அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Sunday, December 1, 2019

"உசன் உறவுகள்"
"Usan Uravukal"

கனடா வாழ் உசன் மக்கள் சார்பில் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா நடாத்தும் வருடாந்த குளிர் கால ஒன்றுகூடல் "உசன் உறவுகள்" நிகழ்வுக்கான நாள் குறிக்கப்பட்டுவிட்டது என்பதை மகிச்சியோடு அறியத் தருகிறோம்.

திகதி: சனிக்கிழமை, January 18, 2020.
நேரம்: மாலை 7 மணி.
இடம்: Baba Banquet Halls
3300 McNicoll Ave, Toronto ON M1V 5J6

இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு ஒன்றிய உறுப்பினர்களையும், உசன் மற்றும் அயற்கிராம மக்கள், உசன் இராமநாதன் மகா வித்தியாலய முன்நாள், இந்நாள் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

இந்த நிகழ்வை மேலும் சிறப்பாக்க உங்களின் ஆலோசனைகளை வேண்டி நிற்கிறோம். உங்கள் ஆலோசனைகளை வழங்க தலைவர் சுப்பிரமணியம் பாஸ்கரன் அவர்களுடன் 647-448-7434 என்ற தொலைபேசி இலக்கத்திலோ அல்லது president@usan.ca என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளவும்.

இந்த நிகழ்வில் கலை நிகழ்ச்சிகள் வழங்க விரும்புவோர் ஒன்றிய செயலாளர் விஜயகுமாரி புஸ்பராஜா அவர்களுடன் 416-845-8795 என்ற தொலைபேசி இலக்கத்திலோ அல்லது secretary@usan.ca என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளவும்.

நிகழ்வுக்கான செலவு அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. ஒன்றிய உறுப்பினர்களின் அங்கத்துவக் கட்டணம், உறுப்பினர்கள் அல்லாதோரிடமிருந்து பெறப்படும் அனுமதிக் கட்டணம் என்பன நிகழ்வை நடத்துவதற்குப் போதுமானதாக இல்லை. எனவே நிகழ்வுக்கு அனுசரணை என்பது நிச்சயமாகத் தேவைப்படுகிறது.  உசனைச் சேர்ந்த தொழில் வழங்குநர்கள் தம்மாலான நிதியை வழங்கி வந்தார்கள்.  கடந்த சில வருடங்களாக அதுவும் நின்றுவிட்டது.  அனுசரணையாளர்களை இதுவரை காலமும் நிர்வாகசபை உறுப்பினர்களே தேடிக் கண்டுபிடித்தார்கள். இந்த முறை ஒன்றிய உறுப்பினர்களையும் இந்தத் தேடலில் உதவுமாறு அன்போடு வேண்டி நிற்கிறோம். எத்தனையோ சேவை வழங்குநர்களிடம் நீங்கள் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்துகொள்கிறீர்கள். அவர்களை அனுசரணையாளர்களாக அழைத்து வரும் பொறுப்பை ஏற்குமாறு ஒன்றிய உறுப்பினர்களையும் மற்றும் உசன் மக்களையும் வேண்டி நிற்கிறோம். பார்வையாளர்கள் என்ற நிலையிலிருந்து பங்காளர்கள் என்ற நிலைக்கு மாறுமாறு வினயமாக வேண்டுகிறோம். உங்கள் அனுசரணையாளர்கள் பற்றிய தகவல்களைப் பொருளாளர் சரவணமுத்து பத்மகாந்தன் அவர்களிடம் 647-219 2027 என்ற தொலைபேசி இலக்கத்திலோ அல்லது treasurer@usan.ca என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தெரிவிக்கவும்.

உங்கள் தொடர்ச்சியான ஆதரவுக்கு இந்த நேரத்திலே நன்றி கூறுகிறோம்.

காலநிலை எப்படியிருந்தாலும் நிகழ்வு இனிதே நடைபெறும். இந்த நாளை மறக்காது நீங்கள் மட்டுமல்ல உங்கள் உறவுகளையும், நட்புகளையும் அழைத்து வாருங்கள்.

ஒன்றாய் கூடி ஒருமித்து மகிழ்ந்திருப்போம், வாருங்கள்.

நிர்வாகசபை
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா.



Saturday, November 30, 2019

பரிசில் நாள் நிகழ்வு


உசன் இராமநாதன் மகா வித்தியாலய பரிசில் நாள் நிகழ்வு November 30 திகதி, சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. வித்தியாலய முதல்வர் மற்றும் பழைய மாணவர் சங்கம் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு புலம்பெயர் வாழ் பழைய மாணவர்கள் ஒத்துழைப்பு வழங்கி இந்த நிகழ்வைச் சாத்தியமாக்கினர்.

