தென்மராட்சி அபிவிருத்தி நிறுவனம் - கனடா நடாத்தும் "தென்மராட்சி கலை விழா" சனிக்கிழமை, October 26, 2019 அன்று இடம்பெற உள்ளது.
2017 ஆம் ஆண்டு பிரதேச முன்னேற்றம் குறித்து கரிசனை கொண்ட சிலரால் இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. கனடாவில் இயங்கி வரும் தென்மராட்சி சார்ந்த ஏனைய அமைப்புகளோடும் கை கோர்த்து பிரதேச வளர்ச்சிக்கு உதவுவதே இந்த நிறுவனத்தின் முதன்மை நோக்கமாகும். அதன் முதற்படியாக மாணவர்களின் முன்னேற்றமே பிரதேசத்தின் முன்னேற்றம் என்ற கருத்துக்கமைய மாணவர்களின் கல்வி நிலையை முன்னேற்றும் வழிவகைகளை ஆராய்ந்து அதற்கேற்ற நடவடிக்கைகளை இந்த நிறுவனம் முன்னெடுக்கவுள்ளது.
தென்மராட்சி அபிவிருத்தி நிறுவனம் - கனடாவை தென்மராட்சி மக்களிடம் எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக இந்த "தென்மராட்சி கலை விழா" ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. தென்மராட்சிக் கலைஞர்களின் பலவிதமான கலை நிகழ்ச்சிகளும் இந்த நிகழ்வில் உள்ளடக்கப்ட்டுள்ளன. உசன் கலைஞன் அஜந்தன் அவர்களின் கலை நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
இந்த நிறுவனத் தலைவர் V. S. துரைராஜா அவர்கள் அண்மையில் தென்மராட்சி சென்று தென்மராட்சி அபிவிருத்தி நிறுவனம் - இலங்கை என்ற நிறுவனத்தைப் புதுப்பித்திருந்தார். அங்கு எடுக்கப்படவிருக்கும் முன்னேற்ற நடவடிக்கைகளை இந்த நிறுவனமே நிர்வகிக்கும். அதன் செயலாளரும், சாவகச்சேரி இந்தக் கல்லூரியின் அதிபருமான நடராஜா சர்வேஸ்வரன் அவர்கள் "தென்மராட்சி கலை விழா"வின் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளவிருக்கிறார். அங்கு எடுக்கப்படவிருக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்த முக்கிய தகவல்களை இந் நிகழ்வில் அவர் பரிமாறிக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மராட்சிப் பிரதேசத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள இந்த நிறுவனத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டியது அந்தப் பிரதேசத்து கனடா வாழ் மக்கள் அனைவரினதும் கடைமையாகும். அந்த வகையில் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு உசன் மக்கள் அனைவரையும், மற்றும் கனடா வாழ் தென்மராட்சி மக்கள் அனைவரையும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்போடு கேட்டுக்கொள்கிறது.
இடம்: கனடா கந்தசாமி கோவில் மண்டபம்
733 Birchmount Road, Scarborough, M1K 1R5, ON.
திகதி: October 26, 2019, சனிக்கிழமை
நேரம்: மாலை 6:30 மணி.
நிகழ்வின் செலவுகளைப் பகிர்ந்துகொள்ளுமுகமாக நுழைவுக் கட்டணமாக $10.00 எதிர்பார்க்கப்படுகிறது.
வாருங்கள், முழு ஒத்துழைப்பு வழங்கி "தென்மராட்சி கலை விழா"வை வெற்றியடையச் செய்வோம்!