வகுப்பில் கல்விகற்ற பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து.
தற்போது பாடசாலையில் கல்வி பயிலும் தெரிவு செய்யப்பட்ட 40 மாணவர்களுக்கு 40 சோடி காலணிகளும்,80 காலுறைகளும், தரம் ஒன்று மாணவர்களுக்கு 15 புத்தகப்பை களும்15 காலுறைகளையும் மனமுவந்து அன்பளிப்பு செய்ததை ஈழத்தில் வாழும் பழைய மாணவர்களான ஆசிரியர் திரு சு. சிவனொளிச்செல்வன் , ஆசிரியர் திருமதி கோமதி மதுராகரன்,பிரதி அதிபர் திரு இ.முருகதாஸ் ஆகியோரின் ஒழுங்கமைப்பிலும் வழங்கியுள்ளார்கள்.இவர்கள் அனைவருக்கும் எமது பாடசாலைச் சமூகம் நன்றியறிதலையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
1990 ம் ஆண்டில் உசனில் கல்விகற்ற இந்த பழைய மாணவர்கள் தற்போது உலகின் பல நாடுகளில் வாழுகின்ற போதும் அவர்கள் ஒன்றிணைந்து. மீண்டும் தமது பாடசாலையில் அக்கறை கொண்டு இந்த அன்பளிப்பை வழங்கி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உற்சாகம் வழங்கி உள்ளனர்.
இதே போன்று 1995 ம் ஆண்டு ஆண்டு 5 இல் கல்வி கற்ற பழைய மாணவர்கள் மற்றும் 1995 ல் O /L கற்ற பழைய மாணவர்கள் தொடர்ந்து இவ்வாறான பணிகளை செய்து வருகின்ற போது .. இதை பின் பற்றி மற்றைய பழைய மாணவர்களும் எமது பாடசாலையின் வளர்ச்சிக்கு உதவி புரிய வேண்டுமென பாடசாலை சமூகம் எதிர்பார்க்கிறது .
இந்த அன்பளிப்பை வழங்கிய 1990 ம் ஆண்டு உசன் இராமநாதன் மகா வித்தியாலையத்தில் A/L
வகுப்பில் கல்விகற்ற பழைய மாணவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்