அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Friday, August 14, 2020

உசனிலிருந்து மற்றுமொரு வைத்திய கலாநிதி


உசன் மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக இன்னொமொரு வைத்திய கலாநிதி உருவாகியுள்ளார்.

அமரர்கள் சரவணமுத்து - செல்லம்மா தம்பதிகளின் பேரனும், யோகராஜா - தனலக்குமி ஆகியோரின் மகனுமான விதுஷன் இந்தப் பெருமையை உசனுக்குத் தந்துள்ளார்.

இவர் யா/ உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் கல்வி பொது தராதரம் (சாதாரணம்) (G. C. E. O/L) வரை கல்வி கற்றார். 5ஆம் வகுப்புப் புலமைப் பரிசில் தேர்வில் 138 மதிப்பெண்கள் பெற்ற இவர் கல்வி பொது தராதரம் (சாதாரணம்) தேர்வில் 7A2B என்ற பெறுபேற்றைப் பெற்றார். பின்னர் கல்வி பொது தராதரம் (உயர்தரம்) (G. C. E. A/L) கற்பதற்காக யா/ யாழ்.இந்துக் கல்லூரியில் சேர்ந்துகொண்ட விதுஷன் உயிரியல் துறையில் தனது கல்வியைச் சிறப்பாகத் தொடர்ந்தார்.  2012 இல் A/L தேர்வில் 2AB என்ற பெறுபேற்றைப் பெற்ற இவர் மாவட்த்தில் 23 ஆம் இடத்தைப் பிடித்துக்கொண்டார்.  2014 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மருத்துவ பீடத்திற்குள் நுழைந்து அங்கு சுமார் ஆறரை ஆண்டுகள் பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர்ந்து இறுதியாக 2020 ஆம் ஆண்டு July மாதம் MBBS இறுதிப் பரீட்சையில் சித்தி அடைந்தார்.


அவர் கல்வி மற்றும் தொழில் துறைகளில் மேலும் சாதனைகள் படைப்பார் என்பதில் ஐயமில்லை.


விதுஷனின் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் அவருக்கு இந்தச் சிறப்பை அளித்துள்ளது.  விதுஷனுக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது நல் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது. அத்தோடு அவருக்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்த அவரது பெற்றோரையும் பாராட்டுகிறது.