வித்தியாலய முதல்வர் க. சண்முகதாஸ் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வுக்குப் பிரதம விருந்தினராக தென்மராட்சி வலய கல்வி அலுவலகத்தில் கல்வி அபிவிருத்தி பிரிவின் பிரதிக் கல்விப்பணிப்பாளராக இருக்கும் திருமதி சிவத்திரை சிவநாதன் அவர்கள் கலந்து கொண்டார். சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரியும், வித்தியாலயத்தின் பழைய மாணவருமான வைத்திய கலாநிதி சிவபாதம் சுதோகுமார் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இடைவிடாத மழை மற்றும் மின்வெட்டுக்கு மத்தியிலும் இந்த நிகழ்வு மிகவும் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிசில் நாள் நிகழ்வு சாத்தியமாவதற்குக் காரணமாக இருந்த வித்தியாலய முதல்வர், பழைய மாணவர் சங்கம் மற்றும் நிதி உதவி வழங்கிய நலன்விரும்பிகள் அனைவருக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடா தனது நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. பரிசு பெற்ற மாணவர்களையும் அது பாராட்டுகிறது.

























Saturday, November 16, 2019

ஐயாத்துரை கனகேஸ்வரி


திருமதி ஐயாத்துரை கனகேஸ்வரி அமரத்துவம் அடைந்துள்ளார்.
இவர் உசன் ஐயாத்துரை (மாத்தையா) அவர்களின் அன்பு துணைவியாராவர்.
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கும் அதேவேளை அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்ப உறுப்பினர்களுக்கு அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.



Sunday, October 6, 2019

தென்மராட்சி கலை விழா


தென்மராட்சி அபிவிருத்தி நிறுவனம் - கனடா நடாத்தும் "தென்மராட்சி கலை விழா" சனிக்கிழமை, October 26, 2019 அன்று இடம்பெற உள்ளது.

2017 ஆம் ஆண்டு பிரதேச முன்னேற்றம் குறித்து கரிசனை கொண்ட சிலரால் இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.  கனடாவில் இயங்கி வரும் தென்மராட்சி சார்ந்த ஏனைய அமைப்புகளோடும் கை கோர்த்து பிரதேச வளர்ச்சிக்கு உதவுவதே இந்த நிறுவனத்தின் முதன்மை நோக்கமாகும். அதன் முதற்படியாக மாணவர்களின் முன்னேற்றமே பிரதேசத்தின் முன்னேற்றம் என்ற கருத்துக்கமைய மாணவர்களின் கல்வி நிலையை முன்னேற்றும் வழிவகைகளை ஆராய்ந்து அதற்கேற்ற நடவடிக்கைகளை இந்த நிறுவனம் முன்னெடுக்கவுள்ளது.

தென்மராட்சி அபிவிருத்தி நிறுவனம் - கனடாவை தென்மராட்சி மக்களிடம் எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக இந்த "தென்மராட்சி கலை விழா" ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.  தென்மராட்சிக் கலைஞர்களின் பலவிதமான கலை நிகழ்ச்சிகளும் இந்த நிகழ்வில் உள்ளடக்கப்ட்டுள்ளன. உசன் கலைஞன் அஜந்தன் அவர்களின் கலை நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

இந்த நிறுவனத் தலைவர் V. S. துரைராஜா அவர்கள் அண்மையில் தென்மராட்சி சென்று தென்மராட்சி அபிவிருத்தி நிறுவனம் - இலங்கை என்ற நிறுவனத்தைப் புதுப்பித்திருந்தார். அங்கு எடுக்கப்படவிருக்கும் முன்னேற்ற நடவடிக்கைகளை இந்த நிறுவனமே நிர்வகிக்கும். அதன் செயலாளரும், சாவகச்சேரி இந்தக் கல்லூரியின் அதிபருமான நடராஜா சர்வேஸ்வரன் அவர்கள் "தென்மராட்சி கலை விழா"வின் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளவிருக்கிறார். அங்கு எடுக்கப்படவிருக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்த முக்கிய தகவல்களை இந் நிகழ்வில் அவர் பரிமாறிக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்மராட்சிப் பிரதேசத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள இந்த நிறுவனத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டியது அந்தப் பிரதேசத்து கனடா வாழ் மக்கள் அனைவரினதும் கடைமையாகும்.  அந்த வகையில் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு உசன் மக்கள் அனைவரையும், மற்றும் கனடா வாழ் தென்மராட்சி மக்கள் அனைவரையும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்போடு கேட்டுக்கொள்கிறது.

இடம்: கனடா கந்தசாமி கோவில் மண்டபம்
733 Birchmount Road, Scarborough, M1K 1R5, ON.
திகதி: October 26, 2019, சனிக்கிழமை
நேரம்: மாலை 6:30 மணி.

நிகழ்வின் செலவுகளைப் பகிர்ந்துகொள்ளுமுகமாக நுழைவுக் கட்டணமாக $10.00 எதிர்பார்க்கப்படுகிறது.

வாருங்கள், முழு ஒத்துழைப்பு வழங்கி "தென்மராட்சி கலை விழா"வை வெற்றியடையச் செய்வோம்!


Thursday, October 3, 2019

பரத தர்சனம்

Luzern, Switzerland பரததர்சனா நடனாலயத்தின் "பரத தர்சனம்" நடன நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை, October 6, 2019 அன்று பிற்பகல் 1 மணிக்கு இடம்பெறவிருக்கிறது. இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அதன் அதிபர் காயத்திரி திஷாந்தன் அனைவரையும், குறிப்பாக உசன் மக்களை, அன்போடு அழைக்கிறார்.

