அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Sunday, April 19, 2020

இடர்கால உதவி - மேலதிக தகவல்


உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் இடர்கால உதவி நிதி சேகரிப்பு முன்பே அறிவித்தபடி April 18, 2020 ஆம் திகதியோடு நிறைவுக்கு வந்துள்ளது. எதிர்பார்த்த தொகையைவிட அதிகமாகவே நிதி கிடைத்துள்ளது மகிழ்ச்சியைத் தருகின்றது. அதே நேரம் உசனிலும் கணிசமான நிதி சேகரிக்கப்படுள்ளது. ஒன்றியத்தின் வேண்டுதலையேற்று பங்களிப்புச் செய்த அனைவருக்கும் மிகவும் நன்றி.
உசன் பண்டிதர் சரவணமுத்து பொது நூல்நிலையம், உசனில் இயங்கும் ஏனைய சேவை அமைப்புகளோடு இனணந்து இந்த இடர்கால உதவி வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. கிராமசேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் பொது சுகாதார உத்தியோகத்தர் ஆகியோர் வழங்கும் பெயர்ப் பட்டியல்களிலிருந்து பயனாளிகளைத் தெரிவு செய்வதற்காக 3 பேர் கொண்ட குழு ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டதும் கனடாவிலும், உசன் மண்ணிலும் சேகரிக்கப்பட்ட நிதி உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்படும்.
மேலதிக விபரங்கள் அவ்வப்போது பகிர்ந்துகொள்ளப்படும்.
நன்றி.
நிர்வாகசபை
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா