அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Sunday, September 23, 2018

உசன் கிராமத்துக்கு ஒளியேற்றிய கனடா வாழ் .....திரு. வசந்தன்

தாயக பூமியில் தற்போதைய பாதுகாப்பற்ற சூழல் காரணமாக மக்கள் இரவு நேரங்களில் அச்சத்துடனே காலத்தைக் கழிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த விடையத்தை ஊர் மக்கள் உணர்ந்து உசன் கிராமத்தைப் பாதுகாக்க உதவி  கோரினர். இந்த நிலைமையை நன்கு உணர்ந்த ஊர் பற்றாளன் கனடா "New Market Taxi & Limo " நிறுனவனத்தின் அதிபர் திரு. நடராஜா வசந்தன் அவர்கள் உசன் கிராமத்துக்கு ஒளியேற்றியுள்ளார்.
நீண்டகால கடின உழைப்பின் மத்தியில்  அதிகாரிகளின் மற்றும் உரிய திணைக்களங்களின் அனுமதியுடனும்,
எமது பிரதேசசபை உறுப்பினர் திரு. ரூபன் அவர்களின் அதீத முயற்சியிலும், உசன் இளைஞர்களின் ஒத்துழைப்புடனும் உசன் கிராமம் எங்கும் மின்விளக்கு பொருத்தப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளது.
பெருமளவு பணச்செலவை தனித்து ஏற்று இந்த சிறந்த சேவையை மக்களுக்கு வழங்கி இரவு நேரத்தில் நிம்மதி  கொள்ளவைத்த தொழில் அதிபர் திரு. நடராஜா வசந்தன் அவர்களுக்கு. அனைத்து உசன் மக்கள் சார்பிலும் நன்றி.
உசன் மக்களின் ஒற்றுமையுடன் கூடிய இந்த செயல் திட்டம் உயர் அரச அதிகாரிகளுக்கும், அரசியல் வாதிகளுக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
உசன் கிராமம் இரவு நேரத்தில் மின்னொளியில் இருப்பதால் அயல் கிராம மக்கள் கூட இரவு நேரங்களில் பயமின்றி உசன் ஊரின் ஊடக பயணம் செய்வதாக மக்கள் பெருமை கொள்கின்றனர். இந்த சிறப்பான திட்டத்துக்கு மின்சாரசபையும் தமது பங்களிப்பை தந்துள்ளது.

இந்த வீதிக்கு மின்விளக்கேற்றும் திட்டம் சிறப்பாக நிறைவேற திரு,வசந்தன் அவர்களின் தோளோடு நின்று பின்வாங்காமல் உதவிய அனைத்து ஊர் மக்களுக்கும், அமைப்புகளுக்கும், மத தலைவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் தெரிவித்து கொள்கிறது.







Tuesday, September 18, 2018

உசனில் இருந்து உருவாகிய புதிய சமாதான நீதவான் விஜயரத்தினம்....

 உசன் இராமநாதன் மகா வித்தியாலாய பழைய மாணவனும் உசனை  சேர்ந்த  திரு  திருமதி  ஒப்பிலாமணி அவர்களின் மகனுமான திரு.ஒ விஜயரத்தினம் (சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் முன்னாள் ஆசிரியர்)அவர்கள் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்திய பிரமாணம்  செய்துகொண்டார் .
கடந்த 29/08/2018 அன்று யாழ்மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதி அ. பிறேம்சங்கர் முன்னிலையில் தனது பதவியை ஏற்றுக்கொண்டார் . திரு.ஒ. விஜயரத்தினம் அவர்கள் . உசன் இராமாநாதன் மகா வித்தியாலயத்தில் கல்விகற்றதுடன் . உசனில் பல மாணவர்களுக்கு கல்வி  புகட்டியுள்ளார் . தற்போது யா/நெல்லியடி மத்தியகல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றி வருகிறார்.
புதிய அகில இலங்கை சமாதான நீதவானாக பதவியேற்ற திரு.விஜயரட்ணம் அவர்களுக்கு உசன் ஐக்கியமக்கள்  ஒன்றியம் சார்பாகவும். அனைத்துலக உசன் மக்கள் சார்பாகவும் எமது பாராட்டுகளும்
வாழ்த்துக்களும்