இது 15ஆவது ஆண்டு விழாவாக இடம்பெறவிருக்கிறது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ் உணர்வாளரும், ஊடகவியலாளருமான அருட் தந்தை ஜெகத் கஸ்பார் அடிகளார் கலந்து சிறப்பிக்கிறார்.


நடன ஆசிரியர் காயத்திரி இலங்கையில் நடன ஆசிரியர்களான திருமதி ராஜகுமாரி மற்றும் திருமதி சுபித்ரா ஆகியோரிடம் ஆரம்ப நடனக் கலையைக் கற்றுக்கொண்டார். இதன் பயனாக க. பொ. த. உயர் தரத்தில் விசேட சித்தி பெற்றார்.  பின்னர் இந்தியாவில் அடையார் இசைக் கல்லூரியில் முறைப்படி நடனக் கலையை கற்று தேர்ந்து "ஆடற் கலைமணி" மற்றும் "நாட்டிய விஷாதாரா" ஆகிய சிறப்புப் பட்டங்களைப் பெற்று முதலாம் தரத்தில் சித்திபெற்றார். பின்னர் அடையார் K. லக்ஷ்மன் மற்றும் அவரது சகோதரி நாகமணி ஆகியோரிடம் பயின்று அரங்கேற்றம் கண்டார்.

கடந்த 15 ஆண்டுகளாக Switzerland இல் Luzern மாநிலத்தில் நடனக் கலையைக் கற்பித்து வருகிறார்.  ஆரம்பத்தில் ஒரேயொரு மாணவியோடு ஆரம்பித்து இன்று 50 மாணவிகளோடு ரத தர்சனா என்ற நடனப் பள்ளியை சிறப்பாக நடாத்தி வருகிறார்.  Switzerland நாட்டில் அனைத்துலக தமிழ் லை நிர்வாகத்தினர் நடத்திவரும் பரீட்சைகளில் மாணவர்களை தரம் 5 வரை சித்தியடைய இவர் ஊக்குவித்து வருவதோடு "நாடிய மயில்" போட்டிகளிலும் பங்குபற்றி பாராட்டுதல்களைப் பெற்று வருகிறார்.

இவர் உசன் ரஞ்சிதமலர் வெற்றிவேலு தம்பதிகளின் மருமகள் என்பது குறிப்பிடத்தக்கது.


நடன ஆசிரியர் காயத்திரிக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பாராட்டுகளைத் தெரிவிப்பதோடு, இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற  தனது நல் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது.


Saturday, September 14, 2019

கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் புதிய நிர்வாகசபை கூட்டம்


கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் .நிர்வாகசபை கலைக்கப்பட்டு புதிய நிர்வாகசபை உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்ட நிலையில் . புதிய நிர்வாகசபையின் முதலாவது கூட்டம் டொரொன்டோடாவில் நடைபெற்றது. இதில் தொடர்ந்தும் திரு.சுப்பிரமணியம் பாஸ்கரன் அவர்கள் தலைவராக தெரிவுசெய்யப்பட்டார் . தொடர்ந்து தலைவர் திரு.சுப்பிரமணியம் பாஸ்கரன் அவர்களின் தலைமையின் கீழ் ஏனைய உறுப்பினர்களின் பதவி பொறுப்புகள் தெரிவுசெய்யப்பட்ட்துடன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது . தொடர்ந்தும் இந்த சங்கம் சிறப்பாக இயங்க அனைத்து உசன் மக்களையும் உசன் இராமநாதன் மஹா வித்தியாலய பழைய மாணவர்களின் ஒத்துழைப்பையும் நிர்வாகசபை வேண்டி நிக்கிறது








Thursday, September 12, 2019

மிருசுவில் புனித நீக்கிலார் தேவாலய பங்கு மக்களின் கோடை கால ஒன்று கூடல் 2019

கனடா வாழ் மிருசுவில் புனித நீக்கிலார் தேவாலய பங்கு மக்களின்கோடை கால ஒன்று கூடல் 2019 September மாதம் 14 ஆம் திகதி சனிக்கிழமை நண்பகல் 12 மணி முதல் Neilson Parkல் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. 

மதிய போசனம் மற்றும் BBQ பரிமாற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்தோடு விளையாட்டுப் போட்டிகளும் இடம்பெறும்.

அனைவரையும் தவறாது நேரத்திற்கு சமூகம் தந்து, தம்மாலான உதவிகளைச் செய்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இந்தத் தகவலை அனைத்து மிருசுவில் நீக்கிலார் தேவாலய பங்குமக்களுக்கும் அறியப்படுத்துமாறு அன்பாகக் கேட்டுகொள்கின்றோம்.

நன்றி !!!!.

தொடர்புகளுக்கு:
Wigna: 416-577-6761,
Dunston: (647) 989-2782,
Jansley: (416) 898-7830

Address:
Neilson Park - Scarborough, Area A & Shelter
1555 Neilson Rd,
Scarborough, ON,
M1B2P4
(Corner of Neilson Rd and Finch Ave)

கனடா வாழ் மிருசுவில் புனித நீக்கிலார் தேவாலய பங்கு மக்களின்கோடை கால ஒன்று கூடல் 2019 மிகவும் சிறப்பாக நடைபெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வாழ்த்துகளைத் தெரிவிக்கிறது. உசன் மக்களையும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.


