். யா/விடத்தற்பளை கமலாசனி வித்தியாலயம், யா/கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலயம், யா/உசன் இராமநாதன் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் இவர் தனது பணியைச் செவ்வனே செய்தார்.

முன்னாள் ஆசிரியை புஷ்பராணி அவர்களின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கும் அதேவேளை அன்னாரின் மறைவால் கவலையுற்றிருக்கும் குடும்பத்தினருக்கு அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

(இந்த அறிவித்தல் ripbook.com என்ற இணையத் தளத்திலிருந்து பிரதி செய்யப்பட்டுத் திருத்தம் செய்யப்பட்டது.)


Friday, November 5, 2021

Virtual Background


Please download this image and use as
Virtual Background for the "Usan Orungkinaiyam" event.

System requirements must be met to use this feature in Zoom.

Thanks.

Executive Committee
United People Association of Usan in Canada


இன்னும் சில மணி நேரத்தில்...............

இன்னும் சில மணி நேரத்தில் ஆரம்பமாக இருக்கிறது உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா மகிழ்வுடன் வழங்கும் சர்வதேச இணைய விழா "உசன் ஒருங்கிணையம்". இங்கே தரப்பட்டுள்ள இணைப்பினூடாக இணைந்து கொள்ளுங்கள். Join Zoom Meeting https://us02web.zoom.us/j/85638999908?pwd=dDVjK01UWC9haVZwcTBBSkR1ditTUT09 Meeting ID: 856 3899 9908 Passcode: usanpeople ஆரம்பிக்க இருக்கும் நேரம்: 8 a.m. EDT; 12 noon UK; 1 p.m. Europe; 5:30 p.m. Sri Lanka; 11 p.m. Sydney, Australia (இலண்டன், ஐரோப்பா, மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளின் நேர மாற்றத்தைக் கருத்தில் கொண்டே மேற்படி நேரங்கள் கணிக்கப்பட்டுள்ளன.) இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்! நன்றி. நிர்வாகசபை உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா


Wednesday, November 3, 2021

"உசன் ஒருங்கிணையம்" - சர்வதேச இணைய நிகழ்வு

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா மகிழ்வோடு வழங்கும் 
பல்சுவை நிகழ்ச்சிகளோடு "உசன் ஒருங்கிணையம்"

கலந்து சிறப்பிக்க அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்!










Tuesday, November 2, 2021

துயர் பகிர்வு - மாணிக்கம் சிவானந்தசோதி



                                                     மாணிக்கம் சிவானந்தசோதி
                                மலர்வு: 14 11.1952                         உதிர்வு: 28.10.2021

இவர் உசனைப் பிறப்பிடமாக கொண்டவரும், வீரக்கட்டியா வர்த்தகருமான மாணிக்கம் ஜெயலட்சுமி தம்பதிகளின்  அன்பு மகனும்,

மாலதியின் அன்புக்கணவரும்,

தெய்வானைப்பிள்ளை  (சுந்தரலிங்கம்,), செல்வநாயகி (சந்திரசேகரம்), சண்முகநாதன் (றாகினி), ஜெகசோதி (மாலதி), இராஜேஸ்வரி (ஜெயறூபன்), ஜெகநாதன்(கமலாதேவி), சிவபாலன் (சுபத்திரா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

றமணன்,லக்ஸ்மி ,சிவறமணி, லக்ஸ்மன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தர்மினி,கருணாகரன், கபிலன், பெபோறா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

றாம், அலக்ஸியா, வைஷ்ணவி, காசினி, கிருஷ்ணா, கைலாஸ், கரி, டேவ் ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்..

இவர் உசன், வீரக்கட்டியா (சண்முகஸ்ரோர்), பிரான்ஸ் ஆகிய இடங்களில் வாழ்ந்தவர் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்..

தகவல்
மா.ஜெகசோதி
சுவிஸ்
+41 62 293 2716

திரு சிவனந்தசோதி அவர்களின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கும் அதேவேளை, அவரின் பிரிவால் துவண்டுபோயிருக்கும் மனைவி, பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கிறது.


Saturday, October 30, 2021

"உசன் ஒருங்கிணையம்" - சர்வதேச இணைய நிகழ்வு

அன்பான உசன் உறவுகளே!

Saturday, November 6, 2021 அன்று நடைபெற உள்ள "உசன் ஒருங்கிணையம்"
சர்வதேச இணைய நிகழ்வுக்கு உங்களை அன்போடு அழைக்கிறோம்.

இங்கே தரப்பட்டுள்ள Zoom இணைப்பினூடாக இணைந்து கொள்ளுங்கள்.

இந்த இணைப்பை உங்கள் உறவுகளோடும், நண்பர்களோடும் பகிர்ந்து அவர்களையும் நிகழ்வில் கலந்து சிறப்பிக்க ஊக்கமளித்து இந்த நிகழ்வுக்கு ஆதரவு தருமாறு அன்போடு வேண்டுகிறோம்,

நேரம்: 8 a.m. EDT; 12 noon UK; 1 p.m. Europe; 5:30 p.m. Sri Lanka; 11 p.m. Sydney, Australia
(இலண்டன், ஐரோப்பா, மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளின் நேர மாற்றத்தைக் கருத்தில் கொண்டே மேற்படி நேரங்கள் கணிக்கப்பட்டுள்ளன.)