Friday, September 14, 2018

உசனில் இருந்து உதித்த புதிய பின்னணி பாடகி .. திலக்‌ஷினி

மட்டக்களப்பு பொத்துவில் ஸ்ரீஆலயடிப்பிள்ளையார், பத்திரகாளியம்மன் மீது பாடப்பெற்ற "பக்திப்புகழ் பாமாலை" இறுவட்டின் வெளியீடு நேற்று ஆலயத்தில் நடைபெற்றது .
இந்த இசை பாடல்களின் முக்கிய பின்னணி குரல் பாடகியாக உசனை சேர்ந்த செல்வி. திலக்‌ஷினி விமலதர்சன் அவர்கள் தனது இசை திறமையை வெளிப்படுத்தி அனைவரின் பாராடடையும் பெற்றுள்ளார் .
திரு.அ.செல்வகுமார் அவர்களின் பின்னணி இசையில் உருவான இந்த பாடல்களில்  சிவஸ்ரீ பசுபதி சிவனேசதுரைக்குருக்கள் ,செல்வி. திலக்‌ஷினிவிமலதர்சன் ஆகியோர் குரலிசை வழங்கியுள்ளார்
தனது இனிய குரல் வளத்தினாலும் இசை திறமையாலும் மிக சிறிய வயதில் பாடகியாக தெரிவான
செல்வி. திலக்‌ஷினி உசன் திரு திருமதி .தாமோதம்பிள்ளை ஆசிரியர்  அவர்களின் பேத்தியும் . சங்கீத ஆசிரியை சிவசாந்தினி விமலதர்ஷன்(மட்டகளப்பு மாவட்ட  சங்கீத ஆசிரிய ஆலோசகர்) ஆகியோரின் புதல்வியுமாவார்.
செல்வி. திலக்‌ஷினி இசை துறை மேற்படிப்புக்காக யாழ் இராமாநாதன் கல்லூரிக்கு தெரிவாகியுள்ளார் .
உசனில் உதித்த புதிய பின்னணி பாடகி செல்வி. திலக்‌ஷினிக்கு  பாராட்டுகளை தெரிவிப்பதுடன்  இசை துறையில் இன்னும்  சாதிக்க உசன் மக்கள் சார்பில் கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.
புலம் பெயர் தேசங்களின் உள்ள உசன் மக்கள் இந்த பாடல்களை கேட்டு திலக்‌ஷினிக்கு இசை ஆதரவு வழங்க வேண்டுகிறோம் .





Saturday, September 8, 2018

செல்வி மதுமிதா பாஸ்கரன்

பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி அதிபர், பரதகலா வித்தகர், ஸ்ரீமதி சியாமா தயாளன் அவர்களின் மாணவியும், திரு திருமதி பாஸ்கரன் சந்தியா தம்பதிகளின் மகளுமான  செல்வி மதுமிதா பாஸ்கரன் அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்றம் சனிக்கிழமை, September 15, 2018 அன்று 5183 Sheppard Avenue E, Scarborough, Ontario, M1B 5Z5, Canada என்ற முகவரியில் அமைந்திருக்கும் Chinese Cultural Center இல் இடம்பெற உள்ளது.

மாலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை சிற்றுண்டிகள் வழங்கப்படும்.  அரங்கேற்றம் சரியாக மாலை 5:30 மணிக்கு ஆரம்பமாகும்.

இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு ஸ்ரீமதி சியாமா தயாளன் உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறார்.



செல்வி மதுமிதா பாஸ்கரன் அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்றம் சிறப்பாக நடைபெறவும், அவர் நடனத் துறையில் சிறந்து விளங்கவும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

Bhaarati School of Indian Classical Dance proudly presents an arrangetram of Mathumitha Baskaran on September 15, 2018. Refreshments will be served between 4:30 p.m. and 5:30 p.m..  Performance will start at 5:30 p.m.  Please take this as a personal invitation and bless her with your presence.