Tuesday, September 10, 2019

"விஸ்மயம்"


வயது வித்தியாசமின்றி பல நடனக் கலைஞர்களை உருவாக்கிவரும் பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி வழங்கும் "நித்திய பார்வை" எனும் கருப்பொருளிலான "விஸ்மயம்",  இளையவர்கள் மூவரின் திறமைகளை வெளிக்கொணரும் ஒரு சிறப்பு நடன நிகழ்வு.

காலம்:  சனிக்கிழமை, September 14, 2019
நேரம்: மாலை 5:30 மணி
இடம்: Fairview Library Theatre, 35 Fairview Mall Dr., North York, ON, M2J 4S4

அனுமதிக் கட்டணம் எதுவுமில்லை.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு நடனத்தைக் கண்டு மகிழ்வதோடு இளம் கலைஞர்களை வாழ்த்தி உற்சாகப்படுத்துமாறு பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி அதிபர், பரத கலா வித்தகர், நாட்டிய பூரணா ஸ்ரீமதி சியாமா தயாளன் அவர்கள் அன்போடு வேண்டுகிறார்.

"விஸ்மயம்" சிறப்புற நடைபெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.



Friday, August 30, 2019

குமாரிக்கா சந்தனாதி எண்ணெய்


உசன் கிராமத்தில் பிறந்து, வளர்ந்து தனது இள வயதிலிருந்தே உசன் கிராம வளர்ச்சியில் தன்னை ஈடுபடுத்தி வருபவர் சீத்த ஆயுள்வேத வைத்தியர் ஐயாத்துரை ஜெபநாமகனேசன் அவர்கள். இவரின் வைத்திய சேவையால் உசன் கிராமமும், அயற்கிராமமும், ஏன் இலங்கையின் வட பகுதியைச் சேர்ந்த மேலும் பல கிராமங்களும், நகரங்களும் பயன்பெற்று வருகின்றன.  புலம் பெயர் தமிழர்களும் இவரின் சேவையைப் பெற்று பலனடைத்துள்ளனர்.

இவரின் தயாரிப்பில்  முற்றிலும் தரமான மூலிகைகள் கொண்டு, இரசாயணக் கலப்படமற்ற வகையில் தயாரிக்கப்பட்ட குமாரிக்கா சந்தனாதி எண்ணெய் இலங்கையில் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக பாவனையில் உள்ளது.

குமாரிக்கா சந்தனாதி எண்ணெய் நெல்லி, அவிரி, கையாந்தாரை, கறிவேப்பிலை, வல்லாரை, மருதாணி போன்ற மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்டது. தலை வலி போக்கவல்லது. முடி உதிர்தல், பொடுகு நீங்க, கூந்தல் கருமையாகும். தும்மல் நின்றுபோகும். கண்குளிர்ச்சி, ஞாபக சக்தி அதிகமாகும். நரை முடி நீங்கி ஆரோக்கியமான முடி வளரும். 

அதிகளவு கனேடிய தமிழ் மக்களும் பாவித்து பலன் கிடைத்தது.

இப்பொழுது கனடாவில் கிடைக்கிறது குமாரிக்கா சந்தனாதி எண்ணெய்.
நீங்களும் குமாரிக்கா சந்தனாதி எண்ணெயை வாங்கிப் பாவித்துப் பயன் பெறலாம்.

தொடர்புகளுக்கு
416-434-4440

www.tamilkadai.ca எனும் Online தளத்திலும் order செய்யலாம்.





Thursday, August 29, 2019

அஞ்சலி

உசன் இராமநாதன் மகா வித்தியாலய முன்னாள் கணித ஆசிரியர் ஆறுமுகம் சோதிலிங்கம் அவர்கள் காலமானார் என்ற தகவலை ஆழ்ந்த துயரத்தோடு பகிர்ந்து கொள்கிறோம். 1976 - 1982 காலப் பகுதியில் இவர் உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் கல்விப் பணி புரிந்தார்.

இவர் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மற்றும் கொழும்பு இந்துக் கல்லூரி ஆகியவற்றிலும் தனது கல்விச் சேவையை வழங்கியிருந்தார்.

அன்னாருக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கின்றது.


Thursday, July 18, 2019

பொதுச் சபைக் கூட்டமும், நிர்வாகசபைத் தெரிவும், ஒன்றுகூடலும்

மதிப்புக்குரிய உறுப்பினர்களே,

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் வருடாந்தப் பொதுச் சபைக் கூட்டம் சனிக்கிழமை, August 24, 2019 அன்று 1555 Neilson Road, Scarborough, M1B 2P4,  ON என்ற முகவரியில் அமைந்திருக்கும் Neilson Park இல் பிற்பகல் 1 மணியளவில் இடம் பெறும்.

நடப்பு நிர்வாகசபையின் ஆயுட்காலம் இந்த வருடத்தோடு முடிவுக்கு வருவதால் புதிய நிர்வாகசபைத் தெரிவும் இந்தப் பொதுக் கூட்டத்தில் இடம்பெறும்.

