அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Saturday, April 7, 2018

வாழ்த்துக்கள் வக்சலன்


உசன் துஷ்யந்தி - மிகுந்தனின் மகனும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவனுமான மிகுந்தன் வக்சலன் ஜப்பான் பயணமாகிறார். கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த (உ.த.) உயிரியல் பிரிவில் மூன்று பாடங்களிலும் திறமைச்சித்தி பெற்று மாவட்ட, மாகாண நிலையில் முதலாம் இடத்தினையும், தேசிய ரீதியில் 9ஆம் இடத்தையும் பெற்றுக்கொண்டவர் வக்சலன் இவர் சதுரங்கம், பூப்பந்து, கர்நாடக சங்கீதம், கணித ஒலிம்பியாட் போன்றவற்றில் திறமை காட்டிய மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.


கல்வி அமைச்சு தெரிவு செய்து இளையோர் விஞ்ஞான நிகழ்ச்சித் திட்ட “சக்குறா விஞ்ஞானம்” என்னும் திட்டத்தினூடாக யப்பான் விஞ்ஞான தொழில்நுட்ப நிறுவனத்தின் அனுசரணையுடன் யப்பான் சென்று அங்குள்ள விஞ்ஞான தொழில்நுட்பவியல் விடயங்கள் பற்றியும் அறிவியல் விடயங்கள் பற்றியும் அவர்களது வாழ்க்கை முறை, கலை,கலாச்சார விடயங்கள் பற்றியும் அறிந்து கொள்ள செல்லவுள்ளார். இம்முறை இலங்கை, இந்தியா, பங்களாதேஸ், கஜகஸ்தான், மாலைதீவு, இந்தோனேசியா, ஆகிய நாடுகள் பங்குபற்றுவது சிறப்பான விடயமாகும். வடமாகாணத்தில் இருந்து செல்லும் ஒரே ஒரு மாணவன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வக்சலனை உசன் இராமநாதன் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கமும், உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவும் வாழ்த்துகின்றன.