உசனைச் சேர்ந்த ஆசிரியர், கவிஞர் நந்தினி ஜென்சன் றொனால்ட் அவர்களின் படைப்பாக வெளிவருகிறது "பாவிசை" சிறுவர் பாடல் தொகுதி. தரம் ஒன்று முதல் தரம் 5 வரை கல்வி பயிலும் மாணவர்களை மனதில் நிறுத்தி இந்த நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. பாடலூடான கல்வி என்னும் முறையில் இளவயது மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த நூல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்நூலிலே சிறுவர் பாடல்கள் இருபத்தியிரண்டுடன், சுற்றாடல் பாடத்திட்டத்தின் 16 அலகுகளுக்கும் அலகுக்கு ஒரு பாடல் என்ற அடிப்படையில் 16 பாடல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்தச் சிறுவர் பாடல் தொகுதிக்கு தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் த. கிருபாகரன் அவர்கள் ஆசியுரை வழங்கியுள்ளார்.
இந்தப் புத்தகத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு அதன் ஆசிரியர் திருமதி நந்தினி உசன் பண்டிதர் சரவணமுத்து பொது நூலகத்தினூடாக உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் அனுசரணையை வேண்டி நிற்கிறார். இந்த நூலைப் பணம் கொடுத்து வாங்க முடியாத மாணவர்களுக்கு அனுசரணை மூலம் இந்த நூலை வழங்கி அந்த மாணவர்களின் முன்னேற்றத்துக்கு உதவுவதே ஆசிரியரின் நோக்கமாக உள்ளது.
இந்த நல்ல நோக்கத்திற்கு உதவ விரும்பும் புலம் பெயர் நலன் விரும்பிகள் ஒன்றியத்தின் செயலாளர் விஜயகுமாரி புஷ்பராஜாவையோ அன்றி தலைவர் சுப்பிரமணியம் பாஸ்கரனையோ தொடர்புகொண்டு தமது பங்களிப்பை வழங்க முடியும். உசனில் தமது பங்களிப்பை வழங்க விரும்புவோர் உசன் பண்டிதர் சரவணமுத்து பொது நூலக இணைப்பாளர் சரவணை செல்வராசா அவர்களினூடாக பங்களிக்க முடியும்.
இந்த உதவியை October மாதம் 31 ஆம் திகதிக்கு முன்பாக வழங்குமாறு வேண்டுகிறோம்.
ஆசிரியர், கவிஞர் நந்தினி அவர்களுக்கு இந்த நேரத்திலே உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.