இந்தப் பதிவை உத்தியோக பூர்வ அழைப்பாக ஏற்று பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு புதிய நிர்வாகசபையையும் தெரிவு செய்யுமாறு உறுப்பினர்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

தற்போதைய நிர்வாகசபை கலைக்கப்பட்டு தற்காலிக தலைவர் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டு அவரின் தலைமையில் புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்படும். 11 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாகசபை தெரிவு செய்யப்பட வேண்டும். அந்தப் 11 நிர்வாகசபை உறுப்பினர்களும் முதலாவது நிர்வாகசபைக் கூட்டத்தில் தங்களுக்குள் பதவிவழி உறுப்பினர்களைத் தெரிவு செய்து பொதுச் சபைக்கு அறிவிப்பார்கள்.

விரும்பியவர்கள் 11 உறுப்பினர்களைக் கொண்ட குழுவாக தமது தெரிவைச் சமர்ப்பிக்கவேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்கள் போட்டியிடும் நிலையில் பொதுச் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு கூடுதல் வாக்குகளைப் பெறும் குழு தெரிவு செய்யப்படும்.

அன்பான உசன் மக்களே,

அதே தினத்தில் ஒன்றுகூடலும் இடம்பெறும்.  பொதுக்கூட்டம் பிற்பகல் 1 மணியளவில் ஆரம்பமாகும் என்றாலும் ஒன்றுகூடல் காலை 11 மணியளவில் ஆரம்பித்துவிடும் என்பதைக் கவனத்தில் எடுத்து அதற்கு முன்பே Neilson Park இற்கு வந்து சேருமாறு அன்போடு அழைக்கிறோம்.

ஒன்றுகூடலில் உதவியாளர்களாக சேவை செய்ய முன்வருமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம். உங்கள் விருப்பத்தைச் செயலாளரிடம் தெரிவிக்கவும்.

உசன் மற்றும் அயற்கிராம மக்கள், உசன் இராமநாதன் மகா வித்தியாலய முன்னாள் மற்றும் இந்நாள் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் அனைவரையும் ஒன்றுகூடலுக்கு அன்போடு அழைக்கிறோம்.


விஜயகுமாரி புஷ்பராஜா
செயலாளர்
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா
July 18, 2019.


Tuesday, July 16, 2019

திரு. வே. மார்க்கண்டு ஆசிரியர்


கல்வயலைப் பிறப்பிடமாகவும், உசனை வாழ்விடமாகவும், கடந்த 15 வருடங்களாக France இல் வசித்துவந்தவரும், உசன் இராமநாதன் மகா வித்தியாலய முன்னாள் ஆசிரியரும், எழுதுமட்டுவாள், மருதங்கேணி அரசினர் பாடசாலையின் முன்னாள் அதிபருமான வே. மார்க்கண்டு அவர்கள் July 16, 2019 அன்று தனது 87 ஆவது வயதில் France இல் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேதவனம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

கார்த்திகேசு நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ஆசிரியை முத்துப்பிள்ளை (முத்து ரீச்சர்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

வாசுகி அவர்களின் அன்புத் தந்தையும்,

சின்னையா நவரத்தினம் (சிவா) அவர்களின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான முருகேசு, பொன்னையா, இரத்தினம், ஆறுமுகம், மாணிக்கம் மற்றும் குமாரசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற முருகேசு, காலஞ்சென்ற விநாசித்தம்பி, சிவயோகநாதன் (நீர்வேலி), இராமநாதன் (கனடா), காலஞ்சென்ற சிவபாக்கியம், செல்லம்மா (கொழும்பு) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

நிகழ்வுகள்

இறுதி அஞ்சலி
PFG - SERVICES FUNÉRAIRES
9 Avenue de la République, 45500 Gien, France

Wednesday, 17 July 2019 3:00 PM - 6:00 PM
Thursday, 18 July 2019 3:00 PM - 6:00 PM
Friday, 19 July 2019 3:00 PM - 6:00 PM
Saturday, 20 July 2019 3:00 PM - 6:00 PM
Sunday, 21 July 2019 3:00 PM - 6:00 PM

கிரியை
PFG - SERVICES FUNÉRAIRES
9 Avenue de la République, 45500 Gien, France

Monday, 22 July 2019 10:00 AM - 12:00 PM

தகனம்
Crématorium d'Amilly-Montargis
400 rue Pisseaux, 45200 Amilly, France

Monday, 22 July 2019 2:30 PM

தொடர்புகளுக்கு

நவரத்தினம் - மருமகன்
Phone : +33238361446

வாசுகி - மகள்
Mobile : +33766585399
Mobile : +33652285495

இராமநாதன் - +14162996763

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திப்பதோடு, அன்னாரின் பிரிவால் துவண்டுபோயிருக்கும் குடும்பத்தினருக்கு அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.


