அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Thursday, December 31, 2020

துயர் பகிர்வு - நல்லதம்பி கணேசலிங்கம்



யாழ். உசன் மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், பாவற்குளம் 2ம் யூனிற், 2ம் குறுக்குத்தெரு வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி கணேசலிங்கம் அவர்கள் 31-12-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி, நாகமுத்து தம்பதிகளின் மூத்த மகனும்,

காலஞ்சென்ற செல்லையா, தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கலாநிதி (Coventry), குமணன் (Slough), கவிதினி (ஆசிரியை- வவுனியா), அகிலன் (Bromley) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கனகேஸ்வரி, கனகலிங்கம், கருணேஸ்வரி, கமலேஸ்வரி, விமலேஸ்வரி, அமிர்தலிங்கம், சுந்தரலிங்கம், இராசலிங்கம், அன்னலிங்கம் ஆகியோரின் மூத்த சகோதரரும்,

சிவபாக்கியம் அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

உருத்திரன், லதாங்கி, சந்திரதாசன், அபிராமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வல்லிபுரம், காலஞ்சென்ற புவனேஸ்வரி, வினாயகசேந்திரம், இராசரட்ணம், பாலசோதி, தயாநிதி, வசந்தி, சியாமளா, காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சரஸ்வதிபிள்ளை மற்றும் திருச்செல்வம், நகுலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யஸ்வினன், ஜிவேசன், லக்ஸ்மிதா, கிர்த்திக், சரண்யன், கிஷோபன், அகஸ்தினி, ஷானுயா, ரொஷீபன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-01-2021 வெள்ளிக்கிழமை அன்று இல.  201, 2ம் குறுக்குத் தெரு, வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குமணன் - மகன்
Mobile: +447886365846
அகிலன் - மகன்
Mobile: +447915815034
கலாநிதி - மகள்
Mobile: +447877456253
கவிதினி - மகள்
Mobile: +94774723549

உயர்திரு கணேசலிங்கம் அவர்களின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கும் அதேவேளை அன்னாரின் பிரிவால் கவலையுற்றிருக்கும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

(இந்த அறிவித்தல் www.ripbook.com என்ற இணையத் தளத்திலிருந்து பிரதி செய்யப்பட்டது.)


Tuesday, December 29, 2020

பரீட்ச்சார்த்த Zoom இணைப்பு - Experimental Zoom Meeting


உசன் உறவுகள் நிகழ்வுக்கான பரீட்ச்சார்த்த Zoom இணைப்பு
Zoom இணைப்பைப் பழகிக்கொள்வதற்காக இந்தப் பரீட்ச்சார்த்த இணைப்பு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. விரும்பியவர்கள் இணைந்து கொள்ளலாம். இந்தப் பரீட்ச்சார்த்த நிகழ்வு 30 நிமிடங்கள் இடம்பெறும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++
Usan Uravukal experimental Zoom meeting
This meeting has been arranged to familiarize with the Zoom meeting. Interested people may join this meeting which will be available for 30 minutes.
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா உங்களை Zoom meeting ஒன்றுக்கு அழைக்கிறது.
United People Association of Usan in Canada is inviting you to Zoom Meeting
+++++++++++++++++++++++++++++++++++++++++++
தலைப்பு: உசன் உறவுகள் நிகழ்வுக்கான பரீட்சார்த்த இணைப்பு
Topic: Experimental Meeting for Usan Uravukal
Date: Saturday, Jan 2, 2021
Times:
08:00 AM Eastern Time (US and Canada)
1:00 p.m. UK
2:00 p.m. Europe & Scandinavia
6:30 p.m. Sri Lanka
12:00 a.m. Sunday, January 3, 2020 - Sydney Australia
Meeting ID: 850 5640 2357
Passcode: usan
நன்றி.
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா


Sunday, December 27, 2020

துயர் பகிர்வு - ஓய்வுநிலை அதிபர் வரதராஜா


யாழ். அல்வாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், எழுதுமட்டுவாளை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை வரதராஜா அவர்கள் 27-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற குலசேகரம்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