Join Zoom Meeting
Meeting ID: 856 3899 9908
Passcode: usanpeople

நன்றி.

நிர்வாகசபை
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா 


Sunday, October 24, 2021

துயர் பகிர்வு - கணபதிப்பிள்ளை இராமலிங்கம்

உசனைப் பிறப்பிடமாகவும், 166, 1 ஆம் குறுக்குத் தெரு யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை இராமலிங்கம் அவர்கள் October 22, 2021 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் கணபதிப்பிள்ளை சேதுப்பிள்ளை தம்பதியினரின் அன்புப் புதல்வரும்.

ஸ்கந்தகுமாரியின் அன்புக் கணவரும்,

பொன்னையா, செல்லத்துரை, சின்னத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

அபிராமி, சிவராமி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வைத்திய கலாநிதி நவநீதன், ஞானாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அரினி, நயனி, மாதவ், அனாயா ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் October 24, 2021 அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, தகனக் கிரியைகள் கோம்பயன்மணல் மயானத்தில் நடைபெற்றது.

தகவல்
மனைவி, பிள்ளைகள்
+94212223721

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கிறது.


Saturday, October 16, 2021

இளம் பாடகர்களை வாழ்த்துகிறோம்!


உசன் மண்ணைச் சேர்ந்த இன்னுமொரு சிறுமியின் இசைப் பிரவாகம் மனதைத் தொட்டுச் செல்கிறது. இளங்கீரன் - ரோகினி தம்பதியினரின் மகள் தியானா இளங்கீரன் தனது உடன் பிறவாச் சகோதரிகள் திருத்திகா சுகர்ணன் (UK) மற்றும் மதுஷிகா சுகர்ணன் (UK) ஆகியோருடன் இணைந்து வெளியிட்டுள்ள முதலாவது இசைக் காணொளி "கோடி தரம் பாடும் வரம்" விஜயதசமி தினமான October 14 அன்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

இசைக் குடும்பத்தின் வாரிசான தியானா தன் இசைத் திறமையை மென்மேலும் வளர்த்து திருத்திகா மற்றும் மதுஷிகா ஆகியோருடன் உச்சத்தைத் தொட உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வாழ்த்துகிறது.

நல்ல பாடல் வரிகள், நயமான இசையமைப்பு, அழகிய படப்பிடிப்பு, நேர்த்தியான ஒளிப்படத் தொகுப்பு, இனிமையான குரல் வளம் நிறைந்த இந்த இசைக் காணொளியை நீங்களும் பார்த்துப் பரவசமடைவதோடு இந்த இளம் கலைஞர்களுக்கு உங்கள் மனம் நிறைந்த வாழ்த்தைத் தெரிவியுங்கள்.


இவரின் பெற்றோர் கீரன், ரோகா மற்றும் தாய் வழிப் பெயர்த்தியார் ரஞ்சி வெற்றிவேலு மூவரும் இசைக் கலைஞர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


Tuesday, October 12, 2021

"உசன் ஒருங்கிணையம்"





அன்பார்ந்த உசன் மக்களே!
ஊரோடு ஒன்றிணைந்து உல்லாசமாய் உறவாட இன்னுமோர் இனிய சந்தர்ப்பம் - உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா மகிழ்வுடன் வழங்கும் "உசன் ஒருங்கிணையம்"
வாருங்கள், நம் வரலாறோடு வம்புகளும் பேசி மகிழ்ந்திருப்போம்!
இளையவர்களுக்கு எம்மூர் பெருமைகளை எடுத்துக்கூறுவோம்!
மறக்கமுடியா எம்மண்ணின் நினைவுகளை மனம் திறந்து பேசி மகிழ்வோம்!
எங்களுக்குள் இருக்கும் கலைத் திறமைகளையும் வெளிப்படுத்துவோம்!
Zoom செயலி வழியாக..........
திகதி: November 6, 2021, சனிக்கிழமை
நேரம்: 8 a.m. EDT; 12 noon UK; 1 p.m. Europe; 5:30 p.m. Sri Lanka; 11 p.m. Sydney, Australia
காலத்தைக் குறித்து வைத்து கலந்துகொள்ளுங்கள்.
"உசன் ஒருங்கிணையம்" நிகழ்வில் கலை நிகழ்வுகள் தர விரும்புபவர்கள் president@usan.ca என்ற மின்னஞ்சல் முகவரியில் உங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கவும். நேரடியாகவோ அல்லது ஒளிப்பதிவாகவோ உங்கள் நிகழ்ச்சிகளைத் தர முடியும். October 27, 2021, புதன் கிழமைக்கு முன்பாக ஒளிப்பதிவுகள் வந்தடைய வேண்டும்.
உங்கள் பிள்ளைகளையும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள ஊக்கமளியுங்கள்.
தொடர்புகளைத் தொலைத்து நிற்கும் உறவுகளையும், நட்புகளையும் தேடிப் போவோம்!
வாருங்கள், வாருங்கள் என்று உங்களை வாஞ்சையோடு அழைக்கிறோம்!
(Zoom செயலி இணைப்பு விபரம் பின்னர் தரப்படும்.)
நன்றி.
நிர்வாகசபை
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா
"Usan Orungkinaiyam - A Virtual Get Together"
Our Dearest Usan People!
United People Association of Usan in Canada proudly presents second virtual get together - "Usan Orungkinaiyam".
Let's celebrate the relationship that we have with our beloved village - Usan!
Let's exchange our fond memories!
Also showcase our talents!
Via Zoom meeting.................
Date: Saturday, November 6, 2021
Time: 8 a.m. EDT; 12 noon UK; 1 p.m. Europe; 5:30 p.m. Sri Lanka; 11 p.m. Sydney, Australia
Please mark your calendars.
Please let us know your desire to showcase your talents in "Usan Orungkinaiyam" by emailing at president@usan.ca. You can perform live or send us the recordings before Wednesday, October 27, 2021.
We cordially invite all, specially our younger generation. Get to know your roots.
See you all at the "Usan Orungkinaiyam".
Don't come alone, bring your relatives and friends.
(Zoom meeting invitation will be published closer to the event date.)
Thank you.
Executive Committee
United People Association of Usan in Canada.