Sunday, July 14, 2019

சுப்பிரமணியம் இரவீந்திரன்

உசனைப்  பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இரவீந்திரன் அவர்கள் July 8, 2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சுப்பிரமணியம், பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

கார்த்திகா (கனடா), தர்சிகா (கனடா), சுவீத்தா (கனடா), கிசாந் (கனடா),  கீர்த்திகா (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கணேசமூர்த்தி, இராதாகிருஸ்ணன், குகானந்தன், ஜெனனி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற தமீந்திரன், சுமிந்திரன், காலஞ்சென்ற சிறீதரன், திருச்சோதி, பிரகலாநிதி, பகீரதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகேந்திரன், பிரபாகரன், காலஞ்சென்ற தியாகராசா, பரமநாதன், கிருஸ்ணபிள்ளை, புஷ்பநாதன், சிவக்கொழுந்து, இரசலட்சுமி, சிவமணி, லோசனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆனந்தன், சிவராசா, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
மனோன்மணி, யோகேந்திராதேவி, தனேஸ்வரி, திலகா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அர்விந், அஸ்விதா, ரகீர்த்தா, அதுசன், அதுசனா, நகீரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, July 14, 2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாக்கியம் - மனைவி
Mobile : 19055544031

கிசாந் - மகன்
Mobile : +14168755494

தர்சிகா - மகள்
Mobile : +16476691910

சுவீத்தா - மகள்
Mobile : +16472726543

கீர்த்திகா - மகள்
Mobile : +447931693622

சகோதரி
Mobile : +94776134528

அன்னாரின் ஆன்ம சாந்திக்காக உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்திக்கிறது.

(இந்தத் தகவல் www.ripbook.com என்ற இணையத் தளத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது.)


Thursday, July 11, 2019

கணபதிப்பிள்ளை சிவானந்தசோதி

உசனைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Harrow ஐ வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவானந்தசோதி அவர்கள் July 9, 2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, செங்கமலம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும்,

சற்குணராஜா மங்கையற்கரசி (கிளி) தம்பதிகளின் மூத்த மருமகனும்,

கல்பனா அவர்களின் அன்புக் கணவரும்,

கஸ்தூரி மகி, பிரியதர்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

றஜீவ்குமார் அவர்களின் அன்பு மாமனாரும்,

கமலாம்பிகை, விமலாம்பிகை, சிவப்பிரகாசம், சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜசிறி, விஜயசிறி, திருக்குமார், ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் தகனக் கிரியைகள் July 14, 2019, ஞாயிற்றுக்கிழமை அன்று Holders Hill Road, London  NW7 1NB என்ற முகவரியில் அமைந்திருக்கும் Hendon Cemetery & Crematorium இல் இடம்பெறும்.

அமரர் சிவானந்தசோதி அவர்களின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திப்பதோடு, அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.



Tuesday, June 18, 2019

விடத்தற்பளை மக்கள் ஒன்றியம் - கனடா

விடத்தற்பளை மக்கள் ஒன்றியம் - கனடாவின்

ஆண்டுப் பொதுக்கூட்டமும், கோடைகால ஒன்றுகூடலும் - 2019!
விடத்தற்பளை மக்கள் ஒன்றியம் - கனடாவின் ஆண்டுப் பொதுக் கூட்டமும், ஒன்றுகூடலும் ஞாயிற்றுக்கிழமை, June 23, 2019 அன்று ​​1555 Neilson Rd, Scarborough, ON M1B 5Z7 என்ற முகவரியில் அமைந்திருக்கும் Neilson Park இல் காலை 10:30 மணிக்கு ஆரம்பமாகும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்!

எங்கள் ஒன்றுகூடலில் கலந்து மகிழ உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்! உங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்து வருமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்!

நன்றி!

நிர்வாகசபை
விடத்தற்பளை மக்கள் ஒன்றியம் - கனடா



The Annual General Meeting and the Summer Get Together

of the People Association of Vidaththatpalai - Canada 2019!

The Annual General Meeting of The People Association of Vidaththatpalai - Canada, will be held at approximately 10:30am on Sunday, June 23, 2019 at Neilson Park located at ​1555 Neilson Rd, Scarborough, ON M1B 5Z7.

We sincerely invite all the Vidaththatpalai people, the neighboring villagers and the well wishers to participate in our get together! And also feel free to bring your friends and family!

Thank you!

Executive Committee
The People Association of Vidaththatpalai - Canada

விடத்தற்பளை மக்கள் ஒன்றியம் கனடாவின் கோடைகால ஒன்றுகூடல் சிறப்பாக நடைபெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது. இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அது உசன் மக்களைக் கேட்டுக்கொள்கிறது.


Monday, June 10, 2019

"திருஷ்ய பரதம்"


Sacrborough, Ontario, கனடாவில் 14 ஆவது ஆண்டில் கால் பதிக்கும் பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி வழங்கும் நாட்டியத்தின் மூலம் ஒரு பார்வை எனும் கருப்பு பொருளில் "திருஷ்ய பரதம்" .  10 வயது முதல் 13 வயது வரையான இளம் நடனக் கலைஞர்களின் ஒரு சிறப்பு நடனம்.  உங்கள் கலைப் பசிக்கு ஒரு பெரு விருந்து.

