அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Friday, January 31, 2020

மிக சிறப்பாக நடைபெற்ற இல்ல விளையாட்டு போட்டி -2020

 உசன் இராமநாதன் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி பாடசாலை மைதானத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது . பாரம்பரிய இன்னிய வாத்திய குழுமத்தின் வரவேற்புடன் நிகழ்வு ஆரம்பமானது.
பாடசாலை அதிபரின் தலைமையில் நடைபெற போட்டியில் அதிகளவு மக்களும் பழைய மாணவர்களும் கலந்து கொண்டு வீரர்களுக்கு உற்சாகம் வழங்கினான்ர்கள் .
இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றிய தலைவரும் பாடசாலையின் பழைய மாணவனுமான திரு.சுப்ரமணியம் பாஸ்கரன் நேரடியாக கலந்து கொண்டார் .
அவுஸ்டேலியாவிலிருந்து வருகை தந்திருந்த பழைய மாணவன் திரு.ஜெயந்தன் கௌரவ விருந்தினராக கலந்து விளையாட்டு போட்டியை சிறப்பித்திருந்தார்.
இந்த விளையாட்டு போட்டி நிகழ்வு சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எமது
மனமார்ந்த நன்றிகள்

























Saturday, January 25, 2020

யா/உசன் இராமநாதன் மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப்போட்டி-2020

யா/உசன் இராமநாதன் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி எதிர்வரும் 31-01-2020 வெள்ளிக்கிழமை பிற்பகல் 01.30க்கு பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த விளையாட்டுப்போட்டி சிறப்பாக நடைபெற பெற்றோர்,பாடசாலை பழைய மாணவர்கள்.ஆசிரியர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு வேண்டுகிறோம் . விளையாட்டு போட்டிக்கு தேவையான பசில்களை மற்றும் நன்கொடைகள்  நினைவு கேடையங்களை வழங்க விரும்புவோர் பாடசாலை நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளவும் .
இந்த விளையாட்டு போட்டி சிறப்பாக நடைபெற கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது 


Tuesday, January 21, 2020

திருமதி.சரஸ்வதி சுகுணபாலயோகன் அவர்களின் துயர் பகிர்வு


உசனை  சேர்ந்த முன்நாள் இ.போ.ச ஊழியர் திரு சுகுணபாலன் அவர்களின் அன்பு துணைவியார் திருமதி.சரஸ்வதி சுகுணபாலனன் அவர்கள் கனடாவில் காலமானார்.
 அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி கந்தப்பு தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி கார்த்திகேசு தம்பதிகளின் அன்பு மருமகளும்,

உசனை  சேர்ந்த முன்நாள் இ.போ.ச ஊழியர் திரு சுகுணபாலன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஷோபனா, காலஞ்சென்ற புகழினி, தர்மேந்திரா, சுகந்தினி, பிரமேந்திரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சண்முகநாதன், பிரமிளா, அகிலன், ரம்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தவமணி, பாலபரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்லத்துரை, சண்முகராஜா, லில்லி, ரதிமதி, பாலேந்திரா, பாலச்சந்திரன், ஜெயராணி, குலராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பவன், கஜினா, கஷ்மிகா, கிஷானா, ஆதவன், அஸ்வினி, எர்ஸா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
கிரியை Get Direction
தகனம் Get Direction


தகவல்: குடும்பத்தினர்
 
யோகன் - கணவர்
 
ஷோபனா - மகள்
 
தர்மேந்திரா - மகன்
 
பிரமேந்திரா - மகன்
 
சுகந்தினி - மகள்


Thursday, January 16, 2020

தை திருநாளில் உசன் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் அன்பளிப்பு

உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் 1990 ம் ஆண்டு A/L
வகுப்பில் கல்விகற்ற பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து.
தற்போது பாடசாலையில் கல்வி பயிலும் தெரிவு செய்யப்பட்ட 40  மாணவர்களுக்கு 40 சோடி காலணிகளும்,80 காலுறைகளும், தரம் ஒன்று மாணவர்களுக்கு 15 புத்தகப்பை களும்15 காலுறைகளையும் மனமுவந்து அன்பளிப்பு செய்ததை ஈழத்தில் வாழும் பழைய மாணவர்களான ஆசிரியர் திரு சு. சிவனொளிச்செல்வன் , ஆசிரியர் திருமதி கோமதி மதுராகரன்,பிரதி அதிபர்  திரு இ.முருகதாஸ் ஆகியோரின் ஒழுங்கமைப்பிலும் வழங்கியுள்ளார்கள்.இவர்கள் அனைவருக்கும் எமது பாடசாலைச் சமூகம் நன்றியறிதலையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
1990 ல் உயர்தரத்தில் கல்வி கற்ற கனடாவாழ் பழைய மாணவர்களான திருமதி D.ரேவதி குடும்பத்தினர்(CANADA), திரு E.நகுலேஸ்வரன்(CANADA), திருமதி.p.பவானி  திரு A. நிரஞ்சன் , திரு M.அனேஸ்லி , திரு V. கருணாகரன்(CANADA)பழைய மாணவர்களான ஆசிரியர் திரு சு. சிவனொளிச்செல்வன் , ஆசிரியர் திருமதி கோமதி மதுராகரன்,பிரதி அதிபர்  திரு இ.முருகதாஸ் ஆகியோரின் ஒழுங்கமைப்பிலும் வழங்கியுள்ளார்கள்.
1990 ம்  ஆண்டில் உசனில் கல்விகற்ற இந்த பழைய மாணவர்கள் தற்போது உலகின் பல நாடுகளில் வாழுகின்ற போதும் அவர்கள் ஒன்றிணைந்து. மீண்டும் தமது பாடசாலையில் அக்கறை கொண்டு இந்த அன்பளிப்பை வழங்கி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உற்சாகம் வழங்கி உள்ளனர்.
இதே போன்று 1995 ம் ஆண்டு ஆண்டு 5 இல் கல்வி கற்ற பழைய மாணவர்கள் மற்றும் 1995 ல் O /L  கற்ற பழைய மாணவர்கள் தொடர்ந்து இவ்வாறான பணிகளை செய்து வருகின்ற போது .. இதை பின் பற்றி மற்றைய பழைய மாணவர்களும் எமது பாடசாலையின் வளர்ச்சிக்கு உதவி புரிய வேண்டுமென பாடசாலை சமூகம் எதிர்பார்க்கிறது .
இந்த அன்பளிப்பை வழங்கிய 1990 ம் ஆண்டு உசன் இராமநாதன் மகா வித்தியாலையத்தில் A/L
வகுப்பில் கல்விகற்ற பழைய மாணவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்