உசன் மற்றும் வரணியைச் சேர்ந்த சிவபாதசுந்தரம் சுரேந்திரன் அவர்கள் காலமானார்.
இவர் அமரர்கள் சிவபாதசுந்தரம் - சரஸ்வதி தம்பதியினரின் ஏக புத்திரராவார்.
இவர் ஒரு வானொலி அறிவிப்பாளராகவும், நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் கடமையாற்றியிருந்தார்.
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவோடு ஆரம்பகாலத்தில் இணைந்திருந்து சேவைகள் செய்தவர். அத்தோடு தென்மராட்சி அபிவிருத்தி நிறுவனம் - கனடாவின் தலைவராகவும் சேவை புரிந்தவர். இவரின் தந்தையார் அமரர் சிவபாதசுந்தரம் அவர்கள் ஒன்றியத்தின் நிர்வாக சபை உறுப்பினராகவும், பின்னர் காப்பாளராகவுமிருந்து ஒன்றியத்தின் வளர்ச்சிக்கு உதவியவர்.
அமரர் சுரேந்திரன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்திக்கிறது. அன்னாரின் பிரிவால் துயருறும் அன்னாரின் மனைவிக்கும், உறவினர்களுக்கும் அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.