காலம்:  வெள்ளிக்கிழமை, June 14, 2019
நேரம்: மாலை 7 மணி
இடம்: J. Clarke Richardson Collegiate
1355 Harwood Avenue North, Ajax, ON, L1T 4G8

நிகழ்வுக்கு பக்கவாத்தியம் வழங்கும் திறமை வாய்ந்த கலைஞர்கள்:
பாட்டு: ஸ்ரீ அருண் கோபிநாத்
மிருதங்கம்: ஸ்ரீ ரதிரூபன் பரம்சோதி
வயலின்: ஸ்ரீ ஜெயதேவன் நாயர்
நட்டுவாங்கம்: ஸ்ரீமதி சியாமா தயாளன்

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு நடனத்தைக் கண்டு மகிழ்வதோடு இளம் கலைஞர்களை வாழ்த்துமாறு பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி அதிபர் ஸ்ரீமதி சியாமா தயாளன் அவர்கள் அன்போடு வேண்டுகிறார்.

"திருஷ்ய பரதம்" சிறப்புற நடைபெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.


The disciples and Guru Smt. Shiyama Thayaalan of Bhaarati School of Indian Classical dance are honoured to present DRISHYA BHARATHAM - "Vision through Natyam", On June 14th, 2019.

Young dancers who are 10-13 years of age have put in a tremendous amount of effort to put together this spectacle. The Drishya Bharatham team invites you to enjoy this showcase of dance.

The talented and well known orchestra accompanying this show:
Vocal: Shri. Arun Gopinath
Mirdangam: Shri. Rathiruban Paramsothy
Violin: Shri Jayadevan Nair.
Nattuwangam: Smt. ShiyamaThayaalan.



Wednesday, June 5, 2019

வைத்திய கலாநிதி திரு கந்தையா மாணிக்கம்

சிறந்த கல்விமானும், வட மாகாண முன்னைநாள் சுகாதார பணிப்பாளருமான மதிப்புக்குரிய கந்தையா மாணிக்கம்  அவர்கள் வியாழக்கிழமை, June 6, 2019 அன்று உசனில் அவரது இல்லத்தில் இறைவனடி எய்தினார் என்ற தகவலை ஆழ்ந்த கவலையோடு பகிர்ந்து கொள்கிறோம்.  இவர் காலஞ்சென்ற பூபதி அவர்களின் அன்புக் கணவனாவார்.

இறுதிக் கிரியைகள் இன்றைய தினமே உசனில் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அறியப்படுகிறது.

உசன் கிராமத்தின் வளர்ச்சியில் பெரும் அக்கறை கொண்டிருந்த இவர் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டார்.  உசனிலே இருக்கக்கூடிய பல அமைப்புகளுக்கும் ஆலோசகராகவும் இவர் சேவை புரிந்துள்ளார்.  உசன் கிராமத்துக்கு மட்டுமல்ல வட மாகாணத்தின் பல கிராமங்களுக்கும் இவரது சேவை கிடைத்துள்ளது.  உசன் கந்தசாமி கோவிலோடு தன்னை இணைத்துக்கொண்ட இவர் ஒரு சிறந்த முருக பக்தனுமாவார்.

அண்மைக் காலமாக உடல் நலம் குன்றியிருந்த இவர் 94 ஆவது வயதில் இவ்வுலகை விட்டுப் பிரிந்துள்ளார்.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்னாருக்கு தனது இறுதி வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

தொடர்புகளுக்கு:
குகதாஸ் விமலதாஸ் - +94 77 347 4767
வல்லிபுரம் மனோகரன் - +94 77 285 0744


Saturday, May 18, 2019

பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி


Sacrborough, Ontario, கனடாவில் 14 ஆவது ஆண்டில் கால் பதிக்கும் பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி தன்னை மேலும் விரிவுபடுத்துகிறது. இதன் ஒருபடியாக இதுவரை பரத நாட்டிய வகுப்புகளை நடத்திவந்த பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி வயலின் மற்றும் மிருதங்க வகுப்புகளை ஆரம்பித்துள்ளது என்பதை அதன் அதிபர் பரத கலா வித்தகர், நாட்டிய பூரணா திருமதி சியாமா தயாளன் அவர்கள் மகிழ்ச்சியோடு அறியத் தருகிறார்.  


அத்தோடு மேலும் இரண்டு கிளைகளையும் அது ஆரம்பித்துள்ளது.  Ajax மற்றும் North Oshawa ஆகிய நகரங்களில் இந்தக் கிளை நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  416 879 7068 & 416 823 0131 ஆகிய தொலைபேசி இலக்கங்களில் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.



அத்தோடு எதிர்வரும் மாதங்களில் 5 நிகழ்வுகளை பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி நடாத்த உள்ளது.


"திருஷ்ய பரதம்"
வெள்ளிக்கிழமை, June 14, 2019
மாலை 7 மணி 
J. Clarke Richardson Collegiate
1355 Harwood Avenue North, Ajax, ON, L1T 4G8

"லய பரதம்"
வெள்ளிக்கிழமை, July 26, 2019
மாலை 7 மணி 
Fairview Library Theatre,
35 Fairview Mall Drive, North York, ON, M2J 4S4

"விஸ்மயம்"
சனிக்கிழமை, September 14, 2019
மாலை 5:30 மணி 
Fairview Library Theatre,
35 Fairview Mall Drive, North York, ON, M2J 4S4

அரங்கேற்றம்
சனிக்கிழமை, September 28, 2019 
மாலை 5:30 மணி 
City Playhouse Theatre
1000 New Westminster Drive, Thornhill, ON, L4J 8G3

"நாட்டிய தீக்க்ஷ"
சனிக்கிழமை, November 17, 2019
மாலை 5:30 மணி 
City Playhouse Theatre
1000 New Westminster Drive, Thornhill, ON, L4J 8G3

இந்த நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்து மாணவிகளை வாழ்த்துமாறு அதிபர் சியாமா தயாளன் அவர்கள் அன்போடு கேட்டுக்கொள்கிறார்.