Monday, September 6, 2021

துயர் பகிர்வு - அரியரட்ணம் பராசக்தி

உசனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பராசக்தி அரியரட்ணம் அவர்கள் 05.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் அரியரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
ரட்ணகலா (கலா), பார்த்தீபன் (மோகன்), பிரபாகரன் (பிரபா), சசிகலா (சசி), ரஜனிகாந்த் (காந்தன்) அவர்களின் அன்பு தாயாரும்,
தர்மகுலசிங்கம், கோமதி (மதி), சிவசீலா, கேதீஸ்வரன், அமுதா அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்,
குடும்பத்தினர் .
தொடர்புகளுக்கு
மோகன் +14165091715
கலா +94 77 305 4857
பிரபா +94 77 657 8032
சசி +94 76 917 4629
காந்தன் +94 77 024 2012

திருமதி பராசக்தி அரியரட்ணம் அவர்களின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கும் அதேவேளை அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறது.


Wednesday, September 1, 2021

பொதுக் கூட்டமும் கோடை கால ஒன்றுகூடலும்

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா நடாத்தும் வருடாந்தப் பொதுக்கூட்டமும், கோடை கால ஒன்றுகூடலும் இந்த வருடம் நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. ஒண்டாரியோ மாகாணத்தின் கோவிட்-19 சுகாதாரக் கட்டுப்பாடுகளுக்கு அமைவாக இந்த நிகழ்வு நடைபெறும்.
1. முக கவசம் அவசியம் அணிந்திருக்க வேண்டும்.
2. தனி நபர் இடைவெளி பேணப்பட வேண்டும்.
உங்களதும், உங்களைச் சார்ந்தவர்களதும் உடல் நலத்தைக் கருத்திலெடுத்து பங்குபற்றுவது குறித்த முடிவை நீங்களே எடுங்கள்.
திகதி: சனிக்கிழமை, September 4, 2021
நேரம்: காலை 10 மணி முதல்
இடம்: L'Amoreaux Sports Complex, Picnic Area A and Shelter
அண்மைய சந்தி: Finch Avenue and Birchmount Road
Finch Avenue இற்கும் McNicoll Avenue இற்கும் இடையில் Birchmount Road ஆல் உள்நுழைய வேண்டும்.
Kids Town Water Park அருகாமையில்.இருப்பதால் சிறுவர்கள் அதனையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
விளையாட்டுப் போட்டி இடம்பெறமாட்டாது.
வீட்டுக்குள் முடங்கிக்கிடந்த நாங்கள் எங்கள் உறவுகளைச் சந்தித்து மகிழ்வோம், வாருங்கள்.
நன்றி.
நிர்வாகசபை
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா
Annual General Meeting & Summer Get Together
The Annual Meeting and Summer Get Together of United People Association of Usan in Canada will be held on Saturday, September 4, 2021 at L'Amoreaux Sports Complex, Picnic Area A and Shelter
This event will adhere to the current Covid-19 Health Regulation of Ontario.
1. Please wear a face mask at all time.
2. Please keep a 2 meter physical distance.
Please consider your health and make an informed decision whether to participate or not.
Entrance is on Birchmount Road between Finch Avenue and McNicoll Avenue.
Closest intersection is Finch Avenue & Birchmount Road.
This picnic area is next to Kids Town Water Park. Bring your kids prepared to soak in the water.
We regret to inform you that there will be no sports meet due to the current health situation.
Let's have fun under the Sun.
Thank you.
Executive Committee
United People Association of Usan in Canada.