அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Sunday, January 27, 2019

கனடா வாழ் உசன் உறவுகளின் குளிர்கால ஒன்றுகூடல் - “உசன் உறவுகள்”


சிறப்பாக நடைபெற்று முடிந்த “உசன் உறவுகள்” ஒன்றுகூடலுக்கு அணுசரணை வழங்கியவர்களிற்கும், தமது திறமைகளை வெளிப்படுத்தி நிகழ்ச்சிகளைத் தந்துதவியவர்களிற்கும், பல சிரமங்களின் மத்தியிலும் இந்நிகழ்விற்கு வருகைதந்து சிறப்பித்த உசன் உறவுகளிற்கும் மற்றும் பல்வேறு வழிகளிலும் உதவி செய்த அனைத்து உறவுகளிற்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.
அத்துடன் இனிவரும் காலங்களில் நடைபெறும் நிகழ்வுகளிற்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா உங்கள் அனைவரதும் ஒத்துளைப்பை நாடி நிற்கின்றது.

இந் நிகழ்வின் ஒளிப் படத் தொகுப்பினை usanpeople  என்னும் எமது FaceBook பக்கத்தில் பார்க்கலாம்.

நன்றி
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா


Sunday, January 13, 2019

tamilkadai.ca


கனேடியத் தமிழரின் மளிகைப் பொருட் கொள்வனவுக்கு இலகு வழி. வீட்டில் இருந்தவாறே உங்கள் பொருட் கொள்வனவை இணையத் தளம் மூலம் மேற்கொள்ள முடியும்.  January 14, 2019 முதல் சேவைகள் ஆரம்பம்.  பல கனேடிய முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் 1000 இக்கு மேற்பட்ட பொருட்களை நீங்கள் கொள்வனவு செய்ய முடியும்.  குளிருக்குள் அலைந்து திரியாமல், மிகவும் நியாயமான விலையில் மளிகைப் பொருட்களை  உங்கள் வீட்டு வாசலுக்கு வரவைக்கும் வசதி. பாதுகாப்பான பணம் செலுத்தும் முறை.

இணையத் தள முகவரி:  www.tamilkadai.ca
தொலைபேசியில் அழைக்க: 416-434-4440

உசன் மைந்தன் அஜந்தன் வெற்றிவேலுவின் மற்றுமொரு தொழில் முயற்சி. உசன் மண்ணின் மைந்தனுக்கு ஆதரவு வழங்குவோம்.

அஜந்தனின் இந்தத் தொழில் முயற்சி வெற்றியளிக்க உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வாழ்த்துகிறது.


Online Shopping opportunity for Canadian Tamils.  Order your groceries from the comfort of your home.  No need to bundle up for shopping this Winter season. Over 1000 items from many leading Canadian producers.  Reasonable price and secure payment method.  Service starts on January 14, 2019.

Visit www.tamilkadai.ca
To order over the phone: 416-434-4440

Son of Usan Ajanthan Vettivelu's business venture.  Please support his new beginning.

United People Association of Usan in Canada congratulates Aju and wishing him success.


Friday, January 11, 2019


பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி பெருமையுடன் வழங்கும் "நாட்டிய தீக்க்ஷ" நிகழ்வு January மாதம் 12 ஆம் திகதி சனிக்கிழமை அன்று இடம்பெறவுள்ளது.  1785 Finch Avenue West, North York, ON, M3N 1M6, Canada என்ற முகவரியில் அமைந்திருக்கும் Your Woods Library Theatre இல் சரியாக மாலை 5 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமாகும்.  "சிஷ்யனுக்கு குருவினால் வழங்கப்பட்ட ஆற்றல்" என்ற பொருளில் நடத்தப்படும் இந்த நிகழ்வு பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி அதிபர், பரத கலா வித்தகர், நாட்டிய பூரணா, திருமதி சியாமா தயாளன் அவர்களின் தயாரிப்பு, நெறியாள்கையில் இடம்பெற உள்ளது.  இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு  சியாமா அவர்கள் உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறார்.

இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வாழ்த்துகின்றது.

"NATYA DEEKSHA"

Bhaarati School of Indian Classical Dance proudly presents "NATYA DEEKSHA" - an evening filled with Bharathanatyam accompanied by live music, on January 12th, 2019, at York woods library theater.
Please take this as a personal invitation to this blissful event and bless the event with your presence.
(Doors open at 5.00pm)