பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி அதிபர், பரதகலா வித்தகர், ஸ்ரீமதி சியாமா தயாளன் அவர்களின் மாணவிகளும், திரு திருமதி சிவகுமார் இளஞ்செல்வி தம்பதிகளின் மகள்களுமான செல்விகள் அபிராமி சிவகுமார், வைஷ்ணவி சிவகுமார் ஆகியோரின் பரத நாட்டிய அரங்கேற்றம் சனிக்கிழமை, August 11, 2018 அன்று 5183 Sheppard Avenue E, Scarborough, Ontario, M1B 5Z5, Canada என்ற முகவரியில் அமைந்திருக்கும் Chinese Cultural Center இல் இடம்பெற உள்ளது.
மாலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை சிற்றுண்டிகள் வழங்கப்படும். அரங்கேற்றம் சரியாக மாலை 5:30 மணிக்கு ஆரம்பமாகும்.
இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு ஸ்ரீமதி சியாமா தயாளன் உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறார்.
செல்விகள் அபிராமி சிவகுமார், வைஷ்ணவி சிவகுமார் ஆகியோரின் பரத நாட்டிய அரங்கேற்றம் சிறப்பாக நடைபெறவும், அவர் நடனத் துறையில் சிறந்து விளங்கவும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.