அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Friday, November 20, 2020

துயர் பகிர்வு
திருமதி நேசமலர் (தேவி) அருளானந்தம்


உசனைச் சேர்ந்த கந்தையா அரியரத்தினம் அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரி திருமதி நேசமலர் (தேவி) அருளானந்தம் அவர்கள் November 17, 2020 அன்று Scarborough, Ontario, Canada வில் காலமானார்.

இவர் காலஞ்சென்ற நல்லருளானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,

தயா, வினோ, தயாளன், குணாளன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அருண், நியோமி, ஜொனதன், லியாம், எல்சா ஆகியோரின் பேத்தியும்,

ஜாக்சனின் பூட்டியுமாவார்.

அவரின் வாழ்வைக் கொண்டாடும் நிகழ்வு சனிக்கிழமை, November 21, 2020 அன்று காலை 9:30 மணிக்கு 5438 Major Mackenzie Dr. E., Markham, ON, Canada என்ற முகவரியில் அமைந்துள்ள  Markham Missionary Church இல் இடம்பெறும்.

இந்த நிகழ்வை நேரலையாகப் பார்ப்பதற்கு www.markhamemc.ca என்ற இணையத்தளத்துக்குச் சென்று Watch Now என்பதை அழுத்தவும்.

திருமதி நேசமலர் நல்லருளானந்தம் அவர்களின் மறைவுக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது கவலையத் தெரிவித்துக்கொள்கிறது.