Sacrborough, Ontario, கனடாவில் 14 ஆவது ஆண்டில் கால் பதிக்கும் பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி தன்னை மேலும் விரிவுபடுத்துகிறது. இதன் ஒருபடியாக இதுவரை பரத நாட்டிய வகுப்புகளை நடத்திவந்த பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி வயலின் மற்றும் மிருதங்க வகுப்புகளை ஆரம்பித்துள்ளது என்பதை அதன் அதிபர் பரத கலா வித்தகர், நாட்டிய பூரணா திருமதி சியாமா தயாளன் அவர்கள் மகிழ்ச்சியோடு அறியத் தருகிறார்.
அத்தோடு மேலும் இரண்டு கிளைகளையும் அது ஆரம்பித்துள்ளது. Ajax மற்றும் North Oshawa ஆகிய நகரங்களில் இந்தக் கிளை நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 416 879 7068 & 416 823 0131 ஆகிய தொலைபேசி இலக்கங்களில் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
அத்தோடு எதிர்வரும் மாதங்களில் 5 நிகழ்வுகளை பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி நடாத்த உள்ளது.
"திருஷ்ய பரதம்"
வெள்ளிக்கிழமை, June 14, 2019
மாலை 7 மணி
J. Clarke Richardson Collegiate
1355 Harwood Avenue North, Ajax, ON, L1T 4G8
"லய பரதம்"
வெள்ளிக்கிழமை, July 26, 2019
மாலை 7 மணி
Fairview Library Theatre,
35 Fairview Mall Drive, North York, ON, M2J 4S4
"விஸ்மயம்"
சனிக்கிழமை, September 14, 2019
மாலை 5:30 மணி
Fairview Library Theatre,
35 Fairview Mall Drive, North York, ON, M2J 4S4
அரங்கேற்றம்
சனிக்கிழமை, September 28, 2019
மாலை 5:30 மணி
City Playhouse Theatre
1000 New Westminster Drive, Thornhill, ON, L4J 8G3
"நாட்டிய தீக்க்ஷ"
சனிக்கிழமை, November 17, 2019
மாலை 5:30 மணி
City Playhouse Theatre
1000 New Westminster Drive, Thornhill, ON, L4J 8G3
இந்த நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்து மாணவிகளை வாழ்த்துமாறு அதிபர் சியாமா தயாளன் அவர்கள் அன்போடு கேட்டுக்கொள்கிறார்.
14 ஆவது ஆண்டில் கால் பதிக்கும் பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரிக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.