14 ஆவது ஆண்டில் கால் பதிக்கும் பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரிக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.


Monday, March 4, 2019

மரண அறிவித்தல்
முருகேசு சரவணமுத்து அவர்கள்

உசனை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு முருகேசு சரவணமுத்து அவர்கள் 02.03.2019 சனிக்கிழமை அன்று இறைவனடிசேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற முருகேசு ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற விநாசித்தம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற செல்லம்மாவின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சின்னத்துரை¸கணேஸ் ஆகியோரின் சகலனும்,
காலஞ்சென்ற காமாட்சி¸நவமணி ஆகியோரின் மைத்துனரும்,
சாந்தலக்குமி(இலங்கை)¸ சிறிகாந்தன் (இத்தாலி)¸ நந்தலக்குமி (இலங்கை)¸ தனலக்குமி (ஆசிரியை – யா.செட்டித்தெரு மெ.மி.த.க பாடசாலை)¸ பத்மகாந்தன் (கனடா)¸ ஜீவகாந்தன் (இத்தாலி)¸ முருகானந்தன் (பொறியலாளர் - அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்லத்துரை (இளைப்பாறிய Foreman இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனம்), சந்திராதேவி (இலங்கை), காலஞ்சென்ற ஞானதேவி, சுந்தரலிங்கம் (ஓய்வுநிலை தபால் அதிபர்-இலங்கை), யோகராஜா (ஆசிரியர் - யா. எழுதுமட்டுவாழ் ஸ்ரீகணேசா வித்தியாலயம்)¸ சிவஜோதி (கனடா), லதா (இத்தாலி), அனுசா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜசிதலா (அவுஸ்திரேலியா), ராஜாராம் (பொறியலாளர் - அவுஸ்திரேலியா), ஜதிகேசன் (இலங்கை காப்புறுதிக்கூட்டுத்தாபனம் - சாவகச்சேரி), சரண்ஜா (இலங்கை வங்கி – சாவகச்சேரி), சுஜிதா (இத்தாலி), ராஜிவ் (இத்தாலி), கஜிதா (ஆசிரியை – யா.வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை), காண்டீபன் (யா.சென்ஜோன்ஸ் கல்லூரி - பழைய மாணவன), ரஜீவனா (பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் செயலகம் - தென்மராட்சி. இலங்கை), கஜரூபன் (பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் செயலகம் - தென்மராட்சி), தினேஸ் (பொறியலாளர் - சிங்கப்பூர்), விதுசன் (மருத்துவபீட இறுதி வருட மாணவன் - யாழ்ப்பாணம்), வேணுசன் (கனடா), வைஸ்ணவி (மாணவி – யாழ் .யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி), மயூரன் (கனடா), மீனுசா (கனடா), தணிகேசன் (அவுஸ்திரேலியா), தாரணி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
மதுமிதா (அவுஸ்திரேலியா), ஹரிஸ்ராம் (அவுஸ்திரேலியா), அக்சிகா (இத்தாலி), அபர்ணிகா (இத்தாலி), அபிஸ்கா (இலங்கை), அஸ்நிதா (இலங்கை) ஆகியோரின் பாசமிகு பூட்டனாரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 05.03.2019 அன்று செவ்வாய்க்கிழமை முற்பகல்11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 1.00மணிக்கு பூதவுடல் ஈச்சங்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார்¸உறவினர்¸நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
தொடர்புகளிற்கு
சிறிகாந்தன் (மகன் - இத்தாலி) 0773545415
பத்மகாந்தன் (மகன் - கனடா) 0778457796
ஜீவகாந்தன் (மகன் - இத்தாலி) 0763541738
முருகானந்தன் (மகன் - அவுஸ்ரேலியா) 0763541738
ஜதிகேசன் (பேரன் - இலங்கை) 0776108420
விதுசன் (பேரன் - இலங்கை) 0777401076
தினேஸ் (பேரன் - சிங்கப்பூர்) 6591495536
தகவல்¸
குடும்பத்தினர்


Saturday, March 2, 2019

முருகேசு சரவணமுத்து



திரு முருகேசு சரவணமுத்து அவர்கள் உசனில் காலமானார்.  இவர் காலஞ்சென்ற செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும், சாந்தலக்குமி, ஸ்ரீகாந்தன், நந்தலக்குமி, தனலக்குமி, பத்மகாந்தன், ஜீவகாந்தன், முருகானந்தன் ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும் ஆவர்.  இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கும் அதே வேளை, அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அனைவருக்கும் அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.