துவாரகா (இலங்கை), வைகுந்தன் (கனடா), ஜசீத்தா (அவுஸ்திரேலியா), கஜீபன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவசிரோன்மணி (இலங்கை), ஜீவராஜா (நோர்வே) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

செல்வரஞ்சன் (ஆசிரியர்- யா/கைதடி விக்னேஸ்வரா வித்தியாலயம்), அபிராமி (கனடா), தயாளன் (அவுஸ்திரேலியா), கௌசிகா (இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சிவராசா (கனடா), அன்னலட்சுமி (கனடா), சிவரத்தினம் (இலங்கை) , இந்திராணி (இலங்கை), சிவானந்தம் (இலங்கை), சிவாகரன் (இலங்கை), சிவராணி (இலங்கை), சிவரூபன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சிந்துகன், கஜானன், தனுஜன், சாருஜன், அனுஸ்கா, அக்ஸயன், அகரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-12-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இராமியன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சிவபாக்கியம் - மனைவி
Mobile: +94774691699
துவாரகா - மகள்
Mobile: +94776846277
வைகுந்தன் - மகன்
Mobile: +14168756296
ஜசீத்தா - மகள்
Mobile: +61424161184
கஜீபன் - மகன்
Mobile: +9477577827

உசன் இராமநாதன் மகா வித்தியாலய வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த மதிப்புமிகு ஓய்வுநிலை அதிபர் வரதராஜா அவர்களின் மறைவு  உசன் மண்ணுக்கும் ஈடுசெய்ய முடியாத ஒன்று.

ஒரு கண்டிப்பான அதிபராக அவர் இருந்தாலும் அவரின் உள்ளம் மிகவும் இளகியது.மாணவர்களின் முன்னேற்றத்தில் அதீத அக்கறை கொண்டிருந்தவர். இவர் ஒரு நகைச்சுவையாளன், நாடக ஆசிரியர், நடிகர், சிறந்த மேடைப் பேச்சாளர்.  எல்லாவற்றையும் விட ஒரு மிக நல்ல மனிதர்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும் அதேவேளை அவரின் மறைவால் துவண்டுபோயிருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும், உறவினருக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

(இந்த மரண அறிவித்தல் www.ripbook.com என்ற இணையத்தளத்திலிருந்து பிரதி செய்யப்பட்டது.)


Saturday, December 26, 2020

திருமதி செல்லாச்சி பாலசிங்கம்
(ஓய்வு பெற்ற ஆசிரியர், சாவகச்சேரி மகளிர் கல்லூரி)




உசன், மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், கல்வயலை இருப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி செல்லாச்சி பாலசிங்கம் அவர்கள் 24.12.2020 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, தோரப்பிள்ளை தம்பதிகளின் மக்களும்,

காலஞ்சென்றவர்களான தம்பு, பாக்கியலட்சுமி தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் ஆசை மனைவியும்,

காலஞ்சென்றவர்களான வாரித்தம்பி, சிவபாக்கியம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மோகனலதா, கேதீஸ்வரன், பகீதரன், தர்சினி, ரேணுகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவஞானசுந்தரம், பாமா, சுதர்சினி, ரமணன், சுதேசன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அர்ஜுனா, கஸ்தூரி, மகேந்திரராஜ், மாதுரி, பிரணவன், தக்ஷனி, சுருதி, பிரதோஷ், சாசாங்கன், திவானி, மாதங்கி, சேயோன், ஆதவன், சஞ்சஜன், திவ்ஜானி ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,

பிரணீத், அஸ்விகா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

அமரர் முருகேசு, அமரர், வினாசித்தம்பி, அமரர் முத்துப்பிள்ளை, சிவயோகநாதன், இராமநாதர் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

அமரர் அன்னபூரணம், யோகம்மா, அமரர் சாவித்திரி, அமரர் மார்க்கண்டு, சரோஜினி, அமரர் பூபதி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 25.12.2020 வெள்ளிக்கிழமை இல.292, வைத்தியசாலை வீதி, களுபோவிலையில் உள்ள ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக் கிரியைகள் நடைபெற்று தகனக் கிரியைக்காக கல்கிசை பொது மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
இராமநாதர் +14166704031

