சிறந்த கல்விமானும், வட மாகாண முன்னைநாள் சுகாதார பணிப்பாளருமான மதிப்புக்குரிய கந்தையா மாணிக்கம் அவர்கள் வியாழக்கிழமை, June 6, 2019 அன்று உசனில் அவரது இல்லத்தில் இறைவனடி எய்தினார் என்ற தகவலை ஆழ்ந்த கவலையோடு பகிர்ந்து கொள்கிறோம். இவர் காலஞ்சென்ற பூபதி அவர்களின் அன்புக் கணவனாவார்.
இறுதிக் கிரியைகள் இன்றைய தினமே உசனில் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அறியப்படுகிறது.
உசன் கிராமத்தின் வளர்ச்சியில் பெரும் அக்கறை கொண்டிருந்த இவர் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டார். உசனிலே இருக்கக்கூடிய பல அமைப்புகளுக்கும் ஆலோசகராகவும் இவர் சேவை புரிந்துள்ளார். உசன் கிராமத்துக்கு மட்டுமல்ல வட மாகாணத்தின் பல கிராமங்களுக்கும் இவரது சேவை கிடைத்துள்ளது. உசன் கந்தசாமி கோவிலோடு தன்னை இணைத்துக்கொண்ட இவர் ஒரு சிறந்த முருக பக்தனுமாவார்.
அண்மைக் காலமாக உடல் நலம் குன்றியிருந்த இவர் 94 ஆவது வயதில் இவ்வுலகை விட்டுப் பிரிந்துள்ளார்.
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்னாருக்கு தனது இறுதி வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.
தொடர்புகளுக்கு:
குகதாஸ் விமலதாஸ் - +94 77 347 4767
வல்லிபுரம் மனோகரன் - +94 77 285 0744