அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Sunday, April 12, 2020

இடர் கால உதவி


உலகம் முழுவதையும் உலுக்கி வரும் Covid-19 நுண் கிருமி (வைரஸ்) இலங்கையையும் விட்டுவைக்கவில்லை. இதன் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை அரசு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.  இதன் காரணமாக நாளாந்தம் வேலை செய்து அதன் மூலம் வரும் வருமானத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வரும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படியானவர்களுக்கு அரசாங்கம் உதவிகளைச் செய்து வந்தாலும் அந்த உதவிகள் அவர்களுக்குப் போதியதாக இல்லை.  சமுர்த்தி உதவி மற்றும் உதவிகள் எதுவும் கிடைக்காத தொழிலாளர்களும் உள்ளனர்.  இவர்களுக்கு உதவும் வகையில் சில தொண்டு நிறுவனங்களும், ஊர் அமைப்புகளும், புலம் பெயர்ந்து வாழும் உறவுகளும் நிதி சேகரித்து உணவுப் பொதிகளை வழங்கி வருகின்றன.

அந்த வகையிலே இப்படியான உதவியை வழங்குமாறு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  அந்த வேண்டுகோளை ஏற்று உசன் பண்டிதர் சரவணமுத்து பொது நூலகம் ஊடாக உதவிகளை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

உசன் மற்றும் அயற்கிராம மக்களுக்கு இந்த உதவி சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.  இதுவரை உதவிகள் எதுவும் கிடைக்காத பயனாளிகளுக்கு முன்னுரிமை கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.  கிராம சேவகர், பொது சுகாதார உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் ஆகியோர் மூலம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்த செயற்பாட்டை இரவிசங்கர் இரங்கநாதன், சரவணை செல்வராசா மற்றும் வைத்திய கலாநிதி ஜெபநாமகணேசன், ஆகியோர் முன்னின்று நிர்வகிப்பார்கள்.

இந்த இடர் கால உதவிக்கு நிதியுதவி வழங்க விரும்புவோர் ஒன்றியத்தின் தலைவர் பாஸ்கரன், செயலாளர் விஜயகுமாரி மற்றும் பொருளாளர் பத்மகாந்தன் ஆகியோருடன் தொடர்புகொண்டு உங்கள் பங்களிப்பை வழங்குமாறு வேண்டுகிறோம். நிதி உதவியை pathman.s1@hotmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு e-Transfer மூலம் அனுப்பிவைக்கவும். இந்த e-Transfer இற்குரிய password ஐ அதே மின்னஞ்சல் முகவரிக்கு தனிப்பட அனுப்பி வைக்கவும்.  e-Transfer மூலம் நிதி அனுப்ப முடியாதவர்களிடமிருந்து நேரடியாக நிதியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

எதிர்வரும் சனிக்கிழமை, April 18, 2020 அன்றுவரை சேரும் நிதி, உதவிக்காக அனுப்பி வைக்கப்படும்.

நன்றி.

நிர்வாகசபை
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா.