அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Sunday, July 5, 2020

துயர் பகிர்வு
அமரர் பெரியதம்பி இராஜரட்ணம்


எமது பெரு மதிப்புக்குரிய, பண்பாளர் பெரியதம்பி இராஜரட்ணம் அவர்கள் இறைவனடி சேர்ந்துவிட்ட துயரச் செய்தியை ஆழ்ந்த கவலையோடு பகிர்ந்துகொள்கிறோம்.  உசன் மக்கள் மத்தியில் மட்டுமல்ல அனைவரின் மத்தியிலும் பெரு மதிப்புமிக்க பெருமகனாக பூரண வாழ்வை வாழ்ந்து எங்களிடமிருந்து விடைபெற்றுச் சென்றுள்ளார். உசன் மண் ஒரு மகத்தான மனிதனை இழந்து தவித்து நிற்கிறது.

அந்த நற்குணமுடையோனின் இழப்பால் ஆளாத் துயரில் மூழ்கியிருக்கும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.  அனாரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறது.

நிர்வாகசபை
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா

யாழ். உசனைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பெரியதம்பி இராஜரட்ணம் அவர்கள் 05-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பெரியதம்பி, முத்துப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

ஆனந்தி, சுகந்தி, கிரிசாந்தி, உமா, இந்து, ரேவா, ரகு ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தெய்வேந்திரன், சிவகுமார், கனகேந்திரா, கேமலதா, பாலேந்திரா, துஸ்யந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், நாகமுத்து, செல்லத்துரை, ஐயாத்துரை, மகேஸ்வரி, சிவபாதசுந்தரம் மற்றும் பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதாரும்,

ஜெனிவன், சர்மிலி, கஸ்தூரி, ஜெய்சன், ஜனனி, ஆரணி, சொபி, ஆதவன், வித்தகன், அபிரா, மயூரா, சங்கீத், சங்கவி, திவ்வியா, டிவேஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சவீனா, சாஜனா, பிரணன், கயிலன், துர்ருவன், ரவின், அபரன், ஆர்ணவி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு 
Monday, 06 Jul 2020 2:00 PM - 5:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை 
Monday, 06 Jul 2020 5:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம் :
Monday July 6, 2020 @ 5:30 pm
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, ON, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
அன்னலட்சுமி - மனைவி
Mobile : +14165516901
உமா - மகன்
Mobile : +16478692441
கிரி - மகள்
Mobile : +33695077086
ரகு - மகன்
Mobile : +16048661088
இந்து - மகள்
Mobile : +16477063729
சுகந்தி - மகள்
Mobile : +16477862894
ரேவா - மகள்
Mobile : +16132926372  

(இந்த அறிவித்தல் https://www.ripbook.com என்ற இணையத் தளத்திலிருந்து பிரதி செய்யப்பட்டது.)