அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Thursday, June 28, 2018

பொதுக் கூட்டமும் ஒன்றுகூடலும்
General Meeting and Get Together

அன்பார்ந்த உசன் மக்களே!
​​


உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் ஆண்டுப் பொதுக் கூட்டம் சனிக்கிழமை, June 30, 2018 அன்று
​​
1555 Neilson Rd, Scarborough, ON M1B 5Z7 என்ற முகவரியில் அமைந்திருக்கும் Neilson Park இல் மதியம் 12 மணி அளவில் இடம்பெறும் என்பதை நினைவுபடுத்துகிறோம்.  இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்து உங்கள் பங்களிப்பை வழங்குமாறு வேண்டுகிறோம்.

உசன் மக்கள் சார்பாக உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா ஒழுங்கு செய்துள்ள கோடைகால ஒன்றுகூடல் பொதுக் கூடத்தைத் தொடர்ந்து இடம்பெறும்.  இந்த நிகழ்விலும் கலந்துகொண்டு மகிழ்ந்திருக்க உங்கள் அனைவரையும் மீண்டும் அன்போடு அழைக்கிறோம்.

இந்த நிகழ்வுகளுக்கு வரும்போது உங்கள் குடும்பத்தோடு மட்டுமல்லாது உங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்து வருமாறு வேண்டுகிறோம்.

நன்றி.

நிர்வாகசபை
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா
++++++++++++++++++++++++++++++++++++++++++

Dear Usan People,


We would like to remind you all that the General meeting of United People Association of Usan in Canada will be held at approximately 12 noon on Saturday, June 30, 2018 at Neilson Park located at
1555 Neilson Rd, Scarborough, ON M1B 5Z7
.  We request you to attend the general meeting and provide your feedback.


Get together will follow the general meeting.  We cordially invite you to participate in this special event with not only your family but also with your relatives and friends.


Thank you.

Executive Committee

United People Association of Usan in Canada



Friday, June 15, 2018

"பரத சமன்வயம்"


பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி பெருமையுடன் வழங்கும் "பரத சமன்வயம்" நிகழ்வு June மாதம் 24 ஆம் திகதி ஞாயிறுக்கிழமை அன்று இடம்பெறவுள்ளது.  1355 HARWOOD AVE N, AJAX, ON L1T 4G8, Canada என்ற முகவரியில் அமைந்திருக்கும் J CLARKE RICHARDSON COLLEGIATE இல் சரியாக மாலை 4:30 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமாகும். இலவச அனுமதியோடு நடத்தப்படும் இந்த வருடாந்த நிகழ்வு பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி அதிபர், பரத கலா வித்தகர், நாட்டிய சிரோன்மணி திருமதி சியாமா தயாளன் அவர்களின் தயாரிப்பு, நெறியாள்கையில் இடம்பெற உள்ளது.  இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்க நீங்கள் அனைவரும் அன்போடு அழைக்கப்படுகிறீர்கள்.

இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வாழ்த்துகின்றது. 


Tuesday, June 12, 2018

கனடா வாழ் விடத்தற்பளை மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வு!

எதிர்வரும் ஆனி மாதம் 16 ஆம் திகதி 2018, சனிக்கிழமை, காலை 10:30 மணியில் இருந்து மாலை 7 மணிவரை, 100 Silver Springs Blvd, Toronto, Ontario, M1V 1S4 என்ற முகவரியில் அமைந்திருக்கும் L'Amoreaux Sports Complex - Area A & Shelter 80 இல் விடத்தற்பளை மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வு இடம்பெற இருக்கின்றது.  விடத்தற்பளை மக்கள், விடத்தற்பளைக் கமலாசனி வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள், மற்றும் விடத்தற்பளையின் அயல் கிராம உறவினர்கள், நண்பர்கள், விடத்தற்பளை நலன் விரும்பிகள் அனைவரையும் வருகை தந்து இந்நிகழ்வினைச் சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கிறார்கள் விடத்தற்பளை மக்கள் ஒன்றியம் - கனடா.

இந்த நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வாழ்த்துகிறது.   உசன் மக்களையும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.

உசன் மக்களின் கோடை கால ஒன்றுகூடல் சனிக்கிழமை, June 30, 2018 அன்று Neilson Park இல் நடைபெறும் என்பதை நினைவுபடுத்துகிறோம்.  இந்த நிகழ்வுக்கு விடத்தற்பளை உறவுகளும் அன்போடு அழைக்கப்படுகிறார்கள்.


