கனடா வாழ் உசன் மக்களின் குளிர்கால ஒன்றுகூடலான "உசன் உறவுகள்" எதிர்வரும் January மாதம், 26 ஆம் திகதி 2019 ஆம் ஆண்டு சனிக்கிழமை இடம்பெற்ற உள்ளது. 3300 McNicoll Ave, Scarborough, ON M1V 5J6, Canada என்ற முகவரியில் அமைந்திருக்கும் Baba Banquet Halls & Catering இல் இந்த நிகழ்வு இடம்பெறும்.
இந்த நிகழ்வில் உறவுகளை மகிழ வைக்கும் நிகழ்வுகளை வழங்க விரும்புவோர் செயலாளர் விஜயகுமாரி புஷ்பராஜா அவர்களுடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டுகிறோம். 416-845-8795 என்ற தொலைபேசி இலக்கத்திலோ அல்லது secretary@usan.ca என்ற மின்னஞ்சல் முகவரியிலோ January 10, 2019 இற்கு முன்பாக உங்கள் பங்களிப்பை உறுதிசெய்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த நிகழ்வுக்கு அனுசரணை செய்ய விரும்புவோரும் செயலாளருக்கு அறியத் தரலாம். தொழில் அதிபர்களோடு தனி நபர்களையும் நிழச்சிக்கு அனுசரணை செய்ய முன்வருமாறு தயவாய் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த நிகழ்விலே 2015 - 2018 இடைப்பட்ட ஆண்டுகளில் தங்கள் பட்டப் படிப்பை முடித்த பட்டதாரிகளுக்கு மதிப்பளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே உங்கள் தகவல்களை செயலாளருக்கோ அல்லது திருமதி சாந்தி சிவானந்தனுக்கோ உடனே தெரியப்படுத்துமாறு பட்டதாரிகளை அன்போடு வேண்டுகிறோம். சாந்தி சிவானந்தனுடன் 905-554-2014 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளலாம்.
இன்னுமொரு சிறப்பு நிகழ்வாக ஓய்வு பெற்ற வயதுவந்தவர்களுக்கு மதிப்பளிக்கப்பட உள்ளது. இவர்கள் குறித்த தகவல்களையும் செயலாளரோடு அல்லது சாந்தி சிவானந்தனோடு பகிர்ந்து கொள்ளவும்.
"உசன் உறவுகள்" நிகழ்வை மேலும் சிறப்பாக்க உங்களின் ஆலோசனைகளை வேண்டி நிற்கிறோம். நிர்வாக சபை உறுப்பினர் ஒருவரோடு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளலாம்.
இந்த நிகழ்வில் கலந்துகொள்ள ஒன்றிய அங்கத்தவர்களுக்கு மேலதிக கட்டணம் எதுவுமில்லை. அங்கத்தவர்கள் அல்லாதோரிடமிருந்து 4 பேர் கொண்ட குடும்பமொன்றுக்கு $100.00 உம் தனி ஒருவருக்கு $30.00 உம் கட்டணமாக வாங்கப்படும்.
"உசன் உறவுகள்" நிகழ்வில் கலந்துகொண்டு மகிழுமாறு உசன் மக்களையும், அயற்கிராம மக்களையும், உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தோடு தொடர்புள்ளவர்களையும் அன்போடு அழைக்கிறது உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா.
"USAN URAVUKAL"
The annual Winter get together of Usan people in Canada, "USAN URAVUKAL" will be held on Saturday, January 26, 2019 at Baba Banquet Halls & Catering located at 3300 McNicoll Ave, Scarborough, ON M1V 5J6, Canada.
Anyone wishes to perform at this event, please contact secretary Vijayakumary Pushparajah at 416-845-8795 or email secretary@usan.ca. Please do so before January 10, 2019.
We are looking for Sponsors. Anyone interested please inform Secretary. Sponsors can be Business owners or individuals.
The Executive committee has decided to honour the University graduates in this event who graduated between 2015 and 2018. Another special item in this event is honouring the retirees. We kindly request the graduates to contact the Secretary or Mrs. Shanthi Sivananthan with their details. Also give the information about anyone who you know as the retiree.
We are looking for inputs on how to make "USAN URAVUKAL" a better event. Please share your suggestions with any member of the Executive committee.
As far as the entrance fee goes there is no additional fee for the members. A fee of $100.00 per maximum of 4 member family or $30.00 per individuals from non members will be collected at the entrance. Please oblige to this request.
United People Association of Usan in Canada cordially invites all Usan people, guests from neighboring villages and who are connected to Usan Ramanathan Makaa Viththiyaalayam to this event.