அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Wednesday, August 29, 2018

திரு ஆனந்தம் முகுந்தன்

யாழ். உசனைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bestwig ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தம் முகுந்தன் அவர்கள் August 26, 2018 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா ஆனந்தம், மற்றும் நல்லம்மா ஆனந்தம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கிறிஸ்டி நவரட்ணம் - லூட்ஸ் மேரி நவரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

டொறிஸ் காமினி (ஜெர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,

டெனி, லேனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வசந்தி (இலங்கை), காலஞ்சென்ற கண்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜலிங்கம் (இலங்கை), ராகினி, திரேசா காயத்ரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜோர்ஜ் அவர்களின் அன்புச் சகலனும்,

மயூரன், மாதங்கி, நிலக்ஸன், நிலக்ஸி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை September 2, 2018, மாலை 5 மணி முதல் —  மாலை 9 மணி வரை
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை September 3, 2018, காலை 8 மணி முதல் — காலை 9 மணி வரை
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
திகதி: திங்கட்கிழமை September 3, 2018, காலை 9:30 மணி முதல் — பகல் 11:30 மணி வரை
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
திகதி: திங்கட்கிழமை September 3, 2018, பி. ப. 12 மணி முதல்  — பி. ப. 12:30 மணி வரை.
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

ராஜலிங்கம் (மைத்துனர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777393467

மாதங்கி (மருமகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772901721

அன்னலிங்கம் (மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447984105797

றொபின் — கனடா
செல்லிடப்பேசி: +14169104949

கிரிசா — கனடா
செல்லிடப்பேசி: +14169397458

தயா — கனடா
தொலைபேசி: +19052526540

முகுந்தன் அவர்களின் மறைவால் துயருற்றிருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை அன்னாரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறது.

(இவ்வறிவித்தல் www.kallarai.com என்ற இணையத் தளத்திலிருந்து பிரதி செய்யப்பட்டது.)



Monday, August 13, 2018

பரத நாட்டிய அரங்கேற்றம்

செல்வி தமிதா சுதாகரன்
திரு. திருமதி சுதாகரன் தம்பதிகளின் மகளும், நாட்டிய கலாமன்றம் அதிபர் ஸ்ரீமதி சாந்தகுமாரி செல்வநாயகம் அவர்களின் மாணவியுமான செல்வி தமிதா சுதாகரன் அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்றம் சனிக்கிழமை, August 25, 2018 அன்று 1785 Finch Avenue West, North York, Ontario, Canada என்ற முகவரியில் அமைந்திருக்கும் York Woods Library Theatre இல் மாலை 5:30 மணிக்கு இடம்பெற உள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு திரு. திருமதி சுதாகரன் தம்பதியினர் உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறார்கள்.

செல்வி தமிதாவின் பரத நாட்டிய அரங்கேற்றம் சிறப்பாக நடைபெறவும், அவர் நடனத் துறையில் சிறந்து விளங்கவும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

"Natiyakalamandram"
proudly presents Arangetram of Damita Suthakaran, Disciple of Srimathi Shanthakumari Selvanayagam, on August 25th , 2018 at York Woods Library Theatre located at 1785 Fihch Avenue West, North York, Ontario,  Canada. Please take this as a personal invitation and bless Damita with your presence.

United People Association of Usan in Canada congratulates Damita and wish her a very bright future.


Thursday, August 9, 2018

பரத நாட்டிய அரங்கேற்றம்


பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி அதிபர், பரதகலா வித்தகர், ஸ்ரீமதி சியாமா தயாளன் அவர்களின் மாணவிகளும், திரு திருமதி சிவகுமார் இளஞ்செல்வி தம்பதிகளின் மகள்களுமான  செல்விகள் அபிராமி சிவகுமார், வைஷ்ணவி சிவகுமார் ஆகியோரின் பரத நாட்டிய அரங்கேற்றம் சனிக்கிழமை, August 11, 2018 அன்று 5183 Sheppard Avenue E, Scarborough, Ontario, M1B 5Z5, Canada என்ற முகவரியில் அமைந்திருக்கும் Chinese Cultural Center இல் இடம்பெற உள்ளது.

மாலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை சிற்றுண்டிகள் வழங்கப்படும்.  அரங்கேற்றம் சரியாக மாலை 5:30 மணிக்கு ஆரம்பமாகும்.

இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு ஸ்ரீமதி சியாமா தயாளன் உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறார்.


செல்விகள் அபிராமி சிவகுமார், வைஷ்ணவி சிவகுமார் ஆகியோரின் பரத நாட்டிய அரங்கேற்றம் சிறப்பாக நடைபெறவும், அவர் நடனத் துறையில் சிறந்து விளங்கவும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.