Sunday, June 10, 2018

திருமதி பசுபதிஅம்மா வேலாயுதபிள்ளை




உசனைச் சேர்ந்த திருமதி உதயகுமாரி தயாபரன் (உதயா) அவர்களின் மாமியார் காலமானார்.

யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட 
பசுபதிஅம்மா வேலாயுதபிள்ளை அவர்கள் 07-06-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை(முன்னாள் சிறைச்சாலை உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான ஜெயராஜா, ஜெயராணி மற்றும் மகேந்திரன், பத்மராணி(ராசாத்தி), சந்திரயோகினி(ரயினி), தயாபரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சரஸ்வதிஅம்மா, மகேஸ்வரிஅம்மா, காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குணரத்தினம், ரேணுகாதேவி, நித்தியானந்தம், சரவணமுத்து, உதயகுமாரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஜெயந்தன், அபிராமி, கோபு, பாபு, பிரபு, ரமணன், ராகவன், ரமணி, கிருஷ்ணா, கணேன், அகிலா, அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ரேயா, ஏரன், மீரா, விஷ்ணு, மைலி, மாறன், அஞ்சலி, ஜெனனி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 10/06/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine, Avenue Markham, ON L3R 5G1, Canada 

பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 11/06/2018, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1, Canada 

கிரியை
திகதி: திங்கட்கிழமை 11/06/2018, 09:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1, Canada 

தகனம்
திகதி: திங்கட்கிழமை 11/06/2018, 11:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Avenue, Gormley, ON L0H 1G0, Canada 

தொடர்புகளுக்கு
தயாபரன் — கனடா
தொலைபேசி: +14162990836

அபிராமி — கனடா
செல்லிடப்பேசி: +19052390419

ராகவன் — கனடா
தொலைபேசி: +16474000963

இந்த அறிவித்தல் www.kallarai.com என்ற இணையத் தளத்திலிருந்து பிரதி செய்யப்பட்டது.

அன்னாரின் பிரிவால் துயருறும் அனைவருக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.


Sunday, June 3, 2018

வருடாந்தப் பொதுக்கூட்டமும், ஒன்றுகூடலும்


உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வருடாந்தப் பொதுக் கூட்டத்துக்கும், கோடை கால ஒன்றுகூடலுக்கும் உங்களை அன்போடு அழைக்கிறது.

திகதி: சனிக்கிழமை, June 30, 2018.

ஆரம்பநேரம்: காலை 11 மணி அளவில். (நிகழ்ச்சி ஆரம்பமாவதற்குப் போதிய மக்கள் வந்தவுடன் ஆரம்பமாகும்.)

இடம்:  Neilson Park (1555 Neilson Rd, Scarborough, ON M1B 5Z7, Canada)
Closest intersection: Neilson Road and Finch Avenue.

முதலில் பொதுக் கூட்டமும், அதனைத் தொடர்ந்து உணவுப் பரிமாற்றமும், விளையாட்டுப் போட்டிகளும் இடம்பெறும்.

பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஒன்றியத்தின் செயற்பாடுகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதுடன், அதன் வளர்ச்சிக்கான ஆலோசனைகளை வழங்குமாறு உசன் மக்கள் அனைவரையும் அன்போடு வேண்டுகிறோம்.

இந்த நிகழ்வுக்கு அனுசரணை வழங்க விரும்புவோர் நிர்வாகசபையோடு தொடர்பு கொள்ளவும்.

இந்த நிகழ்வில் தொண்டர்களாகச் சேவையாற்ற விரும்புவோரும் தயவுசெய்து நிர்வாகசபையோடு  தொடர்பு கொள்ளவும்.

நன்றி.

பாஸ்கரன் சுப்பிரமணியம்
தலைவர்,
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா


General Meeting and Summer Get Together

United People Association of Usan in Canada cordially invites you to it's annual general meeting and Summer get together.

Date:  Saturday, June 30, 2018.

Starting time:  11 a.m. (Event will start as soon as enough people arrive.)

Venue: Neilson Park (1555 Neilson Rd, Scarborough, ON M1B 5Z7, Canada)
Closest intersection: Neilson Road and Finch Avenue.

General meeting will take place first followed by food and sports meet.

You are requested to attend the general meeting and provide your opinion on the activities of the association.  Also give your suggestions on what direction this association should take in the future.

Anyone who are interested in sponsoring this event, please contact the Executive committee.

We are always looking for volunteers to assist in this event.  Interested individuals please contact the Executive committee.

Thank you.

Baskaran Subramaniam
President,
United People Association of Usan in Canada.