அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Monday, July 13, 2020

அமரர் கந்தையா திருநாவுக்கரசு


யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், உசனை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா திருநாவுக்கரசு அவர்கள் 13-07-2020 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற இராமநாதன், கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சிவலோகநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

ஐங்கரன்(கொழும்பு), கிருபாகரன்(துணுக்காய்), கருணாகரன்(யாழ்ப்பாணம்), கவிதா(சுன்னாகம்), சிவாகரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரேமலதா(கொழும்பு), சுபாசினி(துணுக்காய்), அபர்ணா(யாழ்ப்பாணம்), கேதீஸ்வரன்(சுன்னாகம்), அர்ப்பனா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நல்லம்மா, பரமானந்தம், செல்லம்மா மற்றும் சின்னம்மா(டென்மார்க்), திலகவதி(கனடா), சரஸ்வதி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சங்கீத், மாதுரி, திவ்யெஸ், சஞ்யெஸ், ரஜனி, பிரியங்கா, பிரதிகா, தக்‌ஷயா, லக்‌ஷயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உசன் ஈச்சங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சிவலோகநாயகி - மனைவி
+94212050195

ஐங்கரன் - மகன்
Mobile : +94775385383

கிருபாகரன் - மகன்
Mobile : +94773471065

கருணாகரன் - மகன்
Mobile : +94779449512

கவிதா - மகள்
Mobile : +94774409902

சிவாகரன் - மகன்
Mobile : +61401225582

(இந்த அறிவித்தல் www.ripbook.com என்ற இணையத்தளத்திலிருந்து பிரதி செய்யப்பட்டது.)

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடா பிரார்த்திக்கும் அதேவேளை மனைவி, பிள்ளைகளுக்கு அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.


Sunday, July 5, 2020

துயர் பகிர்வு
அமரர் பெரியதம்பி இராஜரட்ணம்


எமது பெரு மதிப்புக்குரிய, பண்பாளர் பெரியதம்பி இராஜரட்ணம் அவர்கள் இறைவனடி சேர்ந்துவிட்ட துயரச் செய்தியை ஆழ்ந்த கவலையோடு பகிர்ந்துகொள்கிறோம்.  உசன் மக்கள் மத்தியில் மட்டுமல்ல அனைவரின் மத்தியிலும் பெரு மதிப்புமிக்க பெருமகனாக பூரண வாழ்வை வாழ்ந்து எங்களிடமிருந்து விடைபெற்றுச் சென்றுள்ளார். உசன் மண் ஒரு மகத்தான மனிதனை இழந்து தவித்து நிற்கிறது.

அந்த நற்குணமுடையோனின் இழப்பால் ஆளாத் துயரில் மூழ்கியிருக்கும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.  அனாரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறது.

நிர்வாகசபை
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா


Wednesday, July 1, 2020

இடர்கால உதவித் திட்டத்தில் பங்கெடுத்தோருக்கு நன்றி


உசனில் மேற்கொள்ளப்பட்ட இடர் கால துயர் துடைப்பு நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளது. இந்தத் திட்டத்துக்காக உசன் பண்டிதர் சரவணமுத்து பொது நூலகம் ரூ.1,28,000.00 உம்,  உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா ரூ.4,16,000.00 உம் நிதியாகச் சேர்த்தன.  இதில் உசன் பண்டிதர் சரவணமுத்து பொது நூலகம் சேர்த்த நிதி கற்பிணிப் பெண்களுக்கும், அவர்களுடைய 5 வயதுக்குக் குறைந்த பிள்ளைகளுக்கும் சத்துணவு வழங்குவதற்காகப் பகிர்ந்தளிக்கப்பட்டது.  உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா சேர்த்த நிதி, வருமானம் குறைந்த 177 குடும்பங்களைச் சேர்ந்த 576 குடும்ப உறுப்பினர்களுக்கு உணவுப் பொருட்கள் வாங்குவதற்காக உறுதிச் சீட்டாக (voucher) வழங்கப்பட்டது.

இந்தத் உதவித் திட்டத்தில் பங்கெடுத்து நிதி வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.  தேவையறிந்து வழங்கப்பட்ட இந்த உதவி பயனாளிகளின் வாழ்வில் ஒரு மகிழ்ச்சியைக் கொண்டுவந்திருக்கும்.

இந்த நிதி சேகரிப்புக்குப் பங்களித்தோர் விபரம்:

அச்சுதன் கனகசுந்தரம்

$100.00

பாஸ்கரன் சுப்பிரமணியம்

$100.00

ஜெகதீஸ்வரன் சிதம்பரம்பிள்ளை

$25.00

ஜெயசங்கர் இரங்கநாதன்

$100.00

பரம்சோதி வேலுப்பிள்ளை

$100.00

பிரபானந்தன் வெற்றிவேலு

$500.00

சஞ்சிகா சுபேசன்

$100.00

சரவணமுத்து குடும்பம்

$208.72

சரோஜினி தேவபாலன்

$50.00

சாந்தினி சிவானந்தன்

$100.00

சிவகுமார் நவரத்தினம்

$200.00

தயாபரன் சித்தம்பரப்பிள்ளை

$100.00

திசீவன் நவரத்தினம்

$50.00

வரதகுமார் சிதம்பரம்பிள்ளை

$100.00

வேனுசன் யோகராசா

$100.00

விஜயகுமாரி புஷ்பராஜா

$100.00

ரஜனி மதீஸ்வரன்

$100.00

செமிலா பிரகலாதன்

$100.00

சின்னத்துரை குடும்பம்

$300.00

திருமதி பொன்னம்பலம் நினைவாக

$100.00

புஸ்பராணி சிவபாதம்

ரூ.16,000.00

கணேசானந்தன் சரவணமுத்து

ரூ.50,000.00



கேதீஸ்வர சர்மா

ரூ.10,000.00

சரவணா ஐயா

ரூ.10,000.00

சோ. ஸ்ரீகாந்தன்

ரூ.10,000.00

. ஜெபநாமகனேசன்

ரூ.10,000.00

. ஜெயராஜா

ரூ.10,000.00

சே. சஞ்சயன்

ரூ.10,000.00

மீரா தேவரஞ்சன்

ரூ.10,000.00

இந்துஜா சாரங்கன்

ரூ.10,000.00

பே. அரவிந்தன்

ரூ.10,000.00

சு. சற்குருநாதன்

ரூ.10,000.00

கு. கமலதாசன்

ரூ.7,000.00

சு. அருடப்பிரகாசம்

ரூ.5,000.00

து. ரேஜன்

ரூ.5,000.00

பொ. கனகரத்தினம்

ரூ.5,000.00

. செல்வராசா

ரூ.5,000.00

முருகேசு

ரூ.1,000.00


நிர்வாகசபை
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா