மதிப்புக்குரிய உறுப்பினர்களே,
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் வருடாந்தப் பொதுச் சபைக் கூட்டம் சனிக்கிழமை, August 24, 2019 அன்று 1555 Neilson Road, Scarborough, M1B 2P4, ON என்ற முகவரியில் அமைந்திருக்கும் Neilson Park இல் பிற்பகல் 1 மணியளவில் இடம் பெறும்.
நடப்பு நிர்வாகசபையின் ஆயுட்காலம் இந்த வருடத்தோடு முடிவுக்கு வருவதால் புதிய நிர்வாகசபைத் தெரிவும் இந்தப் பொதுக் கூட்டத்தில் இடம்பெறும்.
இந்தப் பதிவை உத்தியோக பூர்வ அழைப்பாக ஏற்று பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு புதிய நிர்வாகசபையையும் தெரிவு செய்யுமாறு உறுப்பினர்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
தற்போதைய நிர்வாகசபை கலைக்கப்பட்டு தற்காலிக தலைவர் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டு அவரின் தலைமையில் புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்படும். 11 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாகசபை தெரிவு செய்யப்பட வேண்டும். அந்தப் 11 நிர்வாகசபை உறுப்பினர்களும் முதலாவது நிர்வாகசபைக் கூட்டத்தில் தங்களுக்குள் பதவிவழி உறுப்பினர்களைத் தெரிவு செய்து பொதுச் சபைக்கு அறிவிப்பார்கள்.
விரும்பியவர்கள் 11 உறுப்பினர்களைக் கொண்ட குழுவாக தமது தெரிவைச் சமர்ப்பிக்கவேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்கள் போட்டியிடும் நிலையில் பொதுச் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு கூடுதல் வாக்குகளைப் பெறும் குழு தெரிவு செய்யப்படும்.
அன்பான உசன் மக்களே,
அதே தினத்தில் ஒன்றுகூடலும் இடம்பெறும். பொதுக்கூட்டம் பிற்பகல் 1 மணியளவில் ஆரம்பமாகும் என்றாலும் ஒன்றுகூடல் காலை 11 மணியளவில் ஆரம்பித்துவிடும் என்பதைக் கவனத்தில் எடுத்து அதற்கு முன்பே Neilson Park இற்கு வந்து சேருமாறு அன்போடு அழைக்கிறோம்.
ஒன்றுகூடலில் உதவியாளர்களாக சேவை செய்ய முன்வருமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம். உங்கள் விருப்பத்தைச் செயலாளரிடம் தெரிவிக்கவும்.
உசன் மற்றும் அயற்கிராம மக்கள், உசன் இராமநாதன் மகா வித்தியாலய முன்னாள் மற்றும் இந்நாள் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் அனைவரையும் ஒன்றுகூடலுக்கு அன்போடு அழைக்கிறோம்.
விஜயகுமாரி புஷ்பராஜா
செயலாளர்
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா
July 18, 2019.