அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Sunday, December 27, 2020

துயர் பகிர்வு - ஓய்வுநிலை அதிபர் வரதராஜா


யாழ். அல்வாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், எழுதுமட்டுவாளை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை வரதராஜா அவர்கள் 27-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற குலசேகரம்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

துவாரகா (இலங்கை), வைகுந்தன் (கனடா), ஜசீத்தா (அவுஸ்திரேலியா), கஜீபன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவசிரோன்மணி (இலங்கை), ஜீவராஜா (நோர்வே) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

செல்வரஞ்சன் (ஆசிரியர்- யா/கைதடி விக்னேஸ்வரா வித்தியாலயம்), அபிராமி (கனடா), தயாளன் (அவுஸ்திரேலியா), கௌசிகா (இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சிவராசா (கனடா), அன்னலட்சுமி (கனடா), சிவரத்தினம் (இலங்கை) , இந்திராணி (இலங்கை), சிவானந்தம் (இலங்கை), சிவாகரன் (இலங்கை), சிவராணி (இலங்கை), சிவரூபன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சிந்துகன், கஜானன், தனுஜன், சாருஜன், அனுஸ்கா, அக்ஸயன், அகரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-12-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இராமியன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சிவபாக்கியம் - மனைவி
Mobile: +94774691699
துவாரகா - மகள்
Mobile: +94776846277
வைகுந்தன் - மகன்
Mobile: +14168756296
ஜசீத்தா - மகள்
Mobile: +61424161184
கஜீபன் - மகன்
Mobile: +9477577827

உசன் இராமநாதன் மகா வித்தியாலய வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த மதிப்புமிகு ஓய்வுநிலை அதிபர் வரதராஜா அவர்களின் மறைவு  உசன் மண்ணுக்கும் ஈடுசெய்ய முடியாத ஒன்று.

ஒரு கண்டிப்பான அதிபராக அவர் இருந்தாலும் அவரின் உள்ளம் மிகவும் இளகியது.மாணவர்களின் முன்னேற்றத்தில் அதீத அக்கறை கொண்டிருந்தவர். இவர் ஒரு நகைச்சுவையாளன், நாடக ஆசிரியர், நடிகர், சிறந்த மேடைப் பேச்சாளர்.  எல்லாவற்றையும் விட ஒரு மிக நல்ல மனிதர்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும் அதேவேளை அவரின் மறைவால் துவண்டுபோயிருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும், உறவினருக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

(இந்த மரண அறிவித்தல் www.ripbook.com என்ற இணையத்தளத்திலிருந்து பிரதி செய்யப்பட்டது.)