அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Thursday, October 29, 2020

நவராத்திரி நிகழ்வு


உசன் பண்டிதர் சரவணமுத்து பொது நூலகத்தில் வருடம்தோறும் நடைபெற்றுவரும் நவராத்திரி நிகழ்வு இவ்வருடம் நூலக தலைவர் திரு கனகரத்தினம் தலைமையில் கடந்த சனிக்கிழமை, October 24, 2020 அன்று நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.

நூலக நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும், மாணவர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு  பூசையை உசன் கந்தசுவாமி கோவில் பிரதமகுரு, அருள்வாக்குச் சித்தர் கேதீஸ்வரக்குருக்கள் சிறப்பாக நடாத்திவைத்தார். அதனைத்தொடர்ந்து நூலகத்தில் வயலின் பயிலும் மாணவர்கள் அவர்களுடைய ஆசிரியரான திருமதி சிவகுமார் அவர்களின் நெறிப்படுத்தலில் வயலின் கச்சேரி ஒன்றினை நடத்தினர் அதனைத் தொடர்ந்து நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவேறின.















Wednesday, October 21, 2020

துயர் பகிர்வு - சின்னத்தம்பி நடராஜா



யாழ். விடத்தற்பளையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நடராஜா அவர்கள் 19-10-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான திரு.திருமதி பொன்னையா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கமணி அவர்களின் அன்புக் கணவரும்,

உதயகுமார் (கனடா), உதயகுமாரி (பிரித்தானியா), உதயராஜன் (சுவிஸ்), உதயமதி (பிரித்தானியா), உதயநிதி (கனடா), உதயரஜனி (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம், சின்னராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விமலா (கனடா), பாலச்சந்திரன் (பிரித்தானியா), கணதர்சினி (சுவிஸ்), றஞ்சன் (பிரித்தானியா), செல்வன் (கனடா), ரூபன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தவமணி, காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம், நாகலிங்கம், அன்னப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜனாத், அனோசன், ஜகிசன், பிரதீப், பிரகாஸ், ஜெனன், ஜெனிசன், திபிஷா, லிவிஷா, கீர்த்தனா- திருசாந், அபினா, தர்ஷிலா, மிதுஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,

அக்‌ஷரா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

நேரடி ஒளிபரப்பு:
Sunday, Oct. 25, 2020 8:00 AM

இறுதி மரியாதைக்கு: 
Saturday, Oct. 24, 2020 6:00 PM - 9:30 PM
Sunday, Oct. 25, 2020 8:00 AM - 9:00 AM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

கிரியை:
Sunday, Oct. 25, 2020 9:00 AM - 10:00 AM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

தொடர்புகளுக்கு
தங்கமணி - மனைவி
Mobile : +19057615076
குமார் - மகன்
Mobile : +14165695584
உதயன் - மகன்
Mobile : +41796113235
பவா - மகள்
Mobile : +447756282160
மதி - மகள்
Mobile : +447768744496
நிதி - மகள்
Mobile : +16477160246
ரஜனி - மகள்
Mobile : +14162309500

அமரர் நடராசா அவர்களின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா, அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், உறவினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையம் தெரிவித்துக்கொள்கிறது.

(இந்த அறிவித்தல் www.ripbook.com என்ற இணையத் தளத்திலிருந்து பிரதி செய்யப்பட்டது.)


Tuesday, October 20, 2020

"பாவிசை" சிறுவர் பாடல் தொகுதி


உசனைச் சேர்ந்த ஆசிரியர், கவிஞர் நந்தினி ஜென்சன் றொனால்ட் அவர்களின் படைப்பாக வெளிவருகிறது "பாவிசை" சிறுவர் பாடல் தொகுதி.  தரம் ஒன்று முதல் தரம் 5 வரை கல்வி பயிலும் மாணவர்களை மனதில் நிறுத்தி இந்த நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. பாடலூடான கல்வி என்னும் முறையில் இளவயது மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த நூல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்நூலிலே சிறுவர் பாடல்கள் இருபத்தியிரண்டுடன், சுற்றாடல் பாடத்திட்டத்தின் 16 அலகுகளுக்கும் அலகுக்கு ஒரு பாடல் என்ற அடிப்படையில் 16 பாடல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்தச் சிறுவர் பாடல் தொகுதிக்கு தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் த. கிருபாகரன் அவர்கள் ஆசியுரை வழங்கியுள்ளார்.


இந்தப் புத்தகத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு அதன் ஆசிரியர் திருமதி நந்தினி உசன் பண்டிதர் சரவணமுத்து பொது நூலகத்தினூடாக உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் அனுசரணையை வேண்டி நிற்கிறார். இந்த நூலைப் பணம் கொடுத்து வாங்க முடியாத மாணவர்களுக்கு அனுசரணை மூலம் இந்த நூலை வழங்கி அந்த மாணவர்களின் முன்னேற்றத்துக்கு உதவுவதே ஆசிரியரின் நோக்கமாக உள்ளது.

இந்த நல்ல நோக்கத்திற்கு உதவ விரும்பும் புலம் பெயர் நலன் விரும்பிகள் ஒன்றியத்தின் செயலாளர் விஜயகுமாரி புஷ்பராஜாவையோ அன்றி தலைவர் சுப்பிரமணியம் பாஸ்கரனையோ தொடர்புகொண்டு தமது பங்களிப்பை வழங்க முடியும். உசனில் தமது பங்களிப்பை வழங்க விரும்புவோர் உசன் பண்டிதர் சரவணமுத்து பொது நூலக இணைப்பாளர் சரவணை செல்வராசா அவர்களினூடாக பங்களிக்க முடியும்.

இந்த உதவியை October மாதம் 31 ஆம் திகதிக்கு முன்பாக வழங்குமாறு வேண்டுகிறோம்.



ஆசிரியர், கவிஞர் நந்தினி அவர்களுக்கு இந்த நேரத்திலே உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.