குடும்பத்தினர்
இல. 16A, அத்தப்பத்து வீதி, தெஹிவளை 
+94777272133, +94773425906



Friday, December 11, 2020

"உசன் உறவுகள்"



உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வழங்கும் "உசன் உறவுகள்" நிகழ்வு Saturday, January 16, 2021 அன்று நடைபெறவுள்ளது என்பதை மகிழ்வாக அறியத் தருகிறோம். உள்ரங்கத்தில் இந்த நிகழ்வை நடத்த முடியாத நிலையில் மெய் நிழல் (virtual) நிகழ்வாக இது நடைபெறும்.  இம்முறை "உசன் உறவுகள்" நிகழ்வு உலகெங்கும் பரந்து வாழும் உசன் மக்களையும் அரவணைத்து இடம்பெறும். வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் எமக்கு உறவுகளையும், நட்புகளையும் சந்திப்பதற்கு இது ஒரு சந்தர்ப்பமாக அமைகிறது.

உலகெங்கும் வாழும் அனைத்து உசன் மக்களையும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கிறோம்.

பல நாடுகளையும் இணைக்க வேண்டிய நிலையில் பலரின் ஆலோசனைகளையும் கருத்தில்கொண்டு ஆரம்ப நேரம் முடிவு செய்யப்பட்டுள்ளது. Sydney, Australia மற்றும் New Zealand வாழ் உசன் மக்களே, உங்களுக்குத்தான் இந்த நேரம் பொருத்தமற்றதாக இருக்கும்.  முழு முயற்சி செய்து கலந்துகொள்ளுமாறு அன்போடு வேண்டுகிறோம்.

நிகழ்ச்சி நேரம் 
7 a.m. - Toronto, Montreal, East coast of USA.
12 noon - UK
1 p.m. - Europe, Scandinavia
5:30 p.m. - Sri Lanka
11 p.m. - Sydney (Australia)

Zoom இணைப்பினூடாக இந்த நிகழ்வு இடம்பெறும். இணைப்பின் விபரம் நிகழ்வுக்கு ஒருவாரம் முன்னதாக www.usan.ca என்ற எமது இணையத் தளத்திலும், usanpeople என்ற FaceBook தளத்திலும் வெளியிடப்படும்.

"உசன் உறவுகள்" நிகழ்வில் கலை நிகழ்ச்சி தர விரும்புவோர் secretary@usan.ca or president@usan.ca என்ற மின்னஞ்சல் ஊடாக December 31, 2020 இற்கு முன்னதாகத் தொடர்புகொள்ளவும்.

"உசன் உறவுகள்" நிகழ்வு சிறப்பாக அமைய உங்கள் ஒத்துழைப்பை நாடி நிற்கிறோம்.

ஊர் மக்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடி மகிழ்ந்திருப்போம்!

நிர்வாக சபை 
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

"USAN URAVUKAL"

We are very pleased to announce that the annual event "Usan Uravukal" organized by United People Association of Usan in Canada will be held on Saturday, January 16, 2021.  Due to the current situation this event will be a virtual one.  You can participate from the comfort of your home.

This time "Usan Uravukal" is not just for the Usan people who live in Canada  but for all the Usan people around the World.

We cordially invite all the Usan people to this virtual event.  Let's have good time.

We faced tremendous difficulty deciding the start time of this event as we need to accommodate different time zones around the World.  Finally with the opinion of many people, the time has been fixed as below.  We understand that it is not a good choice for the Usan people who live in Sydney (Australia) and New Zealand.  We kindly request you all to accommodate this time and participate in this event.

Event Start Times
7 a.m. - Toronto, Montreal, East coast of USA.
12 noon - UK
1 p.m. - Europe, Scandinavia
5:30 p.m. - Sri Lanka
11 p.m. - Sydney (Australia)

"Usan Uravukal" will be held via Zoom Meeting.  The Zoom link will be published a week before the event date in www.usan.ca and usanpeople FaceBook page.

Artists who would like to perform in this event, please email your desire at secretary@usan.ca or president@usan.ca, prior to December 31, 2020.

We are looking forward to a great event with the support of all Usan people around the World.

Let's celebrate our relationship!

Thank you all.

Executive Committee
United People Association of Usan in Canada